இலங்கைமக்களுக்கு எச்சரிக்கை காய்ச்சல் பீடிக்கப்பட்டால் உடன் மருத்துவரை நாடுங்கள்

சனி, 29 ஏப்ரல், 2023


இலங்கையில் தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக டெங்கு நோய்த்தாக்கம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அ
திகரித்துள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 29 ஆயிரம் வரையிலானவர்கள் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 15 மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். 
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், 
 "மேல் மாகாணத்திலேயே அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். மேல் மாகாணத்தில் 14 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இது டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 49 சதவீதமாகும். இதில், கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இது தவிர, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு பகுதிகளில் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகி வருகின்றனர்"  என்றார்.
எவரேனும் ஒருவர் காய்ச்சல் பீடிக்கப்பட்டு இருந்தால் உடனடியாக மருத்துவரை நாடுமாறு அவர் பொதுமக்களிடம் 
கேட்டுக்கொண்டார் 
தற்போது நிலவும் மழை நிலைமையைக் கருத்தில் கொண்டு தங்கள் குடியிருப்பு பகுதிகள், பாடசாலைகள், வேலைத்தளங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் டெங்கு நுளம்பு ஏற்படாதவாறு 
சுத்தம் செய்யுமாறும் ளை ணியிடங்கள் மற்றும் 
தொழிற்சாலைகளை சுத்தம் செய்யுமாறு அவர் மேலும் 
கேட்டுக் கொண்டார். 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக