அடையாள அட்டை இல்லாமல் சென்றோருக்குயாழில் நேர்ந்த கதி

சனி, 24 நவம்பர், 2018

அடையாள அட்டை கொண்டு செல்லாத இளைஞனையும் அவரது மைத்துனரையும் சுன்னாக பொலிஸார் கைது செய்து செய்து பொலிஸ் நிலையம் அழைத்து சென்று தலை கீழாக கட்டி த்தூக்கி அடித்து சித்திரவதை செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் யாழ்.
 பிராந்திய மனிதஉரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.
இது குறித்து பாதிக்கபட்டவர்கள் தெரிவிக்கையில் ,
கடந்த 19ஆம் திகதி இரவு 10.45 மணியளவில் நானும் எனது மைத்துனரும் முச்சக்கர வண்டியில் வீடு நோக்கி சென்று 
கொண்டிருந்த போது , வீட்டுக்கு அருகாமையில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த சுன்னாகம் பொலிஸார் நாம் பயணித்த முச்சக்கர வண்டியை மறித்து சோதனை யிட்டதுடன் , முச்சக்கர வண்டியை ஒட்டி சென்ற எனது மைத்துனரிடம் ஆவணங்களை வாங்கி அவற்றையும்
 பரிசோதித்தனர்.
பின்னர் பின்னால் இருந்த என்னிடம் அடையாள அட்டையை கேட்டனர். அப்போது என்னிடம் அடையாள அட்டை இல்லை. வீட்டில் வைத்து விட்டு வந்து விட்டேன் எனவும், வீட்டில் இருந்து எடுத்து வந்து காண்பிக்கின்றேன் என கேட்டதற்கு , அதனை ஏற்காத பொலிஸார் எம்மை முச்சக்கர வண்டியுடன் சுன்னாக பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று , மைத்துனை பொலிஸ்யினரின் சமையல் அறையில் அடைத்து வைத்து அடித்து சித்திரவதை செய்ததுடன் , என்னை தலைகீழாக கட்டி அடித்து சித்திரவதை செய்தனர்.
விடுதலை புலிகள் அமைப்பில் இருந்தனியா என கேட்டே என்னை தாக்கினார்கள். பின்னர் மறுநாள் 20ஆம் திகதி மாலை எவ்வித சட்ட நடவடிக்கையும் இல்லாது எம்மை விடுவித்தனர். பலத்த சித்திரவதைகள் , அடிகாயங்களுக்கு உள்ளான நாம் வலி தாங்க முடியாது 20ஆம் திகதியே தெல்லிப்பளை ஆதார வைத்திய சாலைக்கு சென்று 
சிகிச்சை பெற்றோம்.
எம்மீதான தாக்குதல் மற்றும் சித்திரவதை தொடர்பில் யாழ்.பிராந்திய மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு பதிவு செய்துள்ளோம். என தெரிவித்தனர்.
இதேவேளை கடந்த 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25ம் திகதி சுன்னாக பகுதியை சேர்ந்த சிறிஸ்கந்தராஜா சுமணன் 
எனும் இளைஞரை பொய் குற்றசாட்டின் கீழ் கைது செய்து சித்திரவதை செய்து படுகொலை செய்த பின்னர் குறித்த இளைஞனின் உடலை குளத்தில் வீசினார்கள் எனும் குற்றசாட்டில் கைது செய்யப்பட்ட அப்போதைய
 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட ஆறு பேருக்கும் சித்திரவதை குற்றச்சாட்டுக்கு பத்தாண்டு சிறை தண்டனை யாழ்.மேல் நீதிமன்றினால் 2017.05.04ஆம் திகதி விதிக்கபட்டு உள்ளதுடன் , கொலை குற்றசாட்டு தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருகின்றமை
 குறிப்பிடத்தக்கது
நிலாவரை.கொம் செய்திகள் >>>


READ MORE - அடையாள அட்டை இல்லாமல் சென்றோருக்குயாழில் நேர்ந்த கதி

இராணுவ வாகனம் ஏ9 வீதியில் மின் கம்பத்துடன் மோதியது

வியாழன், 22 நவம்பர், 2018

கிளிநொச்சி ஏ9 வீதியில் மத்திய கல்லூரிக்கு முன்பாக உள்ள உயரழுத்த மின் கம்பத்துடன் இராணுவ கனரக வாகனம் ஒன்று மோதியதில் மின் கம்பம் முறிந்து விழுந்துள்ளது.
இன்று மாலை நான்கு 45 மணியளவில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது. அருகில் மின்சார சபை அலுவலகம் என்பதனால் மின்சார சபை உத்தியோகத்தர்கள் விரைந்து செயற்பட்டு அனர்தத்தை
 தவிர்த்துள்ளனர்.
பரந்தன் பகுதியில் இருந்து இரணைடுமடு நோக்கி சென்றுகொண்டிருந்த இராணுவத்தின் கனரக வாகனம் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகியதனால் குநித்த விபத்து எற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>READ MORE - இராணுவ வாகனம் ஏ9 வீதியில் மின் கம்பத்துடன் மோதியது

போதை தலைக் கேறிய தந்தை மகனுக்கு யாழில் செய்த செயல்

யாழ்ப்பாணத்தில் தந்தையின் தாக்குதலுக்கு உள்ளான மகன் தெல்லிப்பழை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளான்.
கடி காயங்களுக்கு இலக்கான ஐந்து வயதுச் சிறுவனே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
போதை தலைக் கேறிய தந்தையே சிறுவனைக் கடித்துள்ளார் என்று கூறப்படுகின்றது.
யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சிறுவன் கை, முதுகு , முகம் எனப் பல இடங்களிலும் கடி காயங்களுக்கு இலக்காகியுள்ளான்.
இந்த சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து சிறுவனின் தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசரணைகளி்ன் பின்னர் இன்று அவர் நீதிவான் மன்றில் முற்படுத்தப்படுவார் என்றும் பொலிஸார் 
தெரிவித்தனர்.
இதேவேளை சிறுவனின் உடல்களில் ஏற்பட்ட காயங்களுக்கு சிகிச்சையளிக்கப்படுகின்றது என்றும், தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>


READ MORE - போதை தலைக் கேறிய தந்தை மகனுக்கு யாழில் செய்த செயல்

தங்கையின் அழுகையை நிறுத்த அண்ணன் செய்த செயல்

இந்த உலகம் இன்னமும் இயங்கி கொண்டிருக்கிறது என்றால் அது கொஞ்ச நஞ்சம் மனித உயிர்களுக்கிடையே நடமாடி கொண்டிருக்கும் அன்பு என்ற ஒன்றினால்தான்!!
கலிபோர்னியாவில் நடைபெற்ற ஒரு சம்பவம்தான் இதனை நிரூபித்துள்ளது. அது தற்போது வீடியோவாகவும் வைரலாகியும் வருகிறது. குட்டிப் பெண் குழந்தை பாஸ்கட் போல் விளையாடுகிறாள். இதை அந்த குழந்தையின் அண்ணன் பார்த்து கொண்டே 
இருக்கிறான்.
அதற்காக அந்த பாஸ்கட் போல் கூடை பக்கத்திலேயே போய் நின்று கொள்கிறாள். ஆனால் அந்த கூடையோ மிகவும் உயரமாக இருக்கிறது. எட்டிக் கூட அந்த பந்தை போட முடியாத அளவுக்கு உயரம். அதனால், திரும்பத் திரும்ப பாலை அந்த கூடைக்குள் போட முயற்சி செய்கிறாள். முடியவே இல்லை. தோற்று தோற்றுப் போகிறாள். கடைசியில் அவளுக்கு அழுகையே வந்துவிட்டது. பீறிட்டு வெடித்து அழ 
ஆரம்பித்துவிடுகிறாள்.
இதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த அவள் அண்ணனோ பதறி ஓடிவருகிறான் தங்கையிடம். அழும் தங்கையை தன் பிஞ்சு கைகளால் சமாதானப்படுத்துகிறான் சிறுவன். குட்டித் தங்கையின் கண்ணீரை துடைத்து விடுகிறான். தன்னோடு அப்படியே அவளை கட்டிப்பிடித்து கொண்டு தேற்றுகிறான் சிறுவன். அப்போது 'நீ மிகவும் வலிமையானவள்.. அழாதே' என்று சொல்கிறான்.
அழுகையின் ஈரம் காயாத தங்கையின் கன்னத்தில் முத்தம் தருகிறான். பிறகு பாஸ்கட் பந்தை கைகளில் எடுத்து தந்து... அவளை தூக்கிக்கொண்டு கூடைக்கு நெருக்கமாக அண்ணன் செல்ல... பந்தை சரியாக இந்த முறை தங்கை கூடையில் போட... வெடித்து சிரிக்கிறாள் தங்கை. அழுத தங்கை இப்போது சிரிப்பதை பார்த்து தானும்
 சிரிக்கிறான் அண்ணன்.
பறந்து ஓடிக் கொண்டிருக்கும் இந்த விஞ்ஞான உலகில் இந்த காட்சியை ரசிப்பவர்கள் எத்தனை பேரோ தெரியாது. ஆனால், இந்த பாசப் பிணைப்பு வைரலாகி இணையத்தை கெட்டியாக பிடித்துக்
 கொண்டுள்ளது.
இதை இந்த குழந்தைகளின் தாயே தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். தன் இரண்டு குழந்தைகளும் பொசிட்டிவாகவும், உறவு, மற்றும் உணர்வுகளின் மகத்துவம் புரிந்தவர்களாகவும் இருப்பதை எண்ணிதான் மகிழ்வதாகவும் தெரிவித்துள்ளார்
நிலாவரை.கொம் செய்திகள் >>>


READ MORE - தங்கையின் அழுகையை நிறுத்த அண்ணன் செய்த செயல்

திடீரென இலங்கையில் செயலிழந்த பேஸ்புக் சிரமத்தில் பயனாளர்கள்

புதன், 21 நவம்பர், 2018

பேஸ்புக் வலைத்தளம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக செயலிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இலங்கையில், எந்த விதத்திலும் பேஸ்புக் தடை மேற்கொள்ளப்படவில்லை என இலங்கை மொழிபெயர்ப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.அந்த அமைப்பின்
 தலைவர் ரஜிவ் யசிரு குருவிட்டகே மெத்திவ் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.அவரது அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
பேஸ்புக் உட்பட சமூக வலைத்தளங்கள் நேற்றைய தினம் உலகம் முழுவதும் முடங்கியுள்ளது.இந்த முடக்கம் காரணமாக மில்லியன் கணக்கிலான சமூக வலைத்தள பயனாளர்கள் தங்கள் பேஸ்புக்
 மற்றும் இன்ஸ்ட்ராகிராம் கணக்குகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஐரோப்பா, தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலியா, போன்ற நாடுகளில் வாழும் பேஸ்புக் பயனாளர்களே இந்த நிலைமைக்கு அதிகமாக முகம் கொடுத்துள்ளனர்.சில மணி நேரங்களில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்ட்ராகிராம் ஆகிய வலைத்தளங்கள் வழமைக்கு திரும்பிய போதிலும், சில பயனாளர்களுக்கு குறைந்த வேகத்தில் இயங்குவதாக 
குறிப்பிடப்படுகின்றது.
இவ்வாறு பேஸ்புக் செயலிழந்தமையினால், தங்களுக்கு இணைய சேவை வழங்கும் நிறுவனங்களினால் பேஸ்புக் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளதா என இலங்கை பயனாளர்கள் சந்தேகம் 
வெளியிட்டுள்ளனர்.
இதன் காரணமாக இலங்கையில் திட்டமிட்டு பேஸ்புக் முடக்கம் செய்யப்பட்டதாக போலிப் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதனை இலங்கையர்கள் எவரும் நம்ப வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அதற்கமைய பேஸ்புக் வேகமாக இயங்க ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>READ MORE - திடீரென இலங்கையில் செயலிழந்த பேஸ்புக் சிரமத்தில் பயனாளர்கள்

யாழில் டெங்கு நோய்தாக்கத்தினால் 271 பேர் பாதிப்பு

செவ்வாய், 20 நவம்பர், 2018

யாழ். குடாநாட்டில் கடந்த ஒன்றரை மத காலப்பகுதிக்குள் 271 பேர் டெங்கு நோய்தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர் என யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைத் தகவல்கள் 
தெரிவித்துள்ளன.
மழை காலம் ஆரம்பித்துள்ள நிலையில் யாழ் மாவட்டத்தில் டெங்கு நோய் பரவுவதற்க்குரிய சாதகமான நிலை ஏற்ப்பட்டுள்ளது. கடந்த ஒன்றரை மாத காலப்பகுயில் 271 பேர் டெங்கு நோய்த் 
தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர்.
குறிப்பாக சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் 60 போர் வரையில் டெங்கு நோய்த்தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர். இனிவரும் காலங்களில் தொடர்ச்சியாக மழை பெய்யும் என எதிர்வு கூறப்படுவதால் பொது மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என சுகாதாரப்பிரிவினர் எச்சரிக்கை 
விடுத்துள்ளனர்.
ஒவ்வொரு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையிலும் டெங்கு நோய்த் தடுப்பு செயற்றிட்டம் 
ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - யாழில் டெங்கு நோய்தாக்கத்தினால் 271 பேர் பாதிப்பு

இளைஞன்யாழில் கழுத்து அறுக்கபட்ட நிலையில் மீட்பு

யாழ் அல்லைப்பிட்டியில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் வீதியோரமாக உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இளைஞன் ஒருவரை பொதுமக்கள் மீட்ட இந்த பரபரப்பு சம்பவம் நேற்று 
முன்தினம் (18.11.2018) இடம்பெற்றது.
அல்லைப்பிட்டி வாடிவீட்டுக்கு அண்மையில் வீதியோரமாக கழுத்தறுக்கப்பட்ட நிலையில் இளைஞன் ஒருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது அவ் வீதியால் வந்த முச்சக்கரவண்டி சாரதியொருவர் அவதானித்து பின் வேறு சிலரும் கூடி, அவசர நோயாளர் காவு வண்டி சேவைக்கு அறிவித்தனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற நோயாளர் காவு வண்டி, இளைஞனை மீட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக
 கூறப்படுகிறது.
இளைஞன் கழுத்தறுக்கப்பட்டிருந்த இடத்தில் அவரது துவிச்சக்கர வண்டி, செருப்பு என்பன வேறுவேறு திசைகளில் காணப்பட்டன.சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிசார் விசாரணைகளை 
மேற்கொண்டுள்ளனர்.
இது கொலை முயற்சியா அல்லது தற்கொலை முயற்சியா என்பதை இன்னும் உறுதிசெய்யவில்லையென பொலீஸ் தரப்பு 
செய்திகள் தெரிவிக்கின்றன.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - இளைஞன்யாழில் கழுத்து அறுக்கபட்ட நிலையில் மீட்பு

கந்தர்மடத்தில் ரயிலில் மோதி சுக்கு நூறாகிய கார்

யாழ்- காங்கேசன்துறையிலிருந்து கொழும்புநோக்கிப் பயணித்த ரயிலில் காரொன்று மோதுண்டதனால் ஒருவர் 
படுகாயமடைந்துள்ளார்.
கந்தர்மடம் இந்துமகளிர் வீதியில் பாதுகாப்பற்ற ரயில்கடவையில் இன்று நண்பகல் இந்தவிபத்து இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரே இதன்போது படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 காரில் பயணித்த குறித்த வர்த்தகர், பாதுகாப்பற்ற ரயில்கடவையை கடக்கமுற்பட்டபோதே எதிரேவந்த ரயில், காரைமோதி கந்தர்மடம் அரசடிவீதிவரை இழுத்துச்சென்றுள்ளது.
இந்தநிலையில் குறித்தவிபத்தில் காயமடைந்த வர்த்தகர், சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் 
அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - கந்தர்மடத்தில் ரயிலில் மோதி சுக்கு நூறாகிய கார்

கஜா புயலால் யாழில் 700ற்கும் அதிகமான குடும்பங்கள் பாதிப்பு

ஞாயிறு, 18 நவம்பர், 2018

கஜா புயல் காரணமாக யாழ்.மாவட்டத்தில் 700 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் 1000 இற்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம், அவற்றிற்கான புள்ளவிபரங்கள் சரியான முறையில் திரட்டப்படவில்லை என யாழ்.மாவட்ட அரசாங்க 
அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.யாழ்.மாவட்டத்தில் நிலை கொண்டிருந்த கஜா புயல் நேற்று முன்தினம் மாலை 6.10 மணிமுதல் நேற்று அதிகாலை வரை கடுமையாக
 வீசியதில் யாழ். மாவட்டத்தில் ஊர்காவற்துறை, வேலணை, தெல்லிப்பளை, காங்கேசன்துறை, உள்ளிட்ட பல பிரதேசங்களில் 700 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் 52 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், 500 வீடுகள் பகுதியாக சேதமடைந்துள்ளன. சிறுதொழில் முயற்சியாளர்களின் கடைகள் மற்றும் கரையோரப் பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்ட படகுகள் 20 சேதமடைந்துள்ளன.
நேற்றுமுன்தினம் மாலை 6 மணிமுதல் நேற்று காலை 10 மணியளவில் வரை புயலின் தாக்கம் ஏற்பட்டதாகவும், அதன் பின்னர் காற்றின் வேகம் குறைவடைந்து சுமூகமான நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார் .யாழ். மாவட்ட செயலகத்தினால் அவசர புள்ளி விபரங்கள் எடுக்கப்பட்டதன் அடிப்படையில் சுமார் 700 குடும்பங்கள்பாதிக்கப்பட்டுள்ளதாக 
இனங்காணப்பட்டுள்ளன.
விரிவான புள்ளிவிபரத்தினைப் பெற்றுக்கொள்ள முடியுமாயின், சுமார் 1000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>


READ MORE - கஜா புயலால் யாழில் 700ற்கும் அதிகமான குடும்பங்கள் பாதிப்பு

பாரிய இயற்கை சீற்றம் வட- கிழக்கில் ஏற்ப்படபோகிறது

சனி, 10 நவம்பர், 2018

எதிர்பார்த்தது போன்று சூறாவளி ஜாஜா சென்னை நகரை நோக்கி நகரவர்வதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது .
அடுத்த 24-36 மணி நேரத்தினுல் அந்தமான் தீவுகளிற்கு மேற்காக சூறாவளி உருவாகும் வாய்ப்பு உள்ளது அது 13 ஆம் திகதி ஆகும் போது மத்திய வங்காள விரிகுடாவில் அல்லது சற்று கீழாக
 category 2 சூறாவளியாக மாறும்.தற்போதுள்ள சூழலியல் நிபந்தனைகள் மாறாத விடத்து நவம்பர் 16 ஆம் திகதி category 3 சூறாவளியாக மாறி 180Km/h - 200km/h வேகத்தில் சென்னை நகரைத் தாக்கும். இந்த சூறாவளியின் கண் (Eye) இந்தியாவில் காணப்பட்டாலும் அதன் கண் சுவர் (Eye wall) ,யாழ்ப்பாண நகர் வரை காணப்படலாம்.
இதன் மழை வலயம் ( Rain band) இலங்கையின் மேற்கு வரை 
காணப்படலாம்.
வடகிழக்கு மாகாணங்களில் பயங்கர (Extremly heavy rain)பொழியும் .பயங்கரமான வெள்ள நிலமைகள் கூட ஏற்படலாம் .அத்துடன் யாழ்,கிளிநொச்சி, வட திருகோணமலை பகுதிகளில்
 கடல் அலைகள் 10-12 அடி வரை உயரலாம் ,யாழ் குடா நாட்டின் சில பகுதிகளில் கடல் நீர் நிலப் பகுதியில் உட்செல்ல வாய்ப்பு உள்ளது .
மேல் நிலமைகளை கருத்திற் கொண்டு வட- கிழக்கு மக்கள் பின்வரும் விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.
01வானிலை அவதான நிலைய எச்சரிக்கை வந்தவுடன் முழுத் தீவுப் பகுதி மக்களும் வெளியேர (Evacuation) தயாராக
 இருக்க வேண்டும்.
02.யாழ் குடாநாட்டில் கடலில் இருந்து 300m தூரத்தில் வாழும் மக்களும் வெளியேர தயாராக இருக்க வேண்டும்.
03.கிழக்கு ,வட மத்திய ,வட மேல் மாகாண மக்கள் பாரிய வெள்ள அனர்த்த்தை எதிர் கொள்ள தயாராக வேண்டும்.
04.அரச நிருவாக அலகுகள் பூரண ஆயத்துடன் இருக்க வேண்டும்.
05. சகல மீனவர்களும் உடன் கரைக்கு
 திரும்ப வேண்டும்.


READ MORE - பாரிய இயற்கை சீற்றம் வட- கிழக்கில் ஏற்ப்படபோகிறது

இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

ஒருதொகை சிகரட்களை சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவந்த கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருவர்  (வெள்ளிக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேநபர்களிடமிருந்து 41,000 சிகரட்கள் பறிமுதல் செய்யபபட்டுள்ளதாக பிரதி சுங்க பணிப்பாளர் விபுல மினுவன்பிட்டிய தெரிவித்துள்ளார்.இவற்றின் பெறுமதி சுமார் 20 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளதாக அவர் 
குறிப்பிட்டுள்ளார்.
மாரவில மற்றும் கொழும்பை சேர்ந்த 35 மற்றும் 38 வயதுடைய சந்தேகநபர்கள் இருவரும் தமது 205 பயணப்பொதியில் மிக சூட்சுமமாக மறைத்து வைத்து, துபாயிலிருந்து நாட்டிற்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் சம்பவம் தொடர்பில் விமான நிலைய சுங்கப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பிரதி சுங்க ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்
நிலாவரை.கொம் செய்திகள் >>>


READ MORE - இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

இரு மாணவிகளின் செயல் மெய்சிலிர்க்க வைத்தன

வெள்ளி, 9 நவம்பர், 2018

பாதையோரம் கிடந்த பணத்தொகையுடன் பெறுமதிமிக்க கைபேசியையும் பாடசாலை மாணவிகள் இருவர் கண்டெடுத்து அட்டன் பொலிஸ் நிலையத்தில் கைகளித்துள்ளனர்.
அட்டன் சென் கபிரியல் மகளீர் கல்லூரி மாணவிகளே 07.1.2018. மாலை அட்டன் பொலிஸ் நிலையத்தில் கையளித்ததாக அட்டன் பொலிஸ் நிலைய பொருப்திகாரி ஏ.எல் எம் ஜெமில் தெரிவித்தார்
குறித்த கல்லூரியில் கல்வி பயிலும் மாணவர்களின் தாயார்ஒருவரினால் கடந்த மாதம் 27 ம் திகதி தமது பிள்ளைகளை பாடசாலைலிருந்து வீடிற்கு அழைந்து வந்த போதே குறித்த கைபேசிடன் பணப்பையும் தொலைதுள்ளதாக அட்டன் பொலிஸ் நிலையில் முறைபாடு 
செய்யப்பட்டிருந்தது.
இந் நிலையிலே குறித்த பாடசாலையில் கல்விபயிலும் என் எம் ஹம்னா ஏ.எஸ் பவித்திரா ஆகிய மாணவிகளினால் 07.11.2018 மாலை பாடசாலை விட்டு வந்துக்கொண்டிருக்கையில் பாதையோரம் வடிகாணில் கிடந்த பணப்பையை கண்டு எடுத்து பொலிஸ் நிலையத்தில் 
ஒப்படைத்துள்ளனர்.
பணப்பையை பரிசோதணை செய்த பொலிஸார் 9 ஆயிரம் ரூபா பணமும் 15 ஆயிரம் ரூபா பெறுமதியான கைபேசியும்
 மீட்டுள்ளனர்.
முறைப்பாடு செய்திருந்த அட்டன் வில்பிரட் நகரை சேர்ந்த முறைப்பாட்டாளரை பொலிஸார் 08.11.2018 வரவைழைத்து பணத்தினையும் கைபேசியையும் கையளித்தனர். குறித்த மாணவிகளின் சிறந்த செயற்பாட்டை பாராட்டி பரிசில்ளும் அட்டன் பொலிஸார் 
வழங்கி வைத்தனர்.நிலாவரை.கொம் செய்திகள் >>>
READ MORE - இரு மாணவிகளின் செயல் மெய்சிலிர்க்க வைத்தன

நாட்டில் அச்சுறுத்தும் ஆபத்தான கம்பளிப்பூச்சி

ஆபத்தான கம்பளிப்பூச்சி இனங்கள், தற்போது  இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை உட்பட மூன்று மாவட்டங்களிலும் சேனா என்று அழைக்கப்படும் கம்பளிப்பூச்சி  காணப்படுவதாக தகவல்கள் பதிவாகியுள்ளன.
சேனா கம்பளிப்பூச்சி முதலில் நைஜீரியாவில் 
அடையாளம் காணப்பட்டது. அதன்பின்னர் சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் காணப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறிருந்த போதிலும், இப்போது இலங்கையில் மூன்று மாவட்டங்களில் ஆபத்தை விளைவிக்க கூடிய கம்பளி பூச்சிகள் காணப்படுவதாக விவசாயத் திணைக்களத்தினால் நேற்று நடாத்தப்பட்ட மாதாந்த ஆய்வு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு வகையான இடைவிடாத வாசனையை கொண்டிருக்கும் இந்த வகை புழுக்கள் ஒரே இரவில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்களை அழிக்கும் எனவும், ஒரு புழு ஒரு தடவையில் 200 முட்டைகள் இடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 
மேலும், இந்த கம்பளிப்பூச்சி சுமார் 100 கி.மீ. தூரம்வரை காற்று வீசும் பாதையில் பறந்து செல்ல முடியும். இதனால் கம்பளிப்பூச்சிகள் வேகமாக பரவுவதாக தெரிவிக்கப்படுகிறது.
 இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு பூச்சிக் கொல்லி வீச ஆரம்பிக்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், அதற்கு தேவையான நிதி உடனடியாக பெற்றுக்காடுக்கப்படும் என விவசாய திணைக்கள அலுவலர்களுக்கு விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர அறிவுறுத்தி உள்ளார்.
 கம்பளிப்பூச்சு சிறு பருவத்தில் பச்சையாக இருக்கும் எனவும் அதன்பின்னர் பழுப்பு நிறமாக மாறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
பூச்சியின் உடல் முழுவதும் பருக்கள் போன்று காணப்படும். தலையின் கீழ் "ய" எழுத்து போன்று வடிவம் 
காணப்படும்.
 எனவே, பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் மிக ஆபத்து வாய்ந்த கம்பளிப்பூச்சி பயிர்கள் மத்தியில் உள்ளதா என்பதைப் பற்றி வேளாண் அமைச்சகம் விவசாயிகள் விழிப்புடன் இருக்க வேண்டுமென
 கோருகிறது
 இந்த கம்பளிப்பூச்சி வகை பயிர்கள் மத்தியில் இருந்தால் உடனடியாக 1920 மற்றும் 081-2388316என்ற இந்த இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு கோரிக்கை
 விடுக்கப்பட்டுள்ளது.


READ MORE - நாட்டில் அச்சுறுத்தும் ஆபத்தான கம்பளிப்பூச்சி

நல்ல தகப்பனாக நீங்கள் கைவிட வேண்டிய 10 பழக்கங்கள்

செவ்வாய், 6 நவம்பர், 2018

குழந்தை வளர்ப்பு என்பது யாருக்குமே சுலபமாக இருந்ததில்லை. இதற்கு எங்கேயும் வழிமுறைகளை கொடுக்கப்பட்டதில்லை. அதே போல் அதனை சரியாக செய்வதற்கு நீங்கள் செய்ய வேண்டியதையும் செய்ய
 கூடாததையும் கூட யாரும் வரையறுத்தியதில்லை
. ஓய்வு வயதே இல்லாத
 முழு நேர பணியாகும் இது.ஆரம்ப காலங்கள் சற்று கடினமானதாகவும் முக்கியமானதாகவும் இருக்கும். பொதுவாக ஆண்கள் என்பவர்கள் பழக்க வழக்கங்களால் நிறைந்தவர்கள். அவர்கள் அன்றாட பழக்கவழக்கங்களில் இருந்து சற்று மாற்றி நடந்தாலும் கூட அது அவர்களுக்கு அசௌகரியத்தை அளிக்கும். இருப்பினும் ஒரு தந்தையாக மாறிய பிறகு உங்களுக்கு இந்த வசதி கிடைக்காது.
ஒரு ஆண் தந்தையாக மாறும் போது அவனுடைய பொறுப்புகள் பன்மடங்கு அதிகரிக்கிறது. நல்லதுக்கும் கெட்டதுக்கும் உள்ள வேறுபாட்டை உங்கள் குழந்தைக்கு சொல்லிக் கொடுக்க வேண்டியது உங்களது பொறுப்பாகும். யாருமே நூறு சதவீதம் ஒழுங்கு 
கிடையாது;
நம் அனைவரிடமும் ஏதாவது குறை இருக்கவே செய்யும். ஆனாலும் கூட நாம் நம் குழந்தைகள் சிறந்தவற்றை கற்க முயற்சி செய்கிறோம். நம்முடைய சரியற்ற பழக்க வழக்கங்கள் குழந்தைகளுக்கு வந்து விடக்கூடாது என்பதில் குறியாக இருப்போம். முதலில் இது கஷ்டமான வேலையாக இருக்கும். ஆனால் காலப்போக்கில் அது தரும் பலனை 
நீங்கள் உணர்வீர்கள்.
நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் அவ்வபோது தகப்பனாக உங்களின் குணாதிசயங்களை மதிப்பீடு செய்ய வேண்டும். இதனால் தீய பழக்கங்களை கை விட்டு, சிறந்தவற்றை கடைப்பிடிக்கலாம்.
 அப்படிப்பட்ட 10 சரியில்லாத பழக்க வழக்கங்களை பற்றி தான் இப்போது பார்க்க போகிறோம். இவற்றை நீங்கள் கொண்டிருந்தால் உடனடியாக நீங்கள் நிறுத்த வேண்டும்....
1. கடைப்பிடிப்பதில் சீரற்ற தன்மை:
நீங்கள் ஒரு விதிமுறையை போட்டால், அதனை பின்பற்ற வேண்டும். ஒரே விஷயத்திற்கு சில நேரங்களில் நீங்கள் கண்டிப்புடனும், சில நேரங்களில் அப்படி இல்லாமலும் இருப்பதாக உங்கள் குழந்தைகள் உணர்ந்தால், ஒழுக்கத்தை அவர்கள் மிகவும் சாதாரணமாக எடுத்துக் கொள்வார்கள். நீங்கள் அமைத்திருக்கும் எல்லைகளின் முக்கியத்துவத்தை அவர்களால் புரிந்து கொள்ள முடியாது.
2. கணிக்க முடியாத வகையில் இருப்பது:
உங்கள் குழந்தைக்கு நீங்கள் ஒரு பாறையாகவும் நங்கூரமாகவும் இருக்க வேண்டும். அப்போது தான் உங்கள் குழந்தை உங்களை முழுமையாக சார்ந்திருக்கும். தங்களுக்கு தேவைப்படும் போதெல்லாம் நீங்கள் அவர்களுடன் இருப்பீர்கள் என்பதில் அவர்களுக்கு சந்தேகம் ஏற்படாமல் இருப்பது மிகவும் முக்கியமாகும்.
3. தொழில்நுட்பத்துடன் ஒட்டியிருப்பது:
உங்கள் குழந்தையுடன் சிறந்த பந்தத்தை உண்டாக்க, ஸ்மார்ட் கருவிகள் மற்றும் தொழில்நுட்பத்துடனான உங்களது போதையை நீக்க வேண்டும். உங்களது குழந்தைகளுடனும் நீங்கள் தரமான நேரத்தை 
ஒதுக்க வேண்டும்.
4. எல்லைகள் இல்லாமல் இருத்தல்:
உங்கள் குழந்தையுடன் நண்பனாக பழக முயற்சி செய்யும் போது, முதலில் நீங்கள் ஒரு தந்தை என்பதை மறந்து விடாதீர்கள். காலம், பணம் மற்றும் அறநெறிகளின் மதிப்பை உங்கள் குழந்தை கற்றுக்கொள்ள உங்கள் குழந்தைக்கான வரம்புகளையும் குறிப்பிட்ட எல்லைகளையும் நீங்கள் வரையறுக்க வேண்டும்.
5. எப்போதும் இல்லை என கூறாமல் இருத்தல்:
உங்கள் குழந்தைகள் என்ன கேட்டாலும் அதற்கு சரி என சொல்வதன் மூலம் உங்கள் குழந்தையின் மீதான அன்பை நீங்கள் காட்ட வேண்டியதில்லை. சொல்லப்போனால், இதனால் நிராகரிப்புகளை கையாளுவதில் அவர்கள் திறனற்றவர்களாகி விடுவார்கள். அதனால் தேவைப்படும் போது முடியாது என சொல்வது அவசியமாகும்.
6. எப்போதுமே பிஸியாக இருப்பது:
உங்கள் வீட்டிற்கு அலுவலகத்தை கொண்டு வராதீர்கள். உங்கள் குடும்பத்திற்கும் உங்கள் நேரம் தேவை. உறவுகளை மதிக்கவும் பொக்கிஷமாக வைத்திருக்கவும் உங்கள் குழந்தைக்கு
 தேவையான பண்பு இது.
7. அச்சுறுத்தல்:
உங்கள் விருப்பம் போல் உங்கள் குழந்தைகள் நடக்க அவர்களை அச்சுறுத்துவது அவர்களை கிளிர்ச்சி செய்வர்களாக மாற்றி விடும். அவர்களின் தனித்துவத்தை பாராட்டுங்கள்.
8. தொடர்ச்சியான ஒப்பீடு:
உங்கள் குழந்தைகளை பிறருடன் தொடர்ச்சியான முறையில் ஒப்பீடு செய்தால் அது அவர்களின் சுயமரியாதையை குறைக்கும். அவர்களின் நம்பிக்கையை இழக்கச் செய்து விடாதீர்கள்.
9. செவி சாய்க்காமல் இருத்தல்:
குழந்தைகளின் மனதில் என்ன ஓடுகிறது என்பதை கேளுங்கள். மாறாக உங்களது தத்துவங்களையே அவர்களிடம் திரும்ப திரும்ப கூறி கொண்டிருக்காதீர்கள்.
10. ஆரோக்கியமற்ற பழக்க வழக்கங்களை கைவிடுதல்:
நீங்கள் அதிகமாக புகைப்பிடித்தாலோ அல்லது மது அருந்தினாலோ, உங்கள் குழந்தைகள் முன்னால் அவற்றை செய்யாமல் 
குறைத்துக் கொள்ளுங்கள்READ MORE - நல்ல தகப்பனாக நீங்கள் கைவிட வேண்டிய 10 பழக்கங்கள்

யாழில் இருந்து கொழும்பு சென்ற இளைஞனை காணவில்லை

யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற இளைஞனை காணவில்லை என பெற்றோரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
  முல்லைத்தீவு பாலிநகரை சேர்ந்த குகதாசன் உமேஷ் (வயது 21) எனும் இளைஞனே காணாமல் போயுள்ளார்.
 குறித்த இளைஞன் கடந்த 31ஆம் திகதி காலை முல்லைத்தீவில் இருந்து யாழில் உள்ள தனது சகோதரியின் வீட்டுக்கு சென்றுள்ளார்.
 பின்ர் அன்றைய தினம் இரவு சகோதரியிடம் தான்
 கொழும்பு செல்வதாக கூறி இரவு 7 மணியளவில் சகோதரியின் வீட்டில் இருந்து புறப்பட்டு உள்ளார்.
 அதன் பின்னர் மறுநாள் முதலாம் திகதி தாயார் தொலைபேசி ஊடாக அழைப்பினை ஏற்படுத்த முயன்ற போது அவரது தொலைபேசி
 செயலிழந்து உள்ளது. 
 அதன் பின்னர் இளைஞனுடன் எவ்வித தொடர்புகளும் கிடைக்க வில்லை.
இந்நிலையில் நேற்றைய தினம் 3ஆம் திகதி மல்லாவி காவல் நிலையத்தில் இளைஞர் காணாமல் போனமை தொடர்பில் பெற்றோரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு உள்ளது


READ MORE - யாழில் இருந்து கொழும்பு சென்ற இளைஞனை காணவில்லை