கரணவாயில் அனுமதி பெறாமல் நடக்கவிருந்த திருமணத்திற் சீல் வைப்பு

புதன், 31 மார்ச், 2021

யாழ்  கரணவாய் மூத்த விநாயகர் மண்டபத்தில் திருமண வைபவம் அனுமதி பெறாமல் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டதையடுத்து கரவெட்டி சுகாதார பணிமனையினரால்,30-03-2021. அன்று இரவோடு இரவாக மண்டபத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
கல்யாண மண்டபங்கள் மற்றும் இறுதிச் சடங்குகள் என்பவற்றிற்கு பங்குபற்றுவோரின் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டதுடன், பொதுச் சுகாதார பரிசோதகர்களின் அனுமதிகள் பெறப்பட வேண்டும் எனவும் யாழ் மாவட்ட கொரோனா செயலணி அண்மையில் அறிவித்திருந்தது.இந்த 
நிலையில்
31-03.2012., இன்று காலை மூத்த விநாயகர் ஆலய மண்டபத்தில் திருமண நிகழ்வு நடப்பதற்கு பல வாரங்களின் முன்னரே முற்பதிவு செய்யப்பட்டிருந்தது.இன்று அனுமதி பெறாமல் திருமணம் நடக்கவிருப்பதாக கிடைத்த தகலையடுத்து, நேற்றிரவே ம்ண்டபத்திற்கு பூட்டு 
போடப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக