வங்கி கடன் அட்டை மூலம் பிரான்ஸில் தொடரூந்து பயணச்சீட்டு

வெள்ளி, 4 ஆகஸ்ட், 2023

பிரான்ஸில் நவிகோ அட்டைகள் மற்றும் பயணச்சிட்டைகளுக்குப் பதிலாக வங்கி கடன் அட்டையை பயன்படுத்தி நொடிக்குள் பயணச்சீட்டை பெறும் 
வசதி வரவுள்ளது.
இந்த புதிய வசதியை நடைமுறைக்கு கொண்டுவருவதற்குரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொலைபேசிகளில் இருந்து பணம் செலுத்த முடியாதவர்கள், நேரடியாக வங்கி கடன் அட்டை மூலம் 
நேரடியாக பணம் செலுத்திவிட்டு தங்களது பயணத்தை 
தொடரமுடியும். 
இது தொடர்பான ஆய்வுகளை தொடருந்து நிறுவனமான Thales மேற்கொண்டு வருகிறது. ‘அநேகமான பயணிகளுக்கு மிக இலகுவான வழிமுறைகளே தேவைப்படுகிறது. குறிப்பாக முதியவர்கள் இலகுவாக
 பயணக் கட்டணங்களை செலுத்தக்கூடிய வகையில் உருவாக்கப்பட வேண்டும்!’ என தெரிவித்த அதன் ஊழியர்கள், பல்வேறு பதிவேற்றங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது எனவும் 
தெரிவித்தனர்.
இந்த நடைமுறையை 2025ம் ஆண்டின் ஆரம்பத்தில் பிரான்ஸில் கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. என்பதும் குறிப்பிடத்தக்கது 


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>0 கருத்துகள்:

கருத்துரையிடுக