ஆசிரிய உதவியாளர்களை அடுத்த வருடம் 50 ஆயிரம் அரசசேவையில்

சனி, 30 நவம்பர், 2019

பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வாக அடுத்த 2020ஆம் ஆண்டில் சகல பாடசாலைகளிலும் ஆரம்பப் பிரிவுகளுக்காக ஆசிரிய உதவியாளர்கள் 50 ஆயிரம் பேர் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம் உயர்கல்வி தொழிநுட்ப புத்தாக்க அமைச்சர் பந்துல குணவர்த்த தெரிவித்துள்ளார்.அத்துடன் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைக்கு நடைமுறைச் சாத்தியமான வேலைத் திட்டம் அமுல்படுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.நேற்றையதினம் ஹோமாகம ஆட்டிக்கல கனிஷ்ட வித்தியாலயத்தில் புனரமைக்கப்பட்ட இரு மாடிக் கட்டடத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில். அமைச்சர் உரையாற்றியபோதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.


READ MORE - ஆசிரிய உதவியாளர்களை அடுத்த வருடம் 50 ஆயிரம் அரசசேவையில்

பொலிஸாரிடம் யாழ்-மன்னார் வீதியில் மாட்டிய 200 கிலோ கேரளக் கஞ்சா

சனி, 23 நவம்பர், 2019

யாழ்ப்பாணம் – மன்னார் பிரதான வீதி, மாந்தை சந்தியில் வைத்து கேரள கஞ்சா பொதிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மன்னார் மாவட்ட பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு.22.11.19. நேற்று இரவு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் 
விரைந்து செயற்பட்ட போதைப்பொருள் 
தடுப்பு பிரிவினர் கேரள கஞ்சா பொதிகளை மீட்டுள்ளனர்.வாகனத்தில் மீன் ஏற்றிச் செல்லும் விதத்தில் றெஜிபோம் பெட்டிகளில் மறைத்து 
வைத்துக் கொண்டு செல்லப்பட்ட நிலையிலே, 200 கிலோ 165 கிராம் எடை கொண்ட குறித்த கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.மீட்கப்பட்ட கேரள கஞ்சா பொதிகள் சுமார் 2 கோடி ரூபாய் பெறுமதியுடையவை எனத் தெரியவருகின்றது. இதன்போது நானாட்டான் மற்றும் பேசாலையைச் சேர்ந்த 40 வயதுடைய இரண்டு சந்தேகநபர்கள் கைது
 செய்யப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.  கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா பொதிகள் மற்றும் வாகனம் மன்னார் மாவட்ட சிரேஸ்ட 
பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும், மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு, விசாரணைகளுக்கு 
உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - பொலிஸாரிடம் யாழ்-மன்னார் வீதியில் மாட்டிய 200 கிலோ கேரளக் கஞ்சா

வெள்ளவத்தையில் பாரிய தீ விபத்து…பிரபலமான இரு கடைகள் எரிந்து நாசம்

புதன், 13 நவம்பர், 2019

வெள்ளவத்தையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக இரு கடைகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பிரபல ஆடை விற்பனை நிறுவமான நோலிமிட்டிற்கு அருகாமையில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.றோயல் பேக்கரி உட்பட இரு கடைகள் எரிந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.தீப் பரவலுக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை. பொலிஸார் மேலதிக விசாரணைகளை 
மேற்கொண்டு வருகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - வெள்ளவத்தையில் பாரிய தீ விபத்து…பிரபலமான இரு கடைகள் எரிந்து நாசம்

பலாலியில் லிருந்து சென்னைக்கு வெள்ளி முதல் .Fits Air விமானசேவை ஆரம்பம்

வியாழன், 7 நவம்பர், 2019

யாழ்பலாலி சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னை விமான நிலையத்துக்கான விமான சேவையை பிற்ஸ் எயார் (Fits Air) இன்று (08.11.2019.வெள்ளிக்கிழமை) உத்தியோப்பூர்வமாக
 மேற்கொள்கின்றது.
இரத்மலானையில் இருந்து புறப்பட்ட விமானம் 8.30 மணிக்கு யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் தரையிறங்கியது. இங்கிருந்து சென்னைக்கு தனது பயணத்தை Fits Air விமானம் ஆரம்பித்தது .
இது யாழ்ப்பாணம் விமான நிலையத்திலிருந்து இடம்பெறும் முதலாவது விமான சேவையாக பதிவாகியுள்ளது. மீண்டும் இந்த விமானம் பி.ப.2.20 மணிக்கு சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் விமான நிலையத்திற்கு புறப்பட்டு மாலை 5.40 மணிக்கு இரத்மலானையைச்
 சென்றடையும்.
இதேவேளை சென்னையில் இருந்து யாழ் பலாலிக்கும் இடையிலான எலையன்ஸ் (Alliance Air) விமானசேவைகள் எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் ஆரம்பமாகிறது.
அதன்பின்னர் கூடிய விரைவில் இந்த சேவை, வாரத்தில் ஏழு நாட்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று அலையன்ஸ் எயர் நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - பலாலியில் லிருந்து சென்னைக்கு வெள்ளி முதல் .Fits Air விமானசேவை ஆரம்பம்

சிறார்களை கட்டணங்கள் எதுவும் இல்லாமல் இலவசமாக ஏற்றிய கௌசிகா எனும் பேரூந்து

வெள்ளி, 1 நவம்பர், 2019

 பாடசாலை முடிந்தவுடன்.01.11.2019. கனகராயன்குளத்திலிருந்து மாங்குளம் வரையில் செல்லும் மாணவர்கள் பேரூந்திற்காக காத்திருந்த வேளையில், வவுனியாவிலிருந்து யாழ்நோக்கி வந்த கௌசிகா எனும் பெயர் கொண்ட பேரூந்து.. கிட்டத்தட்ட 50ற்கும் மேற்பட்ட 
மாணவர்களை ஏற்றியது மட்டுமல்லாமல், எந்த மாணவரிடத்திலும் கட்டணம் அறவிடவில்லை.மழையில் சிக்காமலும் நேரகாலத்துடனும் மகிழ்ச்சியாக வீடு சென்றனர் மாணவர்கள்.குறுந்தூரம் என்று மாணவர்களை ஏற்றிச் செல்லாமல் தவிர்க்கின்ற பேருந்து
 சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு இவர்களின் முன்னுதாரணமான செயல்
நிச்சயம் ஒரு பாடம் புகட்டும்.இந்த பேரூந்து உரிமையாளர் மற்றும் பேரூந்தை செலுத்திய சாரதி மற்றும் நடத்துனருக்கும்
 வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவிப்பதுடன், இது போன்ற சமூகத்திற்கு முன்னுதாரணமான சேவைகளை 
தொடர்ந்தும் வழங்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும் என்பதையும் தெரிவித்துக்
 கொள்கிறோம்.

READ MORE - சிறார்களை கட்டணங்கள் எதுவும் இல்லாமல் இலவசமாக ஏற்றிய கௌசிகா எனும் பேரூந்து