சத்தீஸ்கர் மாநிலத்தில் இளம் காதல் ஜோடிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் குறித்த இருவரும் மிகவும் உயரமான மின் கோபுரத்தின் உச்சிக்கு ஏறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,சத்தீஸ்கர் மாநிலம் கோரேலா - பென்டரா - மார்வாகி பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர், அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை கடந்த 1 ஆண்டுகளாக
காதலித்து வந்துள்ளார்.
இவ்வாறு இருக்கையில், கடந்த சில நாட்களாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.இதனையடுத்து இளம்பெண் காதலனுடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்து அப்பகுதியில் உள்ள 150 அடி உயர மின்
கோபுரத்தில் ஏறியுள்ளார்.
இதைப்பார்த்த அவரது காதலனும் மின் கோபுரத்தில் காதலியின் பின்னாலேயே ஏறியுள்ளார்.தனது காதலி எந்த விபரீத முடிவும் எடுத்துவிடக் கூடாது என்பதற்காக அவரிடம் பேச்சு கொடுத்துள்ளார்.
இருப்பினும், அது மேலும் பிரச்சனையை ஏற்படுத்தி உள்ளது. அங்கு வைத்தும் இருவரும் சண்டை போட்டுள்ளனர்.
இதுபற்றிய தகவல் பொலிஸாருக்கு கிடைத்ததும் அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றுள்ளனர்.
பொலிஸார் அந்த ஜோடியை கீழே இறங்குமாறு அறிவுறுத்தியதை தொடர்ந்து அரை மணிநேரத்துக்கு பிறகு இருவரும் மின் கோபுரத்தில் இருந்து கீழே இறங்கியுள்ளளர். என்பதும் குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக