நாட்டில் வருமான வரி செலுத்த இன்றே இறுதி நாள் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

திங்கள், 30 செப்டம்பர், 2024

நாட்டில் 2023/2024 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரி செலுத்துவோர் அனைவரும் இன்றே (30) செலுத்தி முடிக்க வேண்டும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. 
 எவரேனும் பணம் செலுத்தத் தவறினால் அல்லது தாமதப்படுத்தினால், அவர் சட்டத்தின்படி அபராதம் மற்றும் வட்டிக்கு உட்படுத்தப்படுவார் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது. 
 மேலும், எந்தவொரு நபரும் எந்த வகையான 
வரிக்கும் செலுத்த வேண்டிய வரிகள் நிலுவையில் இருந்தால், அவை அனைத்தும் அக்டோபர் 30 ஆம் தேதி அல்லது அதற்கு
 முன் செலுத்தப்பட வேண்டும். 
 அன்றைய திகதிக்கு பிறகு நிலுவையில் உள்ள வரிகள் இருந்தால், அவற்றை மீட்பதற்கு உள்நாட்டு வருமானச் சட்டத்தின்படி
 சட்ட நடவடிக்கை 
எடுக்கப்படும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
 1944 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக இது 
தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>


>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக