நாட்டில் மின்சார பேருந்துகளின் சேவை எதிர்வரும் காலங்களில் ஆரம்பிக்கப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம்
தெரிவித்துள்ளது.
இன்று (13.08) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன,இதனை
அறிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “அந்த பேருந்துகளில் இலத்திரனியல் அட்டையை மாத்திரமே பயன்படுத்த முடியும் எனவும் இதன் மூலம் கொழும்பில் போக்குவரத்து நெரிசல் குறையும் எனவும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பயன்படுத்தப்படும் எந்த அட்டையையும் (ATM) நீங்கள் பயன்படுத்தலாம். இந்தப் பேருந்துகளை கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் அமைக்குமாறு விசேட வேண்டுகோள் விடுக்கின்றோம்.
கார்களில் பயணிக்கும் மக்களை பேருந்தில் செல்லச் சொல்லுங்கள். மாற்றுத்திறனாளிகள் இந்த பேருந்துகளில் பயணிக்கலாம். பேருந்துகள் நிறுவப்பட்டதும் வாகனங்கள் கொழும்புக்கு வருவது குறித்து அரசு முடிவெடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
என்பதும் குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக