பிட்டிகல தலகஸ்பே பகுதியில் லொத்தர் சீட்டில் கிடைத்த பேரதிர்ஷ்டம்

புதன், 31 மார்ச், 2021

கடனுக்கு ஒதுக்கி வைத்த லொத்தர் சீட்டில் கிடைத்த பேரதிர்ஷ்டம்!! லொத்தர் விற்கும் பெண்ணின் நெகிழ்ச்சியான செயல்
தென்னிலங்கையில் இளைஞன் ஒருவரினால் கடனுக்கு கொள்வனவு செய்யப்பட்ட லொத்தர் சீட்டிற்கு 
கிடைத்த பணப்பரிசு அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பிட்டிகல தலகஸ்பே பகுதியில் லொத்தர் சீட்டினை விற்பனை செய்த பெண் தொடர்பில் தகவல் 
வெளியாகி உள்ளது.
நாளாந்தம் லொத்தர் சீட்டுகள் பலவற்றை ஒதுக்கிக்கொள்ளும் இளைஞன் வழமையை போன்று தனக்கு 5 லொத்தர் சீட்டினை ஒதுக்கி வைக்குமாறு விற்பனை செய்யும் குறித்த பெண்ணிடம் குறிப்பிட்டுள்ளார்.எனினும், இறுதியாக ஒதுக்கிய லொத்தர் சீட்டுகளை பெறுவதற்கு அந்த இளைஞன் வருகைத்தராமையினால், ஒதுக்கப்பட்ட லொத்தர் சீட்டிற்கு பரிசு கிடைத்துள்ளதா என குறித்த பெண் சோதனையிட்டுள்ளார்.அவ்வாறு ஒதுக்கப்பட்ட லொத்தர் சீட்டு ஒன்றிற்கு ஒரு லட்சம் 

ரூபாய் பணம் கிடைத்துள்ளது. உடனடியாக குறித்த இளைஞனுக்கு தொலைபேசியில் அழைப்பேற்படுத்திய பெண் தகவலை வெளியிட்டுள்ளார்.அது மாத்திரமின்றி கிடைத்த பணத்தை உடனடியாக அவருக்கு பெற்றுக் கொடுக்கவும் அந்த பெண் நடவடிக்கை எடுத்துள்ளார். பரிசு வென்ற இளைஞன் மிகவும் மகிழ்ச்சியுடன் லொத்தர் சீட்டு விற்பனை செய்யும் பெண்ணுக்கு 5ஆயிரம் ரூபாய் பணத்தை பரிசாக கொடுத்துள்ளார்.”என்னிடம் லொத்தர் சீட்டு பெற்றவர்களுக்கு பரிசு கிடைத்தால் அவர்களுக்கு அதனை பெற்றுக்கொடுப்பது எனது கடமை என லொத்தர் சீட்டு விற்பனையாளரான வஜித மல்லிக்கா என்ற பெண் தெரிவித்துள்ளார்.


 

நிலாவரை.கொம் செய்திகள் >>>
READ MORE - பிட்டிகல தலகஸ்பே பகுதியில் லொத்தர் சீட்டில் கிடைத்த பேரதிர்ஷ்டம்

கரணவாயில் அனுமதி பெறாமல் நடக்கவிருந்த திருமணத்திற் சீல் வைப்பு

யாழ்  கரணவாய் மூத்த விநாயகர் மண்டபத்தில் திருமண வைபவம் அனுமதி பெறாமல் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டதையடுத்து கரவெட்டி சுகாதார பணிமனையினரால்,30-03-2021. அன்று இரவோடு இரவாக மண்டபத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
கல்யாண மண்டபங்கள் மற்றும் இறுதிச் சடங்குகள் என்பவற்றிற்கு பங்குபற்றுவோரின் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டதுடன், பொதுச் சுகாதார பரிசோதகர்களின் அனுமதிகள் பெறப்பட வேண்டும் எனவும் யாழ் மாவட்ட கொரோனா செயலணி அண்மையில் அறிவித்திருந்தது.இந்த 
நிலையில்
31-03.2012., இன்று காலை மூத்த விநாயகர் ஆலய மண்டபத்தில் திருமண நிகழ்வு நடப்பதற்கு பல வாரங்களின் முன்னரே முற்பதிவு செய்யப்பட்டிருந்தது.இன்று அனுமதி பெறாமல் திருமணம் நடக்கவிருப்பதாக கிடைத்த தகலையடுத்து, நேற்றிரவே ம்ண்டபத்திற்கு பூட்டு 
போடப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
READ MORE - கரணவாயில் அனுமதி பெறாமல் நடக்கவிருந்த திருமணத்திற் சீல் வைப்பு

நாட்டில் சினமன் எயார் விமான சேவை ஏப்ரல் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கும்

திங்கள், 29 மார்ச், 2021

உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ஓர் நல்ல செய்தி..இலங்கையின் முதன்மையான உள்நாட்டு விமான நிறுவனமான சினமன் எயார் , ஏப்ரல் முதலாம் திகதி முதல் தனது உள்நாட்டு பட்டய விமான நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கவுள்ளது.கொவிட் தொற்றின் காரணமாக பல மாதகால இடைவெளிக்குப் பின்னர் இந்த அறிவிப்பு 
வெளியாகியுள்ளது.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம், ரத்மலானை விமான நிலையம் மற்றும் கொழும்பு நகரம் ஆகியவற்றிலிருந்து திருகோணமலை, மட்டக்களப்பு (பாசிக்குடா), ஹம்பாந்தோட்டை, தங்காலை,
கோகல்ல, கண்டி, காஸ்டில்ரீக், சீகிரிய, யாழ்ப்பாணம், அறுகம்பை, அனுராதபுரம் மற்றும் பெந்தோட்டை ஆகிய பகுதிகளுக்கு இந்த விமான சேவை முன்னெடுக்கப்படுகிறது
.விமான நிறுவனம் மிக உயர்ந்த பாதுகாப்பை வழங்க
 உறுதிபூண்டுள்ளதுடன், அனைத்து பயணிகளும் சுகாதார மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் வழிகாட்டுதல்களை அவசியம் கடைபிடிக்குமாறு கேட்டுக்
 கொள்ளப்படுகிறது.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> >
READ MORE - நாட்டில் சினமன் எயார் விமான சேவை ஏப்ரல் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கும்

நாட்டில் புதிய கல்விக் கொள்கை பற்றி கருத்தறியும் “டிஜிடல் தளம்” ஆரம்பம்

சனி, 27 மார்ச், 2021

நாட்டில்“டிஜிடல் தளம்” கருத்துக்கள் மற்றும் ஆக்கபூர்வமான ஆலோசனைகளை முன்வைத்து “பேண்தகு கல்விக் கொள்கை சட்டகமொன்றை” உருவாக்குவதற்கு மக்களுக்கு கிடைக்கும் அரிய சந்தர்ப்பம் ஒன்றாகும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ
 தெரிவித்தார்.
“ஒரு நாட்டின் சிந்தனை மற்றும் தெலைநோக்கு உருவாகுவது அந்நாட்டு கல்விக் கொள்கையின் மூலமே ஆகும். காலங்கடந்த கல்விக் கொள்கையினால் உருவாவது நவீன உலகுடன் முன்னோக்கிச் செல்வதற்கு முடியாத சமூகம் ஒன்றாகும். பரந்தளவிலான மக்கள் பிரதிநிதித்துவத்துடன் உருவாகும் ஒரு கொள்கையை அரசாங்கம் மாறும்போது மாற்ற​ முடியாது.” என்று சிறிலங்கா ஜனாதிபதி மேலும்
 குறிப்பிட்டார்.
21 ஆம் நூற்றாண்டுக்கு ஏற்ற வகையில் அறிவை மையப்படுத்திய மனித வள மூலதனத்தை திட்டமிட்டு போசிப்பது “ சுபீட்சத்தின் நோக்கு ” கொள்கைப் பிரகடனத்தின் முக்கிய நோக்கமாகும் என்று
 ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார். அதற்காக பல்வேறு கல்வி மறுசீரமைப்புக்களை மேற்கொள்ள வேண்டும். நாட்டின் எதிர்கால சமூகத்தை அறிவு, திறன்களுடன் கூடிய சமூகமாக உலகுக்கு கொண்டு செல்ல “ புதிய கல்வி மறுசீரமைப்பின் மூலம் ” தான் எதிர்பார்ப்பதாக  சிறிலங்கா ஜனாதிபதி 
மேலும் தெரிவித்தார்.
முன்மொழியப்பட்ட கல்வி மறுசீரமைப்பு பற்றி பொதுமக்களி்ன கருத்துக்களை பெற்றுக்கொள்வதற்கான “ டிஜிடல் தளத்தை ” உருவாக்குவதற்காக இன்று (26) முற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வின்போதே  சிறிலங்கா ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
“அறிவையும் மனதையும் போஷிக்கும் முழுமையான கல்வியை நோக்கி ” என்பது “ டிஜிடல் தளத்தின் ” கருப்பொருளாகும்.
“டிஜிடல் தளம்”  சிறிலங்கா ஜனாதிபதியின்   உத்தியோகபுர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
இன்று முதல் அடுத்து வரும் 03 மாதங்கள் egenuma.moe.gov.lk என்ற இணையத்தளம் மூலம் மக்களுக்கு புதிய கல்வி மறுசீரமைப்புக்கான ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை “ டிஜிடல் தளத்துக்கு ” அனுப்ப முடியும். முன்பள்ளிக் கல்வி, ஆரம்ப 
மற்றும் இரண்டாம் 
நிலைக் கல்வி , தொழில் மற்றும் மூன்றாம் நிலைக் கல்வி, உயர் மற்றும் தொழிற் கல்வி என்ற பிரதான 04 உப துறைகளின் கீழ் மறுசீரமைப்பு ஆலோசனைகள் முன்வைப்பதற்கு சந்தர்ப்பம் உண்டு. பேண்தகு கல்விக் கொள்கை ஒன்றுக்காக மிகவும் பரந்தளவில் பொதுமக்களின் கருத்துக்கள், ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதற்கு “டிஜிடல் தளம் ” 
திறக்கப்பட்டுள்ளது.
உயர் கல்விக்கு பிரவேசிப்பதற்கு அதிக வாய்ப்புக்களை வழங்குவது மறுசீரமைப்பின் மற்றொரு நோக்கமாகும். பல்கலைக்கழகங்களில் முன்னெடுக்கப்படும் பாடவிதானங்களை நவீனமயப்படுத்துவதுடன் மறுசீரமைப்பின் மூலம் தொழில் திறன் விருத்தி, தொழிலில் ஈடுபடும் போது தமது கல்வித் தகைமைகளை விருத்தி செய்துகொள்வதற்காக திறந்த பல்கலைக்கழக கட்டமைப்பை முழுமையான மாற்றத்துக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இலங்கையின் அனைத்துப் பிள்ளைகளுக்கும் முன்பள்ளி முதல் முழுமையான கல்வியை வழங்குவது தமது எதிர்பார்ப்பாகும் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, இணையம் மற்றும் தொழிநுட்ப குறைபாடுகளை 2023 வருடமாகும் போது முழுமையாக நீக்குவதாகவும் 
குறிப்பிட்டார்.
கீர்த்திமிக்க வரலாற்று பாரம்பரியத்தைக் கொண்ட இலங்கை தேசத்துக்காக அதனை விடவும் கீர்த்திமிக்க எதிர்காலத்தை கட்டயெழுப்புவதே புதிய கல்வி மறுசீரமைப்பின் மூலம் தான் எதிர்பார்ப்பதாகவும் சிறிலங்கா ஜனாதிபதி குறிப்பிட்டார்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>READ MORE - நாட்டில் புதிய கல்விக் கொள்கை பற்றி கருத்தறியும் “டிஜிடல் தளம்” ஆரம்பம்

அவதானமாக புத்தாண்டு காலத்தில் இருக்குமாறு அறிவுறுத்தல்

செவ்வாய், 23 மார்ச், 2021

போலி நாணயத்தாள்கள் புலக்கத்திற்கு வரும் அபாயம் இருப்பதினால் எதிர்வரும் புத்தாண்டு காலத்தில் அவதானமாக இருக்குமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
5,000 ரூபா போலி நாணயத்தாள்களை அச்சிட்ட சிலர் பொலிஸாரினால் கடந்த சில நாட்களில் கைது செய்யப்பட்டனர்.
இதுதொடர்பாக பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவிக்கையில், எதிர்வரும் புத்தாண்டு காலப்பகுதியில் விசேடமாக பொதுமக்கள் மத்தியில் இந்த போலி நாணயத்தாள்கள் புலக்கத்திற்கு வரக்கூடும்.
குற்றச் செயல்களில் ஈடுப்பட்டுள்ளோர் இதனை மக்கள் மத்தியில் சாதூர்யமான முறையில் பயன்பாட்டுக்கு கொண்டு வரக்கூடும். இவ்வாறான நாணயத்தாள் கிடைக்கும் சந்தர்ப்பத்தில், உண்மையான நாணயத்தாளா? என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
பாரியளவில் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுப்படுவோர் இதுதொடர்பாக கூடிய கவனம் செலுத்த வேண்டும்.
5,000 ரூபா நாணயத்தாள் உங்களுக்கு வழங்கப்படும் பட்சத்தில் அதன் உண்மையான அடையாளங்கள் மூலம் அதனை உறுதி செய்ய
 உங்களால் முடியும்.
நீங்கள் வர்த்தக நிலையம் ஒன்றை நடத்துவோராயின், இதுதொடர்பாக கூடுதலான கனவம் செலுத்த வேண்டும்.
எவரேனும் பணத்தை செலுத்தும் போது இதுதொடர்பில் விழிப்புடன் செயற்பட வேண்டும் என்று பொதுமக்களிடம் 
கேட்டுக்கொண்டார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>READ MORE - அவதானமாக புத்தாண்டு காலத்தில் இருக்குமாறு அறிவுறுத்தல்

நாட்டில் தடுப்பூசி ஏற்றிய எவருக்கும், இதுவரை குருதி உறைவு இல்லை, அச்சப்படத் தேவையில்லை

வியாழன், 18 மார்ச், 2021

இலங்கையில் தடுப்பூசிகள் செலுத்திக்கொண்டுள்ள எவருக்கும் இரத்த உறைவுகள் ஏற்படவில்லை என்பதால் எவரும் அச்சப்படத்தேவை யில்லையென இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்தார்.
அத்துடன், சீனாவில் தயாரிக்கப்படும் சைனோபாம் தடுப்பூசிக்கு அனுமதியளிப்பதற்கான தகவல்கள் தேசிய ஒளடதங்கள் ஒழுங்குப்படுத்தல் அதிகார சபைக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதுடன், 06 இலட்சம் தடுப்பூசிகள் முதல் கட்டமாக இலங்கைக்கு கிடைக்கப்பெறவுள்ளதாகவும் கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்தாவது,
தடுப்பூசிகள் ஏற்றப்படுவதால் இரத்த உறைவுகள் அல்லது பக்க விளைவுகள் ஏற்படுவதாக சில செய்திகள் வெளியாகியுள்ளன. அவ்வாறு
 எவ்வித இரத்த உறைவுகளும் விளைவுகளும் எமது நாட்டில் ஏற்படவில்லை. தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னரான மதிப்பீடுகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. இதில் இரத்த உறைவுகள் ஏற்பட்டுள்ளதாக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உறுதிப்படுத்தப்படவில்லை.
தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட பின்னர் பக்க விளைவுகள் வருகின்றனவா? எந்த எந்த தரப்பினருக்கு பக்கவிளைவுகள் வருகின்றன? ஒரே குழுக்களை சேர்ந்தவர்களுக்கு பாதிப்புகள் ஏற்படுகின்றனவா? என்ற அடிப்படையில் மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உலக சுகாதார
 ஸ்தாபனமும் இந்த தடுப்பூசி தொடர்பில் தமது மதிப்பீடுகளை வெளியிட்டுள்ளது. 
இதில் இரத்த உறைவுகள் ஏற்படுவதாக கூறப்படவில்லை. ஆகவே, தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள எவரும் 
அச்சப்படத்தேவையில்லை.
ரஷ்யாவின் ஸ்புட்னிக் – வி தடுப்பூசிகளை இலங்கைக்கு கொண்டுவரும் செயற்பாட்டை எஸ்.பி.சி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. அத்துடன், சீனாவில் தயாரிக்கப்படும் சைனோபாம் 
தடுப்பூசிகளுக்கு
 அனுமதி அளிப்பதற்கான தகவல்களும் தேசிய ஒளடதங்கள் ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபைக்கு அனுப்பட்டுள்ளன. அது தொடர்பில் பரிசீலிக்கப்பட்டு அறிக்கைககள் விரைவில் சமர்ப்பிக்கப்படும் என்பதுடன், சீன அரசாங்கத்தால் 06 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் இலங்கைக்கு வழங்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

READ MORE - நாட்டில் தடுப்பூசி ஏற்றிய எவருக்கும், இதுவரை குருதி உறைவு இல்லை, அச்சப்படத் தேவையில்லை

வேலையை இழந்த தனியார்துறை ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

இலங்கையில் கொவிட் -19 பரவல் அபாயம் காரணமாக வேலையை இழந்த தனியார்துறை ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அரசு அறிவித்திருக்கின்றது.
வேலை இழந்த தனியார் துறை ஊழியர்களுக்கு அரச சலுகை வழங்குவது தொடர்பிலான கணக்கெடுப்பை நடத்துவதற்காக, தொழில் திணைக்களத்தில் தத்தமது விபரங்களை சமர்ப்பிக்குமாறு வேலை இழந்தோருக்கு அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கமைய பாதிக்கப்பட்டவர்கள் பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம்,
 பணியாற்றிய நிறுவனம்,
பணியில் இருந்து நீக்கப்பட்ட திகதி, பணியாற்றிய காலம், இறுதியாக பெற்ற சம்பளம் உள்ளிட்ட விபரங்களை உள்ளடக்கி, தொழில் ஆணையாளர், 11வது மாடி, கொழும்பு 15 என்ற முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தொழில் திணைக்கள ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திர கீர்த்தி குறிப்பிட்டுள்ளார். குறித்த விபரங்களை எதிர்வரும் 01ம் திகதிக்கு முன்னர் 
அனுப்பி வைக்குமாறும்

நிலாவரை.கொம் செய்திகள் >>>READ MORE - வேலையை இழந்த தனியார்துறை ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

நாட்டில் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு சனிக்கிழமை முதல் ஆரம்பம்

வியாழன், 11 மார்ச், 2021

நாட்டில் எதிர்வரும்,13-03-2021, சனிக்கிழமை முதல் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் பதிவாகும் கொரோனா மரணங்களில் அதிகமானோர் 60 வயதுக்கு மேற்பட்டோர் என்பதால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர்
 நாயகம் வைத்தியர் 
ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.60 வயதிற்கு மேற்பட்டவர்கள் வைரஸ் பாதிப்புக்கு பின்னர் மருத்துவமனையில் 
அனுமதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, இறப்பு எண்ணிக்கையை குறைக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது என அவர் 
தெரிவித்துள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>READ MORE - நாட்டில் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு சனிக்கிழமை முதல் ஆரம்பம்

ஒரு வயதுகூட நிரம்பாத பச்சிளம் குழந்தையை யாழில் அடித்து துன்புறுத்திய தாய்

செவ்வாய், 2 மார்ச், 2021

குழந்தைப் பாக்கியம் என்பது அனைவரும் எதிர்பார்க்கும் மிகவும் மங்களகரமான ஒரு விடயமாகும். எத்தனையோ வகையான பேறுகளில் இது மிகவும் முக்கியமானது.குழந்தைப் பாக்கியம் அனைவருக்கும் கிடைப்பதில்லை. அப்படியிருக்க குழந்தை 
பாக்கியம் வேண்டி ஏங்கிக்கொண்டிருக்கும் பலரும் இன்றும் இந்த உலகில்இருக்கின்றனர்
எனினும், குழந்தை இருந்தும் அந்த குழந்தையை சரிவர கவனிக்காக பெற்றோர்களும் இந்த உலகில் இருக்கத்தான்
 செய்கின்றனர்.குழந்தைகள் இருந்து அந்த குழந்தையினை சரியாக கவனத்தில்கொள்வதில்லை. இந்த குழந்தையின் உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை கூட பூர்த்தி
 செய்வதில்லை. சிலர் கொடுமைப்படுத்துவதும் உண்டு.இதுபோன்ற சம்பவம் ஒன்று யாழ் மணியம் தோட்டம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. 
ஒரு வயது கூட நிரம்பாத பச்சிளம் குழந்தையை 
ஒரு பெண் அடித்து துன்புறுத்தும் காணொளி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.ஒரு வயது கூட நிரம்பாத 
பச்சிளம் குழந்தையை குச்சியொன்றை கொண்டு 
பெண் ஒருவர் கடுமையாகத் தாக்கியுள்ளார். இந்த காணொளி பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.பலரும் தங்களது 
விசனம் வெளியிட்டுள்ளனர். இந்த பெண்ணுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பலரும் தற்போது கோரிக்கை விடுத்துள்ளனர்.குழந்தைகள் உங்களின் உடமைப் பொருள் அல்ல. அவர்கள் உங்களிடமிருந்து வந்திருக்கலாம். 
ஆனால், உங்கள் தயாரிப்புகள் அல்ல. அவர்கள் இயற்கையின் வெளிப்பாடு.உங்கள்  எதிர்பார்ப்புகளை,
விருப்பங்களை, 
எண்ணங்களை அவர்கள் மீது திணிக்காதீர்கள். அவர்கள் எதிர்கால 
உலகிற்கு நம் இறந்தகால சடங்குகளைத் திணிப்பது 
தவறு.நீங்கள் வேண்டுமானால் குழந்தைகளைப் போல
 இருங்கள். ஆனால், 
உங்களைப் போல அவர்கள் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள்.ஏனென்றால், ஆறுகள் பின்னோக்கிப் பாய்வதில்லை.என்ற வரிகளுக்கேற்ப குழந்தைகளை நாம் உருவாக்கினபோதும் அவர்கள் நமது அடிமைகள் அல்ல.நம் குழந்தையே 
ஆனாலும் நாம் அவர்களை வன்முறைக்குள்ளாக்கக்கூடாது. அடிக்கிற கைதான் அணைக்கும்’ என்ற பழமொழியெல்லாம் உதவவே உதவாது.அடிப்பதைத் தாண்டி வேறு எதையுமே யோசிக்க மாட்டீர்களா?
அடித்து சரிபடுத்த அவர்கள் என்ன மத்தளமா? 
அடிப்பதும், மனரீதியாக வன்முறைப்படுத்தும் விதமும் கண்டிப்பாக குழந்தை உரிமை மீறல் என்கிறது ஐக்கிய நாடுகள் சபை.
குழந்தைகளை 
ஆசையோடும் அன்போடும் அரவணைத்து வளர்ப்பவர்கள் பெற்றோர்கள் என்பதுதான் நம் பொதுவான கருத்து.இந்த தாயை 
இனங்கண்டு சட்டத்தின் முன் நிறுத்துதல் அவசியம் என சமூக வலைத் தளங்களில் பலரும் தத்தம் ஆதங்கங்களை 
வெளிப்படுத்தியுள்ளனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>>READ MORE - ஒரு வயதுகூட நிரம்பாத பச்சிளம் குழந்தையை யாழில் அடித்து துன்புறுத்திய தாய்

நாட்டில் மின்வெட்டு தொடர்பில் மின்சாரத்துறை அமைச்சு வெளியிட்ட செய்தி

திங்கள், 1 மார்ச், 2021

நாட்டில் நிலவும் வறட்சியின் போது கூட மின்சாரம் விநியோகத்தில் எந்த தடங்கலும் ஏற்படாது என்று  மின்சாரத்துறை அமைச்சு வெளியிட்ட நிம்மதி தரும் செய்தி.மின்சார மற்றும் எரிசக்தி
 மேம்பாட்டு இயக்குநரும், ஊடக செய்தித் தொடர்பாளருமான சுலக்ஷனா ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் வெப்ப வானிலை காரணமாக மின்சார விநியோகத்தில் தடங்கல்கள் ஏற்படும் என்று செய்திகள் வெளியான
 நிலையிலேயே, இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.நீர்த்தேக்கங்களில் 73 வீதம் நீர் நிறைந்துள்ளது.எனவே அவற்றில் வறண்ட காலங்களிலும் மின்சாரம் தயாரிக்க போதுமானதாக இருக்கும் என்று சுலக்ஷனா ஜெயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>


READ MORE - நாட்டில் மின்வெட்டு தொடர்பில் மின்சாரத்துறை அமைச்சு வெளியிட்ட செய்தி