.நாட்டில் புலமை பரிசில் பரீட்சையின் மூன்று வினாக்களை நீக்குவதற்கு தீர்மானம்

செவ்வாய், 17 செப்டம்பர், 2024

நாட்டில் சர்ச்சைக்குரிய ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் தாள், முறையான பரீட்சையின் பின்னர் மூன்று கேள்விகளை நீக்குவதற்கு பரீட்சைகள் ஆணையாளர் தீர்மானித்துள்ளார்.
 புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் தாளில் உள்ள
 மூன்று வினாக்களைப் போன்று மூன்று கேள்விகளை 
அலவ்வ பிரதேசத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் மாதிரித் தாள் மூலம் சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டதாக வெளியான தகவல் தொடர்பில் விளக்கமளித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். 
அதன்படி இன்று புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாளை தயாரித்த குழு ஒன்று கூடி கலந்துரையாடப்பட்டு அது தொடர்பான மூன்று வினாக்களை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
 இது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக நாளை (18) புலனாய்வு அதிகாரிகள் குழுவொன்று சம்பந்தப்பட்ட பகுதிக்கு செல்லவுள்ளதாகவும், அவர்களின் அறிக்கையின் பின்னர் இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.
.  என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக