இலங்கையில் பல பகுதிகளில் நூறு மில்லிமீற்றர் மழைவீழ்ச்சிக்கு வாய்ப்பு

செவ்வாய், 3 செப்டம்பர், 2024

இலங்கையில் மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில பகுதிகளில் மி.மீ. 100க்கு மேல் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் 
தெரிவித்துள்ளது. 
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது 
மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. 
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய 
மழை பெய்யும். மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய
 மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் காற்றானது  40-50 கி.மீற்றர் வரை பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் 
அறிவித்துள்ளது. 
இடியுடன் கூடிய மழை தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
குறிப்பிடத்தக்கது  என்பதாகும்  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக