நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. சமையல் எரிவாயுவின் விலை

திங்கள், 21 ஜூன், 2021

நாட்டில் சமையல் எரிவாயுவின் விலை உயர்த்தப்படாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.சமையல் எரிவாயுவின் விலையை உயர்த்த அனுமதிக்குமாறு எரிவாயு நிறுவனங்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது
சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்க அனுமதிப்பதில்லை என அமைச்சரவை துணைக்குழு தீர்மானித்துள்ளது.
அமைச்சர் மஹிந்த அமரவீர ஊடகங்களிடம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.அண்மையில் எரிபொருட்கள் விலை உயர்வு தொடர்பில் அரசாங்கம் மீது கடுமையான விமர்சனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

நிலாவரை.கொம் செய்திகள் >>>






READ MORE - நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. சமையல் எரிவாயுவின் விலை

நாட்டில் மோட்டார் வாகன விதிகளை மீறுபவர்களுக்கு புதிய தண்டப்பணம்

ஞாயிறு, 20 ஜூன், 2021

எதிர்காலத்தில் மோட்டார் வாகன விதிகளை மீறும் தவறுகளுக்கான தண்ட பணத்தை தம்மிடம் உள்ள கடன் அட்டை (கிரெடிட் கார்ட்) மூலம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது
சம்பந்தப்பட்ட இடத்தில் கடமையில் இருக்கும் பொலிஸாரினால் இந்த தண்டப்பணத்தை கடன் அட்டை மூலம் வசூலிப்பதற்கான தரவை பெற்றுக்கொள்வதற்கான முறை அறிமுகப்படுத்தப்படும் என்று பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர 
தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.பொலிஸ் தலைமையகத்தில் இது தொடர்பான இணையதள பணக் கொடுக்கல் வாங்கல் முறை உருவாக்கப்பட்டவுள்ளது.
வாகனம் சார்ந்த தவறுகளுக்காக சாரதிகளுக்கு புள்ளி வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்படும். அந்த புள்ளி குறையும் போது சில மாதங்களுக்கு அல்லது பல வருடங்களுக்கு வாகன அனுமதிப் பத்திரம் ரத்து செய்யப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்

நிலாவரை.கொம் செய்திகள் >>>


READ MORE - நாட்டில் மோட்டார் வாகன விதிகளை மீறுபவர்களுக்கு புதிய தண்டப்பணம்

நாட்டு மக்களுக்கு மீண்டும் 5ஆயிரம் ரூபா இவ்வாரம் முதல் ஆரம்பம்

செவ்வாய், 15 ஜூன், 2021

கொரோனா காரணமாக பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெரும் குடும்பங்களுக்கு 5,000 ஆயிரம் நிவாரண நிதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன் முதற்கட்டமாக 21 இலட்சம் குடும்பங்களுக்கு இந்நிவாரண நிதியை வழங்கும் நடவடிக்கை இவ்வாரம் முதல் முன்னெக்கப்படும் என சமுர்த்தி மற்றும் நுண்கடன் இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 5,000 ஆயிரம் ரூபா நிவாரண நிதி வழங்கல் குறித்து வினவிய போது அவர் இதனைத் தெரிவித்தார். நாடு தழுவிய ரீதியில் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கையினை அரசாங்கம் ஆரம்பத்தில் இருந்து பொறுப்புடன் செயற்படுத்தியுள்ளது.
கொவிட் வைரஸ் முதலாம் அலை ஏற்பட்ட போது மூன்று மாத காலமாக நாடு முழுமையாக முடக்கப்பட்டிருந்த போது சுமார் 50 இலட்சம் குடும்பங்களுக்கு 5,000 ஆயிரம் ரூபா நிவாரண நிதி வழங்கப்பட்டது. இதே போன்று இரண்டாம் அலையின் போது பொருளாதார மட்டத்தில் பாதிக்கப்பட்ட 50 இலட்சம் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க 25 பில்லியன் நிதியும், கடந்த ஏப்ரல் மாதம் சமுர்த்தி பயனாளர்கள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட 30 இலட்சம் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க 12 பில்லியன் நிதி
 செலவிடப்பட்டுள்ளன
புதுவருட கொவிட் கொத்தணி தாக்கத்தினை தொடர்ந்து சமுர்த்தி பயனளார்கள் , மற்றும் தெரிவு செய்யப்பட்ட 60 இலட்சம் குடுமபங்களுக்கு நிவாரணம் வழங்க 30 பில்லியன் நிதி முதற்கட்டமாக ஒத்துக்கிடப்பட்டது. 5,000 ஆயிரம் ரூபா நிவாரணம் வழங்கும் நடவடிக்கை கடந்த 2 ஆம் திகதி தொடக்கம் நாடுதழுவிய மட்டத்தில் முன்னெடுக்கப்படுகின்றனசுமார் 30 இலட்சம் குடும்பங்களுக்கு இதுவரையில் 5,000 ஆயிரம் ரூபா நிவாரண நிதி 
வழங்கப்பட்டுள்ளது. மேலும் புதுவருட கொவிட் கொத்தணி பரவல் காரணமாக பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த 
வருமானம் சமுர்த்தி பயனாளர்கள் தவிர்ந்த குடும்பங்களுக்கு 5,000 ஆயிரம் ரூபா நிவாரண நிதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
அதன்படி முதற்கட்ட தரப்படுத்தலின் பிரகாரம் சுமார் 21 இலட்சம் குடும்பங்கள் இந்நிதியை பெற தகுதி பெற்றுள்ளதாகவும் அவர் 
மேலும் தெரிவித்தார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

READ MORE - நாட்டு மக்களுக்கு மீண்டும் 5ஆயிரம் ரூபா இவ்வாரம் முதல் ஆரம்பம்

நாட்டில் எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் வெளிவந்த முக்கிய தகவல்

வெள்ளி, 11 ஜூன், 2021

எரிபொருளுக்கான விலையை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.இவேளை, எரிபொருள் விலை அதிகரிப்பை அமுலாக்கும் தினம் குறித்து நிதி அமைச்சு
 மற்றும் எரிசக்தி 
அமைச்சு ஆகியன இணைந்து தீர்மானிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாழ்க்கைச் செலவுக்கான அமைச்சரவை உபகுழு இதற்கு அனுமதி வழங்கியுள்ளதாகவும் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில 
தெரிவித்துள்ளார்.
நாட்டிற்குள் கொரோனா பரவல் காணப்படுகின்றமையினால், எரிப்பொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்படும் திகதியை சரியாக கூற முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். அவ்வாறு திகதி அறிவிக்கப்படும் பட்சத்தில், எரிப்பொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாக மக்கள் ஒன்று திரளக்கூடும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா அரசாங்கம் தொடர்ச்சியாகவே அதிக விலையில் எரிப்பொருளை கொள்வனவு செய்து, குறைந்த விலையில் அதனை மக்களுக்கு வழங்கி வந்ததாகவும் வர் கூறியுள்ளார். இதனால், இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனத்திற்கு 2020ஆம் ஆண்டு 33,100 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர்
 தெரிவிக்கின்றார்.
அதனால், குறித்த நிறுவனம் கடனை மீள செலுத்திக் கொள்ள முடியாது, மிகுந்த சிரம நிலைமையை எதிர்நோக்கியுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார். இதனால், எரிப்பொருள் விலையில் திருத்தத்தை ஏற்படுத்த வாழ்க்கை செலவு தொடர்பிலான அமைச்சரவை இணைக் குழு தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா பெற்றோலிய வளத்துறை அமைச்சர் உதய கம்மன்பில
 குறிப்பிட்டுள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



READ MORE - நாட்டில் எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் வெளிவந்த முக்கிய தகவல்

நாட்டில் உடனடியாக 117 என்ற இலக்கத்தை தொடர்புகொள்ளுங்கள்

இலங்கையில் அண்மைக் காலங்களில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தால் உயிர் மற்றும் சொத்துக்களை இழந்தோருக்கு இழப்பீடு பெறுவதில் ஏதேனும் சிக்கல் இருப்பின் 117 என்ற இலக்கத்திற்கு 
அல்லது குறித்த
மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கு அழைப்பு விடுக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
குறித்த மாவட்டத்தின் மாவட்ட செயலாளரினால் இழப்பீட்டுத் தொகை தீர்மானிக்கப்படும்.அந்த இழப்பீட்டுத் தொகையை வழங்குவதற்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் நடவடிக்கை எடுக்கும் என்றும் 
அவர் தெரிவித்தார்.
கடந்த 3 ஆம் திகதியிலிருந்து இலங்கையில் ஏற்பட்ட அனர்த்த நிலை காரணமாக 21 மரணங்கள் பதிவாகியுள்ளன. மேலும், 10 மாவட்டங்களில் 43,890 குடும்பங்களில், 172,132 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் 
தெரிவித்துள்ளது.
இதேவேளை, அனர்த்தத்திற்குள்ளாகிய மக்களுக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்குவதில் எந்த பிரச்சினையும் இல்லை என்றும், அனர்த்தத்தினால் மரணித்த ஒருவருக்கு 250,000 இழப்பீட்டுத் தொகையும்,
 சேதமடைந்த
வீடுகளுக்கு ரூபாய் 10 ஆயிரம் முதல் 25 லட்சம் வரையிலான இழப்பீட்டுத் தொகை மதிப்பீட்டு அறிக்கைக்கு அமைய வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி
 மேலும் தெரிவித்தார்

நிலாவரை.கொம் செய்திகள் >>>



READ MORE - நாட்டில் உடனடியாக 117 என்ற இலக்கத்தை தொடர்புகொள்ளுங்கள்

நாட்டில் வீட்டிலிருந்தவாறே மருந்துகளை தபால் திணைக்களம் மூலம் பெற்றுக்கொள்ளலாம்

வியாழன், 3 ஜூன், 2021

கொரோனா  Coved 19 நிலமை காரணமாக யாழ்போதனா வைத்தியசாலையில் மாதாந்த வைத்திய பரிசோதனைக்கு(Clinic)வருபவர்கள் தற்போதய நிலமையில் 0212214249 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு வீட்டிலிருந்தவாறே மருந்துகளை தபால் திணைக்களம் மூலம்  பெற்றுக்கொள்ளலாம்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>


READ MORE - நாட்டில் வீட்டிலிருந்தவாறே மருந்துகளை தபால் திணைக்களம் மூலம் பெற்றுக்கொள்ளலாம்