திருகோணமலையில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 10 பேர் கொண்ட குழுவொன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருகோணமலை நிலாவெளி மற்றும் லங்காபடுன பிரதேசத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 10 பேரையே இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இந்த தேடுதல் நடவடிக்கைகளின் போது, சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட மீன்கள், சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட 116 கடல் அட்டைகள், மூன்று படகுகள் ஆகியவற்றை கடற்படையினர் கைப்பற்றினர்.
நிலாவெளி கடற்பகுதியில் கடற்படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் சந்தேகத்துக்கிடமான படகுகளில் பயணத்தவர்களை சோதனையிட்ட போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டர்.
மேலும், லங்கனபுன கடற்பரப்பில் கடல் அட்டைகளை பிடிப்பதற்காக படகொன்றில் சென்ற 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை நேற்று ( 04) அதிகாலையில்
இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் 24 முதல் 48 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் இவர்கள் தம்பலகமுவ மற்றும் சீனக்குடாவைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் திருகோணமலை கடற்றொழில் பரிசோதகரிடம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இவர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.என்பதும் குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக