சூரிய ஒளி மின்சாரத் திட்டத்தின் கீழ், அரைவாசிப் பணிகள் நிறைவடைந்த 11,000 வீடுகள் மின்சார விநியோகத்திற்காக தெரிவு
செய்யப்பட்டுள்ளதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த 11,000 வீடுகள்
அதிகாரசபையினால் நடைமுறைப்படுத்தப்பட்ட 15 திட்டங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளன.
குறைந்த வருமானம் பெறும் 25,000 வீடுகளுக்கு சோலார் பேனல்கள் மூலம் மின்சாரம் வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதுடன், அது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவினால்
சமர்ப்பிக்கப்பட்டது.
பாதி கட்டி முடிக்கப்பட்ட குறைந்த வருமானம் பெறும் 25,000 வீடுகளை தேர்வு செய்து அந்தந்த வீடுகளை பூரணப்படுத்தி சோலார் பேனல்கள் அமைக்க முன்மொழியப்பட்டது. இதுவரை தெரிவு செய்யப்பட்டுள்ள
11,000 பாதி கட்டி முடிக்கப்பட்ட வீடுகளுக்கு மேலதிகமாக மேலும் 14,000 வீடுகளும் இந்த நாட்களில் தெரிவு செய்யப்படவுள்ளன.
இந்தத் திட்டத்தின் ஊடாக 25,000 வீடுகளுக்கு மின்சாரம் வழங்குவது மட்டுமின்றி, 500 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க சக்தியை தேசிய மின்கட்டமைப்பில் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
என்பதும் குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக