நாட்டில் பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

ஞாயிறு, 30 ஏப்ரல், 2023

நாட்டில் 30-04-2023.இன்று பிற்பகல் 1.30 மணி முதல் இரவு 11.00 மணி வரை இந்த அறிவிப்பு செல்லுபடியாகும்.
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடக்கு மற்றும் தென் மாகாணங்களிலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் மாலை அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாதகமான வளிமண்டல நிலை காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான 
பலத்த மழை பெய்யும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் சில இடங்களில் மி.மீ. 75க்கு மேல் பலத்த மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் 
தெரிவித்துள்ளது.
30-04-2023.இன்று  பிற்பகல் 1.30 மணி முதல் இரவு 11.00 மணி வரை இந்த அறிவிப்பு செல்லுபடியாகும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம்
 தெரிவித்துள்ளது


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - நாட்டில் பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

இலங்கைமக்களுக்கு எச்சரிக்கை காய்ச்சல் பீடிக்கப்பட்டால் உடன் மருத்துவரை நாடுங்கள்

சனி, 29 ஏப்ரல், 2023


இலங்கையில் தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக டெங்கு நோய்த்தாக்கம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அ
திகரித்துள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 29 ஆயிரம் வரையிலானவர்கள் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 15 மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். 
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், 
 "மேல் மாகாணத்திலேயே அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். மேல் மாகாணத்தில் 14 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இது டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 49 சதவீதமாகும். இதில், கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இது தவிர, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு பகுதிகளில் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகி வருகின்றனர்"  என்றார்.
எவரேனும் ஒருவர் காய்ச்சல் பீடிக்கப்பட்டு இருந்தால் உடனடியாக மருத்துவரை நாடுமாறு அவர் பொதுமக்களிடம் 
கேட்டுக்கொண்டார் 
தற்போது நிலவும் மழை நிலைமையைக் கருத்தில் கொண்டு தங்கள் குடியிருப்பு பகுதிகள், பாடசாலைகள், வேலைத்தளங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் டெங்கு நுளம்பு ஏற்படாதவாறு 
சுத்தம் செய்யுமாறும் ளை ணியிடங்கள் மற்றும் 
தொழிற்சாலைகளை சுத்தம் செய்யுமாறு அவர் மேலும் 
கேட்டுக் கொண்டார். 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - இலங்கைமக்களுக்கு எச்சரிக்கை காய்ச்சல் பீடிக்கப்பட்டால் உடன் மருத்துவரை நாடுங்கள்

இன்று பாணந்துறை கடற்கரைக்கு சுமார் ஏழு அடி நீளம் கொண்ட முதலை ஒன்று வந்துள்ளது

வெள்ளி, 28 ஏப்ரல், 2023

பாணந்துறை கடற்கரைக்கு.18-04-2023. இன்று சுமார் ஏழு அடி நீளம் கொண்ட முதலை ஒன்று வந்துள்ளதாக பாணந்துறை உயிர் பாதுகாப்பு பிரிவு 
தெரிவித்துள்ளது. கடற்கரைக்கு அருகில் உள்ள கல் 
அருகே முதலை இருப்பதைக் கண்ட மீனவர் ஒருவர் கடலோர காவல்படை அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளார்.
 முதலை தொடர்பில் வனவிலங்கு அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக பணிகள்.29-04-2023. நாளை  இடம்பெறும் எனவும் அவர்கள் 
தெரிவித்துள்ளனர். முதலையை கடற்கரையில்
 இருந்து அகற்றும் வரை, கடலில் நீராடும்போது கவனமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக பொலிஸ் அதிகாரி 
ஒருவர் தெரிவித்தார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - இன்று பாணந்துறை கடற்கரைக்கு சுமார் ஏழு அடி நீளம் கொண்ட முதலை ஒன்று வந்துள்ளது

இனி சர்க்கரை நோய் பரிசோதனைக்காக ரத்தம் சிந்த வேண்டாம் வருகிறது ஐபோன் ஸ்மார்ட் வாட்ச்

வியாழன், 27 ஏப்ரல், 2023

ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கண்காணிக்கும் புதிய வசதியை ஆப்பிள் நிறுவனம் தனது வாட்சில் அறிமுகம் செய்ய இருக்கிறது. மேலும் 2010யில் ஸ்டீவ் ஜாப்ஸ் தலைமை பதவியில் இருந்த 
போதிலிருந்தே இந்த திட்டம் கொண்டுவர முயற்சி 
நடைபெற்று வருகிறது.
தற்போது வரை ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கண்டுபிடிக்க ஊசி மூலம் துளையிட்டு ரத்தம் எடுத்து பரிசோதிக்கப்பட்டு வருவது வலிமிகுந்ததாக உள்ளது. இதனை தவிர்க்க உலகின் முன்னணி 
மருத்துவமனைகளுடன் ஆப்பிள் நிறுவன விஞ்ஞானிகள் 
ஆய்வில் ஈடுபட்டனர்
மணிக்கட்டில் உள்ள ரத்த நாளங்களை ஊடுருவி ஸ்கேன் செய்யும் optical spectroscopy ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சரியாக
 கணித்துவிடுகிறது.
இன்னும் ஓராண்டில் இந்த புதிய அம்சத்தை சந்தைக்கு கொண்டு வர ஆப்பிள் காப்புரிமை பெறுவதாக தகவல் 
வெளியாகியுள்ளது.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>
READ MORE - இனி சர்க்கரை நோய் பரிசோதனைக்காக ரத்தம் சிந்த வேண்டாம் வருகிறது ஐபோன் ஸ்மார்ட் வாட்ச்

இந்த வாழைப்பழங்களை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாமாம்

புதன், 26 ஏப்ரல், 2023


பொதுவாக நீரிழிவு நோய் உள்ளவர்கள் வாழைப்பழங்களை சாப்பிடக்கூடாது என கூறப்படுவதுண்டு.
எனினும் பச்சை வாழைப்பழம் செவ்வாழை நேந்திரம் ஆகிய பழங்களை குறைந்த அளவு சாப்பிடலாம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
7பச்சை வாழைப்பழம், செவ்வாழை
நீரிழிவு நோயாளிகள் தினமும் ஒரு வாழைப்பழம் என்ற வகையில் பச்சை வாழைப்பழம் செவ்வாழை ஆகிவற்றை சாப்பிடலாம் என்றும் கூறப்படுகின்றது. இதனால் அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும்
 கூறப்படுகிறது.
அதே நேரத்தில் பூவம் பழம், ரஸ்தாலி நாட்டு வாழைப்பழங்களில் இனிப்பு அதிகமாக உள்ளது. இந்த வகை வாழைப்பழங்களை சர்க்கரை நோயாளிகள் சாப்பிட்டால் பிரச்சினை ஏற்படும் என்றும் 
கூறப்படுகிறது.
வாழைப்பழத்தில் சர்க்கரை அதிகம் இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் மற்றும் சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் அதனை த
விர்ப்பது நல்லது
எனினும் வாழைப்பழத்தில் வைட்டமின் சி பொட்டாசியம் நார்ச்சத்து ஆகியவை இருப்பதால் சர்க்கரை நோய் இல்லாதவர்கள் வாழைப்பழங்களை தாராளமாக சாப்பிடலாம்.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

READ MORE - இந்த வாழைப்பழங்களை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாமாம்

வேப்பனபள்ளி அருகே தக்காளிக்குப் போதிய விலை கிடைக்காததால் ஆற்றில் கொட்டிய விவசாயி

செவ்வாய், 25 ஏப்ரல், 2023

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனபள்ளி அருகே, போதிய விலை கிடைக்காததால், சுமார் 3 டன் தக்காளியை விவசாயி ஒருவர் ஆற்றில் கொட்டிவிட்டு சென்றார்.
பதிமடுகு என்ற கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர், தனது தோட்டத்தில் விளைந்த தக்காளியை, கிருஷ்ணகிரி
 சந்தைக்கு கொண்டு சென்றார். அங்கு ஒரு கிலோ, மூன்று ரூபாய்க்கு மட்டுமே கொள்முதல் செய்யப்படும் என்று கூறியதால் அதிருப்தி 
அடைந்துள்ளார்.
பின்னர், தக்காளியை அப்படியே திரும்பி கொண்டு சென்று, செல்லும் வழியில் உள்ள மார்க்கண்டேயன் ஆற்றில் கொட்டிவிட்டார். அறுவடைச் செலவுக்குக் கூட இந்த விலை கட்டுபடியாகாது என்பதால் அவர் இவ்வாறு 
செய்திருக்கிறார்.

.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - வேப்பனபள்ளி அருகே தக்காளிக்குப் போதிய விலை கிடைக்காததால் ஆற்றில் கொட்டிய விவசாயி

நாட்டில் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் வரி வருமானம் அதிகரிப்பு

திங்கள், 24 ஏப்ரல், 2023

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் அதாவது ஜனவரி, பெப்ரவரி மற்றும் மார்ச் ஆகிய மூன்று மாதங்களில் 316,619 மில்லியன் ரூபாவைச் சேகரித்துள்ளது.
கடந்த ஆண்டின் இதே காலாண்டில், வருவாய்த் திணைக்களம் 146,565 மில்லியன் ரூபாவை வசூலித்திருந்தது.
இதன்படி, கடந்த வருடத்தின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் இது 216 வீத அதிகரிப்பாகும்.
அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கை மற்றும் நாட்டின் பொருளாதார செயற்பாடுகள் படிப்படியாக மீட்சியடைந்தமை மற்றும்
 வரி நிர்வாகத்தின் வினைத்திறன் அதிகரிப்பு என்பன 
வரி வருமானத்தை அதிகரிக்க வழிவகுத்துள்ளதாக திணைக்களம் தனது அறிவிப்பில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - நாட்டில் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் வரி வருமானம் அதிகரிப்பு

அனைவரையும் ஈர்த்த லண்டனில்உள்ள பழமையான ஆங்கிலோ-இந்திய உணவகம்

ஞாயிறு, 23 ஏப்ரல், 2023


இங்கிலாந்தை 70 ஆண்டுக்காலம் ஆட்சி செய்த 2-ம் எலிசபெத் ராணி கடந்த ஆண்டு செப்டம்பர் 8ஆம் திகதி அன்று ஸ்காட்லாந்து அரண்மனையில் 
மரணம் அடைந்தார்.
அதற்கு பிறகு இங்கிலாந்தின் மன்னராக சார்லஸ் அரியணை ஏறினாலும் அதிகாரபூர்வமாக அவர் இதுவரை முடிசூட்டிக்கொள்ளவில்லை.
அவரது முடிசூட்டு விழா அடுத்த மாதம் (மே) 6ஆம் திகதி நடைபெறவுள்ளது. 70 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் பாரம்பரிய விழா என்பதால் லண்டன் நகரம் இப்போதிலிருந்தே விழாக்கோலம் 
பூண்டு வருகிறது.
முடிசூட்டு விழாவின்போது லண்டன் வீதிகளில் சிறப்பு விருந்து, கச்சேரி உள்ளிட்டவற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் மன்னர் சார்லசின் முடிசூட்டு விழாவில் லண்டனில் இயங்கி வரும் சுமார் 100 ஆண்டுகள் பழமையான இந்திய ஓட்டல் ஒன்று 
கவனம் பெற்று வருகிறது.
லண்டனில் மையப்பகுதியில் கடந்த 1926-ம் ஆண்டு தொடங்கப்பட்ட 'வீராசாமி' ஓட்டல் இந்தியா - இங்கிலாந்து இடையிலான உணவு கலாசாரத்தை பறைசாற்றும் விதமாக ஆங்கிலோ இந்திய உணவு வகைகளை 
வழங்கி வருகிறது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஓட்டலின் பின்னணியில் இருக்கும் பெண் தொழிலதிபர் கேமிலியா பஞ்சாபி மற்றும் இந்திய சமையல் வரலாற்றாசிரியர் மற்றும் எழுத்தாளரான அனுதி விஷால் ஆகிய இருவரும் 
இணைந்து இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான சமையல் தொடர்புகளை கவனத்தில் கொள்ளும் விதமாக ஆங்கிலோ-இந்திய உணவு வகைகளை தயாரித்து வழங்கி வருகின்றனர்.  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

READ MORE - அனைவரையும் ஈர்த்த லண்டனில்உள்ள பழமையான ஆங்கிலோ-இந்திய உணவகம்

நாட்டில் பல பிரச்சினைகளுக்கு முகக்கொடுக்கும் வர்த்தகர்கள்

சனி, 22 ஏப்ரல், 2023

நாட்டில் நிறை அடிப்படையில், முட்டைகள் விற்பனை செய்யப்படுவதன் மூலம், நடைமுறை ரீதியான பல பிரச்சினைகளுக்கு முகக்கொடுப்பதாக நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அமைப்பு 
தெரிவித்துள்ளது.
சில வர்த்தகர்கள் பயன்படுத்தும் தராசுகள் உரிய தரத்தில் இல்லாமையால், கட்டுப்பாட்டு விலையை விடவும், அதிக விலைக்கு முட்டையைக் கொள்வனவு செய்ய வேண்டிய நிலை நுகர்வோருக்கு ஏற்பட்டுள்ளதாக, அந்த அமைப்பின் தலைவர் ரஞ்சித் வித்தானகே தெரிவித்துள்ளார்.
முட்டையை நியாயமான விலைக்குப் பெற்றுக்கொள்ள மக்கள் எதிர்பார்க்கின்றனர்
முட்டை மாபியாவினைக் கட்டுப்படுத்தி, நுகர்வோருக்கு நன்மையைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அமைப்பு 
வலியுறுத்தியுள்ளது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - நாட்டில் பல பிரச்சினைகளுக்கு முகக்கொடுக்கும் வர்த்தகர்கள்

நீங்கள் முகம் கழுவும் போது இந்த தப்பு மட்டும் செய்யாதீர்கள்

வெள்ளி, 21 ஏப்ரல், 2023


முகத்தை சுத்தமாகவும் தூய்மையாகவும் வைத்து கொள்ள அடிக்கடி முகத்தை தண்ணீரால் கழுவ வேண்டும். முகத்தை கழுவுவதன் மூலம் வறட்சியான சருமத்தை போக்க முடியும்.
ஆனால் முகத்தை கழுவும் போது நம்மை அறியாமல் செய்யும் தவறினால் முகப்பரு மற்றும் பல சரும பிரச்சனைகள் ஏற்படும்.
முதலில் முகத்தை கழுவுவதற்கு முன் கைகளை நன்கு சுத்தமாக தேய்த்து கழுவ வேண்டும்.
இல்லாவிட்டால், கைகளில் உள்ள அழுக்குகள் மற்றும் கிருமிகள் நேரடியாக முகத்தில் பட்டு முகப்பரு, கரும்புள்ளிகள் போன்ற சரும 
பிரச்சனைகள் ஏற்படும்.
முகத்தில் பருக்கள் வராமல் இருக்க வேண்டுமானால், தினமும் முகத்தை பலமுறை கழுவ வேண்டும்.
இதனால் முகத்தில் எண்ணெய் பசை நீங்குவதோடு, அழுக்குகளும் முழுமையாக வெளியேற்றப்பட்டு சருமம் சுத்தமாக மாறும்.
முகத்தை சிவப்பாக மாற்ற கிரீம்களை பயன்படுத்துவது 
நல்லது கிடையாது.
அதற்கு மாற்றாக இயற்கை முறையில் தயாரித்த முகப்பூச்சுகளை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து முகம் கழுவினால் சருமத்தை புத்துணர்ச்சியாக வைத்து கொள்ளலாம்.


READ MORE - நீங்கள் முகம் கழுவும் போது இந்த தப்பு மட்டும் செய்யாதீர்கள்

நாட்டில் எரிபொருள் தாங்கிகள் வெடிக்கும் அபாயம்: எச்சரிக்கை விடுத்த ஐஓசி நிறுவனம்

வியாழன், 20 ஏப்ரல், 2023

இலங்கையில் தற்போது வளிமண்டல வெப்பநிலை அதிகரித்துள்ளதால், எரிபொருள் தாங்கிகள்வெடிக்கும் அபாயம் உள்ளதால், வாகனங்களின் எரிபொருள் தாங்கிகளை அதிகபட்சமாக நிரப்ப வேண்டாம் என ஐஓசி நிறுவனம் கூறியதாக அந்த தெரிவிக்கப்படுகின்றது.
ஐஓசி நிறுவனம் இப்படி ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளது என்று ஆங்கிலத்தில் ஒரு குறிப்பைச் சேர்த்து ஒரு விளம்பரம் இந்த நாட்களில் சமூக ஊடகங்களில் பகிரப்படுகிறது.
அதன்படி, இதுதொடர்பான செய்திகளுக்கு சமூகத்தில் பலர் அச்சமடைந்து சமூக வலைதளங்கள் மூலம் பகிர்ந்து 
வருகின்றனர்.
இவ்வாறானதொரு பின்னணியிலேயே லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு அது பொய்யான செய்தி என 
தெரிவித்துள்ளது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - நாட்டில் எரிபொருள் தாங்கிகள் வெடிக்கும் அபாயம்: எச்சரிக்கை விடுத்த ஐஓசி நிறுவனம்

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் வீழ்ச்சி

புதன், 19 ஏப்ரல், 2023

லக சந்தையில் கச்சா எண்ணெய் விலை இன்று புதன்கிழமை நிலவரப்படி சரிவை கண்டுள்ளது.
பிரன்ட் கச்சா எண்ணெய் பரல் ஒன்றின் விலை 7 டொலர்கள் குறைந்துள்ளதுடன், அதன் விலை 84.70 ஆக 
பதிவாகியுள்ளது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் வீழ்ச்சி

இலங்கைக்கு ஏப்ரல் மாதத்தில் 56,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை

செவ்வாய், 18 ஏப்ரல், 2023

ஏப்ரல் மாதத்தில் இதுவரை 56,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளனர்.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, ஏப்ரல் முதல் இரண்டு வாரங்களில் 56,402 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
ஏப்ரல் மாதத்தில், இந்தியாவில் இருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வந்ததாக தெரிவித்துள்ளது.
இதன்படி, இதுவரை மொத்தம் 9,554 இந்தியர்கள் நாட்டிற்கு 
வருகைத் தந்துள்ளனர்.என்பது  குறிப்பிடத்தக்கது .

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - இலங்கைக்கு ஏப்ரல் மாதத்தில் 56,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை

அமெரிக்காவில் திடீரென குடியிருப்புக்குள் நுழைந்த கரடியை கண்டதும் அதிர்ச்சியில் நபர்!

திங்கள், 17 ஏப்ரல், 2023

அமெரிக்காவில் குடியிருப்புக்குள் நுழைந்த கரடியை திடீரென கண்ட நபர் அதிர்ச்சியில் உறைந்தார்.
வடக்கு கரோலினா மாகாணத்தில் டேவிட் ஒப்பன்ஹிமர் என்பவர் தனது வீட்டின் கார் நிறுத்துமிடத்தில் சாய்வு நாற்காலியில் படுத்து ஓய்வெடுத்து கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு சுற்றுத்திரிந்த கரடி ஒன்று குடியிருப்புக்குள் நுழைந்தது.அந்நிலையில் டேவிட் அருகே அந்த கரடி சென்றபோது திடீரென அதனை கண்ட அவர் அதிர்ச்சியில் 
உறைந்தார்.
சில நொடிகளில் அந்த கரடியும் அச்சத்தில் அங்கிருந்து 
தப்பி ஓடியது.என்பதுகுறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - அமெரிக்காவில் திடீரென குடியிருப்புக்குள் நுழைந்த கரடியை கண்டதும் அதிர்ச்சியில் நபர்!

கிழக்கில் கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் உட்படபகுதில் அதிக வெப்பம்

ஞாயிறு, 16 ஏப்ரல், 2023

கிழக்கு, வடமத்திய மாகாணங்களிலும் குருநாகல், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில்.16-04-2023. இன்று அதிகளவிலான வெப்பநிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் 
எதிர்வு கூறியுள்ளது.
முன்னதாக உள்ளடக்கப்பட்ட கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இதன் தாக்கம் சிறிதளவு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக, வெளியில் செல்பவர்கள் 
கவனமாக 
இருக்குமாறும், குழந்தைகளுக்கு இயன்ற அளவு தண்ணீரை குடிக்கக் கொடுக்குமாறும் சுகாதார அதிகாரிகள் 
அறிவுறுத்தியுள்ளனர்.
இதேவேளை, நிலவும் காலநிலை காரணமாக பண்டாரவளை, கேகாலை மற்றும் பலாங்கொடை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு நேற்றிரவு மண்சரிவு அபாயம் விடுக்கப்பட்டுள்ளது.
என்பதுகுறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

READ MORE - கிழக்கில் கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் உட்படபகுதில் அதிக வெப்பம்

இலங்கையில் தமிழ் புத்தாண்டை நோயாளர்களுடன் கொண்டாடிய தாதியர்கள்

சனி, 15 ஏப்ரல், 2023

இலங்கை முழுவதும் இன்று தமிழ், சிங்கள புத்தாண்டை மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் இலங்கையில் உள்ள அரச வைத்தியசாலை ஒன்றில் புத்தாண்டை நோயாளர்களுடன் தாதியர்கள் 
கொண்டாடியுள்ளனர்.
அதன்படி குறித்த தாதியர்கள் நோயாளர்களுக்கு இனிப்பு மற்றும் பலகாரங்களை பகிர்ந்து தமது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.
அந்தப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில்
 வைரலாகி வருகின்றது.  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>> 
READ MORE - இலங்கையில் தமிழ் புத்தாண்டை நோயாளர்களுடன் கொண்டாடிய தாதியர்கள்

உலகின் மிகப் பெரிய இறப்பர் வாத்து கனடாவுக்கு கொண்டு வரப்பட உள்ளது

வெள்ளி, 14 ஏப்ரல், 2023

 உலகின் மிகப் பெரிய இறப்பர் வாத்து கனடாவிற்கு மீண்டும் கொண்டு 
வரப்பட உள்ளது.
இந்த இறப்பர் வாத்து சுமார் 60 அடி உயரத்தை கொண்டது என்பதுடன் 14.5 தொன் எடையுடையது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இறப்பர் வாத்து Mama Duck என்ற பெயரிலும் அழைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 16ம், 17ம் திகதிகளில் நடைபெறவுள்ள றொரன்டோ நீர் விழாவில் இந்த வாத்து காட்சிப்படுத்தப்பட உள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு இந்த வாத்து கனடாவிற்கு கொண்டு வரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பெரும் எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் மற்றும் சிறுவர்களை கவர்ந்து இழுக்கும் ஓர் பொருளாக இந்த இறப்பர் வாத்து 
கருதப்படுகின்றது. 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - உலகின் மிகப் பெரிய இறப்பர் வாத்து கனடாவுக்கு கொண்டு வரப்பட உள்ளது

இந்திய மூதாட்டி 95 வயதிலும் தங்க பதக்கங்களை வென்று சாதனை படைத்தார்

வியாழன், 13 ஏப்ரல், 2023

உலக மாஸ்டர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 95 வயதான இந்திய வீராங்கனை மூன்று தங்க பதக்கங்களை வென்று சாதனை 
படைத்துள்ளார்.
போலந்தில் உள்ள டோரூனில் உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் டோரன் நகரிலுள்ள உள் விளையாட்டு அரங்கில் இந்த போட்டிகள் நடைபெற்றது.
இந்த போட்டியில் இந்தியா சார்பாக 95 வயதான இந்திய மூதாட்டி பவானி தேவி தாகர் கலந்து கொண்டார்.
அந்த வகையில் 60 மீட்டர் ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், வட்டு எரிதல் உள்ளிட்ட போட்டிகளில் கலந்து கொண்டு 3 தங்க பதக்கங்களை 
வென்றுள்ளார்.
இவர் அரியானா மாநிலத்தில் உள்ள கேடா கிராமத்தை சேர்ந்தவர்.தள்ளாத வயதிலும் கலந்து கொண்டு மூன்று தங்கப் பதக்கங்களை வென்ற இவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து 
வருகின்றனர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - இந்திய மூதாட்டி 95 வயதிலும் தங்க பதக்கங்களை வென்று சாதனை படைத்தார்

இலங்கையில் லிட்ரோ எரிவாயு விலை ஆயிரம் ரூபாவால் குறைப்பு

புதன், 12 ஏப்ரல், 2023

12.5 கிலோகிராம் எடையுள்ள லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை சுமார் 1,000 ரூபாவால் குறைக்கப்படும் என லிட்ரோ தலைவர் முதித 
பீரிஸ் தெரிவித்தார்.
நாளை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு நடைமுறைக்கு வரவுள்ளமை .
அதன்படி விலை சூத்திரத்துக்கமைய  12.5 கிலோகிராம் எடை கொண்ட எரிவாயு சிலிண்டர் 1000 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
என்பதுகுறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - இலங்கையில் லிட்ரோ எரிவாயு விலை ஆயிரம் ரூபாவால் குறைப்பு

வியாபார நிலையங்கள் மீது யாழ்ப்பாணத்தில் திடீர் சோதனை

செவ்வாய், 11 ஏப்ரல், 2023

யாழ். மாவட்ட செயலகத்தின் அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் பிரிவின் உத்தியோகத்தர்களால் யாழ்ப்பாணத்தில் உள்ள பல வியாபார மையங்களிலில் திடீர் பரிசோதனை 
மேற்கொள்ளப்பட்டது.
அவ் வேளையில் வியாபாரிகளினால் பயன்படுத்தப்பட்ட நிறுக்கும் கருவிகளை பரிசோதித்த போது அளவீட்டு அலகுகள் நியமங்கள் 
மற்றும் சேவைகள் திணைகளத்தால் அங்கீகரிக்கப்படாத 
மற்றும் நடப்பாண்டில் முத்திரை பதிக்கப்படாத நிறுக்கும் கருவிகளை பயன்படுத்திய 15 வியாபாரிகள் இனங்காணப்பட்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இனிவரும் காலங்களில் நிறுவை அல்லது அளவை, நிறுக்கும் அல்லது அளக்கும் உபகரணங்களை வியாபார நோக்கத்திற்காக பயன்படுத்தும் வியாபார நிலையங்களிலும் திடீர் பரிசோதனை மேற் மேற்கொள்ளப்படும் என திணைக்களம் அறிவித்துள்ளது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

READ MORE - வியாபார நிலையங்கள் மீது யாழ்ப்பாணத்தில் திடீர் சோதனை

இலங்கையில் எரிபொருட்களின் விலை தொடர்பில் வெளியான விசேட அறிவிப்பு

திங்கள், 10 ஏப்ரல், 2023

நாட்டிற்கு வரும் வெளிநாட்டு எரிபொருள் நிறுவனங்களுக்கு இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தற்போதைய எரிபொருள் விலையை விட குறைந்த விலையில் எரிபொருளை விற்பனை செய்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கையில் எரிபொருளை விற்பனை செய்வதற்கு மூன்று நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பான ஒப்பந்தங்கள் இம்மாத இறுதியில் பூர்த்தி செய்யப்பட உள்ளதாகவும்
 தெரிவிக்கப்படுகிறது.
சீனாவின் சினோபெக், ஆஸ்திரேலியாவின் யுனைடெட் பெட்ரோலியம் மற்றும் அமெரிக்காவின் ஆர்.எம். பார்க்ஸ் என்ற மூன்று நிறுவனங்களுக்கு இலங்கையில் எரிபொருள் சில்லறை விற்பனை சந்தையில் நுழைவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் விலையை விட கணிசமான குறைந்த விலையில் எரிபொருளை விற்பனை செய்வதற்கு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக அந்த நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு இடையே அரசு தரப்பு உடன்பாடு எட்டப்பட்டு அதன் பிறகு குறைந்த விலையில்
 எரிபொருளை விற்பனை செய்ய அனுமதி 
வழங்கப்பட உள்ளது.
அந்த நிலையில், போட்டிச் சந்தை உருவாகி, கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் தேவை குறைந்து, நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் 
நெருக்கடி நிலைமை தணியும் என எரிசக்தி அமைச்சு 
கணித்துள்ளது.
தற்போது, ​​அரசாங்கம் எரிபொருள் இறக்குமதிக்காக மாதத்திற்கு சராசரியாக 450 மில்லியன் டாலர்களை செலவழித்து வருகிறது, மேலும் மூன்று புதிய நிறுவனங்களும் தலா 120 மில்லியன் டாலர்களுக்கு எரிபொருளை இறக்குமதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் இறக்குமதி செலவை குறைக்க முடியும் என கூட்டுத்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், இந்த மூன்று வெளிநாட்டு 
நிறுவனங்களும் ஆண்டுக்கு 2.2 பில்லியன் அமெரிக்க டாலர் 
மதிப்பிலான
 எரிபொருளை இறக்குமதி செய்யத் திட்டமிட்டுள்ளன, இது திறைசேரியின் செலவை படிப்படியாகக் குறைக்கும்.
ஒப்பந்தப் பணிகள் நிறைவடைந்ததன் பின்னர் இந்த நிறுவனங்களுக்கு 150 எரிபொருள் நிரப்பு நிலையங்களைச் செயற்படுத்துவதற்கு அனுமதியளிக்கப்படும் எனவும் அதன் பின்னர் தலா 50 எரிபொருள் நிரப்பு நிலையங்களைத் திறந்து நடவடிக்கைகளை 
மேற்கொள்ள 
முடியும் எனவும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் பேச்சாளர் 
மேலும் தெரிவித்தார்.
 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - இலங்கையில் எரிபொருட்களின் விலை தொடர்பில் வெளியான விசேட அறிவிப்பு

நாட்டில் ஏனைய வருடங்களுடன் ஒப்பிடுகையில் மரக்கறிகளின் தேவை குறைந்துள்ளது

ஞாயிறு, 9 ஏப்ரல், 2023

நாட்டில் ஏனைய வருடங்களுடன் ஒப்பிடுகையில் சிங்கள, தமிழ் புத்தாண்டு காலத்தில் மரக்கறிகளுக்கான தேவை குறைந்துள்ளதாக அகில இலங்கை விசேட பொருளாதார மத்திய நிலையம் மற்றும் மெனிங் வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், மீன்களின் விலை அதிகரித்துள்ளதால், எதிர்காலத்தில் இதன் விலை மேலும் அதிகரிக்கலாம் என பேலியகொட மீன் வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ஜயசிறி விக்கிரமாராச்சி 
தெரிவித்துள்ளார்.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


READ MORE - நாட்டில் ஏனைய வருடங்களுடன் ஒப்பிடுகையில் மரக்கறிகளின் தேவை குறைந்துள்ளது

சில பகுதிகளுக்குகொழும்பில் 12 மணி வரை குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்

சனி, 8 ஏப்ரல், 2023

கொழும்பின் சில பகுதிகளுக்கு,09-2023. நாளை மதியம் 12 மணி வரை குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்பட உள்ளதாக நீர் 
வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை
 தெரிவித்துள்ளது.
இதன்படி கொழும்பு 01,02,03,04,07,08,09,10 மற்றும் 11 பிரதேசங்களுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்படவுள்ளது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - சில பகுதிகளுக்குகொழும்பில் 12 மணி வரை குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்