கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெண் முகவர் ஒருவர் கைது

சனி, 14 செப்டம்பர், 2024

 இலங்கையில்  வெளிநாட்டுக்கு அனுப்புவதாக பலரை ஏமாற்றிய பெண் முகவர் ஒருவர் தப்பிச் செல்லும் போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டுக்கு நாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி பத்து இளைஞர், யுவதிகளிடம் இருந்து 60 இலட்சம் ரூபா
 பெற்றுள்ளார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரான குறித்த பெண் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரால் கைது 
செய்யப்பட்டுள்ளார். சிலாபம் களுகம பிரதேசத்தில் 
வசிக்கும் 28 வயதுடைய பெண்ணொருவரே கைது
 செய்யப்பட்டுள்ளார்.
 வெளிநாட்டுக்கு அனுப்புவதாக ஏமாற்றப்பட்ட இளைஞர், யுவதிகள் விமான நிலையத்திற்கு சென்ற நிலையில், அவர்களின் ஆவணங்களுடன் அவர் தப்பிச் செல்ல முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது
என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக