நாட்டில்மில்லியன் அஸ்வெசும பயனாளிகளுக்கு கொடுப்பனவுகள் வழங்க நடவடிக்கை

செவ்வாய், 29 ஆகஸ்ட், 2023

1.5 மில்லியன் ‘அஸ்வெசும’ பயனாளிகளுக்கு அரசாங்கம் கட்டம் கட்டமாக கொடுப்பனவுகளை ஆரம்பித்துள்ளதாக நிதியமைச்சர் ஷெஹான்
 சேமசிங்க தெரிவித்தார்.
 உதவி தேவைப்படும் இரண்டு மில்லியன் பயனாளிகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த திட்டம் உள்ளது என்றார்.
 முதல் கட்டத்தில் மட்டும், 689,803 பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் மொத்தம் 4.395 பில்லியன் ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.
 மாற்றுத்திறனாளிகள், முதியோர் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவுகள் ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டன.
 இதற்கிடையில், வார நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அனைத்து விசாரணைகளையும் அஸ்வெசும அவசர தொலைபேசி எண் 1924 க்கு தெரிவிக்க முடியும் என்று இராஜாங்க அமைச்சர் கூறினார்.
என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக