அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாகாணத்தில் வசித்து வருபவர் ஜெப் இல்க். அவருடைய மனைவி அமலியா ரெயின்வில்லே. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், இவர்களின்
வீட்டு கூரை மீது 20-08-2023.இன்று காலை திடீரென இடி விழுந்தது போன்ற பெரிய சத்தம் கேட்டது.இதனால், இந்த தம்பதி
அலறியடித்து கொண்டு மேல்மாடிக்கு ஓடியுள்ளனர். ஆனால், இது எதுவும் தெரியாமல் அவர்களின் குழந்தைகள் அறையொன்றில் உறங்கி கொண்டிருந்தனர்.
பின்னர், வீட்டின் பிற இடங்களுக்கு சென்று பார்த்தபோது, இவர்கள் வீட்டின் மீது பெரிய பனிக்கட்டி ஒன்று விழுந்துள்ளது தெரிய வந்தது. 7.5 முதல் 10 கிலோ எடை கொண்ட அந்த பனிக்கட்டி துண்டு விழுந்ததில் வீட்டின் மேல்பகுதியில் பெரிய ஓட்டை விழுந்துள்ளது. எனினும், இதனால்
ஒருவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என நியூயார்க் போஸ்ட் தெரிவிக்கின்றது. இதுபற்றி இல்க் கூறும்போது, இதுவரை
கேட்டிராத வகையில் பலத்த சத்தம் கேட்டது. இது என்னவென்று எனக்கு தெரியவில்லை.
வானத்தில் மேகமும் சூழ்ந்திருக்கவில்லை என்று கூறியுள்ளார். இந்த பனிக்கட்டி விழுந்ததில், வீட்டின் மேற்கூரை பகுதியில் ஓட்டை போட்டு, 2 அடி விட்டத்திற்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. ஆனால், வீட்டின்
உள்ளே அதனை விட பெரிய பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என
இல்க் கூறுகிறார். இல்க், அமலியா இருவரும் சேர்ந்து 5 கிலோ பனிக்குவியலை பை ஒன்றில் சேகரித்துள்ளனர். எனினும், இன்னும் நிறைய
பனிக்கட்டிகள் பரவி கிடக்கின்றன. இந்த பனி துண்டு,
போஸ்டன் லோகன் சர்வதேச விமான நிலையத்திற்கு சென்ற ஒரு விமானத்தில் இருந்து விழுந்திருக்க கூடும் என அந்த தம்பதியினர் நம்புகின்றனர். இந்த சம்பவம் பற்றி மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது.எனவும் தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக