ஒட்டப்பட்ட விளம்பர சுவரொட்டிகளுக்கு பிரான்ஸில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது

வியாழன், 30 நவம்பர், 2023

பரிசில் விரைவில் திறக்கப்பட உள்ள அமெரிக்க உணவகம் ஒன்று, பரிசின் வீதிகளில் சுவரொட்டிகளை ஒட்டி விளம்பரப்படுத்தியுள்ளது. இந்த சுவரொட்டிகள் ஒட்டியமைக்காக குற்றப்பணம் 
அறவிடப்பட உள்ளது.
 அமெரிக்காவின் donuts Krispy Kreme நிறுவனம் முதன்முதலாக பிரான்சில், குறிப்பாக பரிசில் தனது முதலாவது கிளையை வரும் டிசம்பர் 6 ஆம் திகதி திறக்க உள்ளது. அவர்களது வருகையை சுவரொட்டிகள் மூலம் விளம்பரப்படுத்தி வருகிறனர்.
 வீதி வீதியாக விளம்பரப்படுத்தி வருகின்றனர். (மகரூன் உணவுக்கு இனி வேலை இல்லை. சிறந்த குரோசண்ட் உணவு பரிசுக்கு வருகை தந்துள்ளது” என அர்த்தப்படும் விதமாக ("Macaron démission! - "le meilleur croissant de Paris", "Ça aurait été plus logique d'ouvrir à Trouville") பல வாசகங்களை 
தாங்கிக்கொண்டு இந்த சுவரொட்டிகள் பரிசின் பல வீதிகளில்
 காணக்கூடியதாக உள்ளது.
இந்த சுவரொட்டிகள் அனுமதிக்கு மீறிய விளம்பரமாக காட்சியளிப்பதால் பரிசின் துணை முதல்வர் Emmanuel Grégoire, குறித்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிவித்தார்.
 சுவரொட்டிகளை அகற்றி சுத்தப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளுவதற்காக பெரும் குற்றப்பணம் ஒன்று அறவிடப்பட உள்ளதாகவும், சுவரொட்டி ஒன்றுக்கு ₤1,500 யூரோக்கள் வீதம் குற்றப்பணம் அறவிடப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
என்பதும் குறிப்பிடத்தக்கது  


READ MORE - ஒட்டப்பட்ட விளம்பர சுவரொட்டிகளுக்கு பிரான்ஸில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது

சட்டவிரோதமாக குவைத்தில் தங்கியிருந்த பணியாளர்கள் நாடு கடத்தப்பட்டனர்

புதன், 29 நவம்பர், 2023

 சட்டவிரோதமாக குவைத்தில் தங்கியிருந்த இலங்கை வீட்டுப் பணியாளர்கள் 35 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.  
இதன்படி, விசா இன்றி குவைத்துக்கு வேலைக்குச் சென்று தங்கியிருந்த 33 வீட்டுப் பணியாளர்களுடன் மேலும் இரு பணியாளர்களும் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 குவைத்தில் உள்ள இலங்கை தூதரகத்துக்கும் அந்நாட்டு உள்துறை அமைச்சகத்துக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து குறித்த குழுவினர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - சட்டவிரோதமாக குவைத்தில் தங்கியிருந்த பணியாளர்கள் நாடு கடத்தப்பட்டனர்

நாட்டில் கிளிநொச்சியில் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மீனை பதப்படுத்தும் பயிற்சி

செவ்வாய், 28 நவம்பர், 2023

கிளிநொச்சி மாவட்டம் இரணை தீவு பகுதி மீனவ பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தெரிவு செய்யப்பட்ட மீனவ பெண்களுக்கு மழைக்காலங்களில் மீனை ஜாடி மூலம் பதப்படுத்தி நீண்ட காலம் பயன் படுத்தும் செயல் திட்ட பயிற்சி  இன்று (28) வழங்கப்பட்டுள்ளது.  

மழைக்காலங்களில் மீன்களின் விலை குறைவடைந்து காணப்படுவதோடு மீனை கருவாடு மற்றும் ஏனைய முறைகளில் பதனிட முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் சில நேரங்களில் தமது வீட்டுத் தேவைக்காக கூட மீனை பெற்றுக்கொள்ள முடியாத நிலையும் ஏற்படுகிறது.  
இந்த நிலையில் மீனை எவ்வித இரசாயன பதார்த்தங்களும் பயன்படுத்தாது 'ஜாடி' முறையில் பதப்படுத்தும் பயிற்சி இன்றைய தினம் (28) வழங்கி வைக்கப்பட்டது.  

மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம்(மெசிடோ) ஏற்பாட்டில் குறித்த நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில் கிளிநொச்சி மாவட்டம் இரணை தீவு இரணைமாதா நகர் மீனவ கூட்டுறவு சங்க கட்டிடத்தில் குறித்த பயிற்சி முன்னெடுக்கப்பட்டது. 

இதன் போது இரணைமாதா நகர், அன்பு புரம், முழங்காவில் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 35 மீனவ பெண்கள் கலந்து கொண்டு குறித்த பயிற்சியை நிறைவு செய்தனர்.
அத்துடன்  மன்னார் மாவட்ட முன்னால் கடற்றொழில் உதவி பணிப்பாளர் ஏ.மெராண்டா கைத்தொழில் அபிவிருத்தி சபையின் மன்னார் மாவட்ட பிரதி பணிப்பாளர் ஜே.எம்.ஏ.லெம்பேட் கிளிநொச்சி மாவட்ட பெண்கள் அபிவிருத்தி அலுவலர் மற்றும் மன்னார் மெசிடோ நிறுவன பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.  

குறித்த பயிற்சியின் போது மீன்களை கொள்வனவு செய்து சுத்தப்படுத்தி எவ்வித ரசாயன பொருட்களும் இன்றி உப்பு மற்றும் கொருக்கா புளி ஆகியவற்றை மாத்திரம் பயன்படுத்தி 'ஜாடி' முறையில் மீன்களை பதப்படுத்தி நீண்ட நாட்களுக்கு பயன்படுத்துவது மற்றும் சந்தைப்படுத்துதல் போன்ற செய்முறை பயிற்சியும் வழங்கப் பட்டமை.
என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் கிளிநொச்சியில் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மீனை பதப்படுத்தும் பயிற்சி

இந்தப்பகுதியில் வாழும் மக்கள் கனடாவில் அதிக கோபப்படுபவர்களாக காணப்படுகின்றனர்

திங்கள், 27 நவம்பர், 2023

கனடாவில் கோபமான மக்கள் வாழும் பகுதியாக அல்பர்ட்டா மாகாணம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. கனடியன் ரிசர்ச் இன்சையிட் கவுன்ஸில் என்ற அமைப்பினால் நடத்தப்பட்ட ஆய்வு மூலம் இந்த விடயம் 
தெரியவந்துள்ளது.
 வீடமைப்பு, பணவீக்கம் மற்றும் அரசியல் போன்ற விடயங்களில் மக்கள் அதிருப்தி கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் அதிக
 கோபமான மக்கள்
 வாழும் பகுதியாக அல்பர்ட்டா மாகாணம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
 இரண்டாவது அதிக கோபமான மக்கள் வாழும் பகுதியாக ஒன்றாரியோ மாகாணம் கருதப்படுகின்றது. அட்லாண்ட்டிக் கனடா அடுத்த நிலையை வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.என்பதும் குறிப்பிடத்தக்கது


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - இந்தப்பகுதியில் வாழும் மக்கள் கனடாவில் அதிக கோபப்படுபவர்களாக காணப்படுகின்றனர்

நாட்டில் அதிக நுளம்பு பெருகும் மாவட்டங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன

ஞாயிறு, 26 நவம்பர், 2023

நாட்டில் அதிகம் நுளம்பு பெருகும் இடங்களாக மேல்,  தென்,  மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.  
இந்த வருடத்தில் இதுவரை 74,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அதன் பணிப்பாளர் வைத்தியர் நளின் ஆரியரத்ன
 தெரிவித்துள்ளார்.  
டெங்கு காய்ச்சல் தடுப்புக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத்திட்டம் குறித்தும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
என்பதும் குறிப்பிடத்தக்கது


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் அதிக நுளம்பு பெருகும் மாவட்டங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாடு செல்ல முற்பட்ட இருவர் கைது

சனி, 25 நவம்பர், 2023

வெளிநாட்டுக்கு சட்டவிரோதமான முறையில் வெளிநாடு செல்ல முயற்சித்த இரு இளைஞர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
தரகர் ஒருவரால் தயாரிக்கப்பட்ட விசாக்களை பயன்படுத்தி ஒஸ்ரியா செல்ல முயன்ற இரு இளைஞர்களே இவ்வாறு கைது
 செய்யப்பட்டுள்ளனர்.  
குறித்த இரு இளைஞர்களும் கிளிநொச்சி மற்றும் முள்ளிவாய்க்கால் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் பொரளை 
பிரதேசத்தில் 
உள்ள தரகர் ஒருவர் அவர்கள் தொடர்பான ஆவணங்களை தயாரித்துள்ளதாகவும் விசாரணையின் போது 
தெரியவந்துள்ளது.
துருக்கி ஏர்லைன்ஸ் விமானம் TK 731 இல் அவர்கள் புறப்பட வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாடு செல்ல முற்பட்ட இருவர் கைது

நாட்டில் சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு

வெள்ளி, 24 நவம்பர், 2023

நாட்டில் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதியில் வெளியிட எதிர்பார்ப்பதாக என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்
இதேவேளை இந்த நாட்களில் பரீட்சை பெறுபேறுகளை கணனிமயமாக்கும் பணிகள் இடம்பெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், பொதுப் பரீட்சை பெறுபேறுகளை 
இன்னும் இரண்டு நாட்களில் வெளியிட முடியும் என அண்மையில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்திருந்தமையும் என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு

வதிரி அரசடிப் பகுதியில் உள்ள, பலநோக்கு கூட்டுறவுச் சங்க கிளை ஒன்றில், திருட்டு

வியாழன், 23 நவம்பர், 2023

யாழ் வதிரி அரசடிப் பகுதியில் உள்ள, பலநோக்கு கூட்டுறவுச் சங்க கிளை ஒன்றில், கூரை பிரித்து திருட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, 
நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
 செய்யப்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு, இந்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கட்டைவேலி பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்குரிய கிளையை, நேற்று மாலை மூடிவிட்டு சென்ற கிளை முகாமையாளர், இன்று காலை, கிளையை திறக்க சென்ற போது, கூரை உடைக்கப்பட்டு திருட்டு மேற்கொள்ளப்பட்டமை தெரியவந்துள்ளது.
அதனையடுத்து, நெல்லியடி பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்தனர். என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>







READ MORE - வதிரி அரசடிப் பகுதியில் உள்ள, பலநோக்கு கூட்டுறவுச் சங்க கிளை ஒன்றில், திருட்டு

நாட்டில் ஊவா மாகாணத்தில்மேலதிக வகுப்புக்களுக்கு தடை விதிக்கப்பட்டது

புதன், 22 நவம்பர், 2023

நாட்டில் ஊவா மாகாணத்தில் மேலதிக வகுப்புக்கள்.22-11-2023. இன்று புதன்கிழமை முதல் தடை செய்யப்பட்டுள்ளன.
ஊவா மாகாண பாடசாலைகளில் தரம் 1 முதல் 5 வரையான மாணவர்களுக்கு பாடசாலை நேரத்திற்கு மேலதிகமாக ஆசிரியர்களால் நடத்தப்படும் கட்டணம் அறவிடப்படும் மேலதிக வகுப்புக்களே இவ்வாறு தடை 
செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை தடை உத்தரவை பின்பற்றாத ஆசிரியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் ஊவா மாகாணத்தில்மேலதிக வகுப்புக்களுக்கு தடை விதிக்கப்பட்டது

பிரான்சில் பெற்றோல் மற்றும் டீசல் விலைகளில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது

செவ்வாய், 21 நவம்பர், 2023

பெற்றோல் மற்றும் டீசலின் விலைகளின் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சர்வதேச சந்தைகளில் ஏற்பட்டுள்ள கச்சா எண்ணையின் விலைமாற்றத்துக்கு ஏற்றால் போல் பிரான்சிலும் விலை மாற்றம் 
ஏற்பட்டுள்ளது.
 டீசல் ஒரு லிட்டரின் விலை 0.7 சதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது. அதன் புதிய விலை தற்போது ₤1.8011 யூரோக்களாகும். 
அதேவேளை, 
பெற்றோல் (SP95-E10) ஒரு லிட்டரின் விலை ₤0.2 சதங்களினால் அதிகரித்துள்ளது.அதன் புதிய விலை ₤1.8189 yஊரோக்களாகும். உலக சந்தையில் கச்சா எண்ணை ஒரு பரல் $1.9 டொலர்கள் 
விலை வீழ்ச்சியை சந்தித்து தற்போது $82.4 டொலர்களுக்கு 
விற்பனையாகிறது. அதையடுத்தே டீசல் விலை 
வீழ்ச்சியடைந்துள்ளது.
 எவ்வாறாயிலும் எரிபொருட்களின் விலை கடந்த செப்டம்பர் மாதத்தோடு ஒப்பிடுகையில் விலை வீழ்ச்சியைடைந்துள்ளது. செப்டம்பரின் பெற்றோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை 2 யூரோக்களை நெருங்கியிருந்தமை
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





READ MORE - பிரான்சில் பெற்றோல் மற்றும் டீசல் விலைகளில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது

இலங்கையில் சீனிக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கம்

திங்கள், 20 நவம்பர், 2023

இலங்கையில் சீனிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ 
தெரிவித்துள்ளார்.
இதன்படி எதிர்காலத்தில் சதொச மற்றும் கூட்டுறவு அங்காடிகள் ஊடாக விற்பனை செய்யப்படும் ப்ரவுன் சீனியை 275 ரூபாவிற்கு விற்பனை செய்யவுள்ளதாக அமைச்சர் மேலும்
 தெரிவித்துள்ளார்.
இதேவேளை சமீப காலத்தில் சீனிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், சில இடங்களில் பதிக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிய நிலையில், மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - இலங்கையில் சீனிக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கம்

பொலிகண்டி அகதி முகாம்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் அவசர உதவிகளை வழங்குமாறு கோரிக்கை

ஞாயிறு, 19 நவம்பர், 2023

வடக்கு மாகாணத்தில் யாழ் பொலிகண்டியில் கடந்த ஒரு வார காலத்திற்கு மேலாக நீடித்து வந்த சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணம் வலி வடக்கு 
பகுதியில் இலங்கை இராணுவத்தால் 1990 ஆண்டில் 
பலவந்தமாக வெளியேற்றப்பட்ட நிலையில், தற்காலிக முகாம்களில் வசித்து வந்த குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட குறித்த குடும்பங்களின் 
அழைப்பின் பேரில் 18.11-2023 .அன்று     மன்னார் சமூக 
பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் தலைவர் ஜாட்சன் பிகிறாடோ தலைமையிலான குழுவினர் குறித்த பகுதிக்கு கள விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். 
குறித்த முகாம்களில் வசிக்கும் பல குடும்பங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அக் குடும்பங்கள் வசிக்கும் பகுதிக்கு 
அருகாமையில் உள்ள பலர் டெங்கு தாக்கத்திற்கும் 
உள்ளாகியுள்ளனர் .  
இதன் அடிப்படையில் குறித்த  மக்களின் தற்போதைய தேவை தொடர்பில் மெசிடோ நிறுவனத்தினர் கலந்துரையாடல் ஒன்றை 
மேற்கொண்டிருந்தனர்.  
குறித்த முகாம்கள் தொடர்ச்சியாக ஒவ்வொரு மழைக்காலங்களிலும் வெள்ள பாதிப்புக்கு உள்ளாகி வரும் நிலையில் சில மக்களுக்கு 
காணிகள் தமது சொந்த நிலங்களை விட வேறு பகுதிகளில் வழங்கப்பட்ட போதிலும் வீடுகளை அமைப்பதற்கு அரசாங்கத்தால் 
இதுவரை எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை எனவும் இதனாலேயே குறித்த மக்கள் அகதி முகாமில் வாழ்ந்து வருவதாகவும் 
தெரிவித்துள்ளனர். 
இந்நிலையில் தற்காலிகமாக  வெள்ளப் பாதிப்பை எதிர்கொள்வதற்கான உதவிகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை 
செய்து தருமாறு மக்கள்கோரிக்கை விடுத்துள்ளனர்
 என்பதும் குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

READ MORE - பொலிகண்டி அகதி முகாம்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் அவசர உதவிகளை வழங்குமாறு கோரிக்கை

இலங்கையில் வட் வரியை அரசு முறையாகப் பெறுகிறதா: கோப் குழு கேள்வி

சனி, 18 நவம்பர், 2023

மக்கள் செலுத்தும் வட் வரியை அரசு முறையாகப் பெறுகிறதா? அதை சரிபார்க்க ஒரு அமைப்பை தயார் செய்ய கோப்  குழு உள்நாட்டு வருவாய் துறைக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.  
உள்நாட்டு இறைவரி திணைக்களத்திடம் மேற்கொள்ளப்பட்ட  விசாரணையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.  
தற்போது சுமார் 13,000 நிறுவனங்கள் VAT வரியில் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், அதற்கான வரியை அரசாங்கத்திற்கு செலுத்துவது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக உள்நாட்டு இறைவரி திணைக்கள அதிகாரிகள் 
தெரிவித்துள்ளனர்.  
இந்நிலையில் மக்களிடம் இருந்து VAT வசூலிக்கும் நிறுவனங்கள் சரியான முறையில் வரிகளை அரசாங்கத்திற்கு பெற்றுக்கொள்ளும் முறைமையொன்றை தயார் செய்ய வேண்டுமென குழு சுட்டிக்காட்டியுள்ளது
.என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - இலங்கையில் வட் வரியை அரசு முறையாகப் பெறுகிறதா: கோப் குழு கேள்வி

நாட்டில் மின் கட்டணம் மீண்டும் அதிகரிக்குமா நிதி இராஜாங்க அமைச்சர் கருத்து

வெள்ளி, 17 நவம்பர், 2023

நாட்டில் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைய, அரச வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் எதிர்வரும் ஜனவரி 
மாதம் முதல் வட் வரியை 18 சதவீதமாக அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனினும் வட் வரி அதிகரிக்கப்படுகின்ற போதிலும், அது மின் கட்டணம் உள்ளிட்ட பல துறைகளில் தாக்கம் செலுத்தாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், வட் வரி தற்காலிகமாகவே நடைமுறையில் இருக்கும் என்பதால், அது பல்வேறு துறைகளில் தாக்கம் செலுத்தாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் மின் கட்டணம் மீண்டும் அதிகரிக்குமா நிதி இராஜாங்க அமைச்சர் கருத்து

சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய பேக்கரி மற்றும் உணவகங்களுக்கு யாழ் நகரில் சீல்

வியாழன், 16 நவம்பர், 2023


யாழ் மாநகர சபையின் வண்ணார்பண்ணை பகுதி பொது சுகாதார பரிசோதகர் தி. கிருபன் தலைமையிலான குழுவினரால் கே.கே.எஸ் வீதி, மற்றும் இராமநாதன் வீதியில் உள்ள உணவகங்கள், பேக்கரி என்பன திடீர் பரிசோதனைக்கு ட்படுத்தப்பட்டன.
ஏற்கனவே பல தடவைகள் உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்ட நிலையிலும் 03 உணவகங்கள், ஓர் பேக்கரி என்பன சுகாதார சீர்கேட்டுடன் இயங்கியநிலையில் பொது சுகாதார 
பரிசோதகரிடம் சிக்கின. 
இதனையடுத்து 03 உணவகங்கள், மற்றும் பேக்கரி
 என்பவற்றிற்கு எதிராக மேலதிக நீதவான் நீதிமன்றில் தனித்தனியே வழக்குகள் பொது சுகாதார பரிசோதகர் தி. கிருபனால் தாக்கல் 
செய்யப்பட்டது.
வழக்குகளை விசாரித்த மேலதிக நீதவான் சுகாதார சீர்கேடுகள் திருத்தம் செய்யும் வரை 04 உணவு கையாளும் நிலையங்களையும் சீல் வைத்து மூடுமாறு பொது சுகாதார பரிசோதகரிற்கு கட்டளையிட்டார். அத்துடன் வழக்குகளை மேலதிக விசாரணைகளிற்காக டிசம்பர் மாதத்திற்கு ஒத்திவைத்தார்.
இதனைத்தொடர்ந்து 04 உணவு கையாளும் நிலையங்களும் பொது சுகாதார பரிசோதகர் தி. கிருபனால் சீல் வைத்து மூடப்பட்டன…
என்பதும் குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

READ MORE - சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய பேக்கரி மற்றும் உணவகங்களுக்கு யாழ் நகரில் சீல்

மேற்கு மத்திய வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழமுக்கம் உருவாகக் கூடும் என:எச்சரிக்கை

புதன், 15 நவம்பர், 2023

மேற்கு மத்திய வங்கக் கடல் பகுதியில் 16-11-2023.நாளைய . தினம் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, மத்திய வங்கக் கடலில் பயணிக்கும் பல நாள் மீன்பிடி படகுகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பகுதியை சுற்றி அந்தமான் நிக்கோபாரை ஒட்டியுள்ள பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்.15-11-2023. இன்று உருவாகிய நிலையில், இது நாளையதினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு  மண்டலமாக உருமாறும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது. 
இதனால் கடற்பரப்புகளில் மணிக்கு 50-60 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும், கனமழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்வரும் அறிவிப்புகள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு கடற்றொழில் மற்றும் கடல்சார் சமூகங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - மேற்கு மத்திய வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழமுக்கம் உருவாகக் கூடும் என:எச்சரிக்கை

முல்லைத்தீவு நந்திக்கடலில் கனமழையினால் நிகழ்ந்த மாற்றம்

செவ்வாய், 14 நவம்பர், 2023

முல்லைத்தீவு இரட்டைவாய்க்கால் பகுதியில் .14-11-2023.இன்று அதிகளவிலான மீன்கள் மீனவர்களால் பிடிக்கபட்டு வருகின்றது.
 நந்திக்கடலில் இருந்து இரட்டைவாய்க்கால் ஊடாக முல்லைத்தீவு பெருங்கடற்கரைக்கு சங்கமிக்கும் வாய்க்கால் 
பகுதியிலே கனமழை காரணமாக அதிகமாக மீன்கள் 
பிடிபட்டு வருகின்றது.
 இவ்வாறு பிடிபடும் உயிர் மீன்களான கெழுத்தி, மணலை, சிலாப்பி இன வகையை சார்ந்த மீன்களே ஆகும். 
இவ்வாறு பிடிக்கப்படும் மீன்களை பொதுமக்கள் பார்வையிடுவதோடு வலைவீசியும் பிடித்து வருகிறார்கள்.
என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




READ MORE - முல்லைத்தீவு நந்திக்கடலில் கனமழையினால் நிகழ்ந்த மாற்றம்

நாட்டில் இரண்டாயிரத்தி இருபத்தி நான்காம் ஆண்டு முதல் சில வரிகளை நீக்க நடவடிக்கை

திங்கள், 13 நவம்பர், 2023

நாட்டில் ஜனவரி 2024 முதல், உடல்நலம், கல்வி மற்றும் சில அத்தியாவசிய உணவுப் பொருட்கள் தொடர்பான பொருட்கள் தவிர, அனைத்து மதிப்பு கூட்டப்பட்ட வரி விலக்குகளும் நீக்கப்பட்டுள்ளன. 
2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, 2024ஆம் ஆண்டு 
ஜனவரி மாதம் முதல் பெறுமதி சேர் வரி 
விகிதம் 18% ஆக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக
 தெரிவித்தார். 
இது இந்தியா, பாகிஸ்தான் போன்ற பிராந்திய நாடுகளின் VATக்கு இணங்குவதாகவும், இலங்கையிலும் அதே மதிப்பு இருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
 VAT இலக்குகளை அடைந்த பிறகு, சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரி போன்ற பிற மறைமுக வரிகள், சிதைக்கும் தன்மை கொண்டவை எனவும் அவை நீக்கப்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 
என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


READ MORE - நாட்டில் இரண்டாயிரத்தி இருபத்தி நான்காம் ஆண்டு முதல் சில வரிகளை நீக்க நடவடிக்கை

ஐந்து மடங்கு கிரீன்லாந்தில் வேகமாக உருகும் பனிப்பாறைகள்

ஞாயிறு, 12 நவம்பர், 2023

கிரீன்லாந்து பனிப்பாறைகள் 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட ஐந்து மடங்கு வேகமாக உருகி வருவதாக 
தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இது தொடர்பில் கோபன்ஹேகன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு நடத்திய நிலையில் மேற்படி தெரிவித்துள்ளனர். 
கிரீன்லாந்தின் பனி உருகுவது குறிப்பாக
 கவலைக்குரியது, 
இப்பகுதியில் உள்ள ஆயிரம் பனிப்பாறைகள் பற்றிய 
ஆய்வில், கடந்த இருபது ஆண்டுகளில் உருகும் விகிதம் புதிய கட்டத்திற்குள் நுழைந்துள்ளதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 
என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

READ MORE - ஐந்து மடங்கு கிரீன்லாந்தில் வேகமாக உருகும் பனிப்பாறைகள்

இலங்கையில் எரிபொருள் இருப்பு வைப்பதில் சிக்கல்

சனி, 11 நவம்பர், 2023

காஸா பகுதியில் இராணுவ நிலை நிலவுவதால், எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டால் பாதுகாப்பாக இருப்பு வைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிக எரிபொருள் வாங்க போதிய நிதி இல்லாததாலும், எரிபொருளை சேமிப்பதற்கு போதிய வசதிகள் இல்லாததாலும் தற்போது 30 நாட்களுக்கு போதுமான எரிபொருளே இருப்பு உள்ளதாக 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு கோப் குழுவிடம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.  ஒரு தற்காப்பு எரிபொருள் இருப்பை பராமரிக்க, சுமார் ஐநூறு மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகும் என்று 
மதிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது ஒரு மாதத்தில் எரிபொருளை பராமரிப்பதற்கு 300 மில்லியன் டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் எஞ்சிய கையிருப்பை பராமரிப்பது சிரமமான போதிலும் அடுத்த வருடம் ஜூன் மாதம் வரை எரிபொருளை வழங்குவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும்  அமைச்சின் செயலாளர் கோப் குழுவிற்கு அறிவித்துள்ளார்.என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - இலங்கையில் எரிபொருள் இருப்பு வைப்பதில் சிக்கல்

கனடாவில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதிய முத்திரை வெளியிடப்பட்டுள்ளது

வெள்ளி, 10 நவம்பர், 2023

கனடாவில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதிய தபால் முத்திரை ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் 12-ம் தேதி உலகம் முழுவதும் இந்துக்கள், சீக்கியர்கள் உள்ளிட்ட தரப்பினர் தீபாவளி பண்டிகையை கொண்டாட உள்ளனர்.
 இவ்வாறான ஒரு பின்னணியில் கனடிய தபால் திணைக்களம் தீபாவளிக்காக ஓர் தபால் முத்திரையை வெளியிட்டுள்ளது. இந்த தபால் முத்திரைகளை இணையவழியிலும் தபால் நிலையங்களிலும் பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி மரபினையும் கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் வகையில் இந்த தபால் முத்திரை வடிவமைக்கப்பட்டுள்ளமை   என்பதும் குறிப்பிடத்தக்கது    


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


READ MORE - கனடாவில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதிய முத்திரை வெளியிடப்பட்டுள்ளது

நாட்டில் மன்னாரில் காற்றாலை மின் நிலையம் அமைக்க அதானி குழுமத்துடன் புதிய ஒப்பந்தம்

வியாழன், 9 நவம்பர், 2023

நாட்டில் மன்னார் படுகையில் 250 மெகாவாட் திறன் கொண்ட புதிய காற்றாலை மின் நிலையத்தை அமைப்பதற்காக, இந்தியாவின் அதானி குழுமத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் பணி விரைவுப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் மின்சக்தி அமைச்சு இதற்கான நடைமுறையை விரைவுபடுத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர். சரித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இதன்படி நவம்பர் 25 ஆம் திகதிக்கு முன்னர் அனைத்து உடன்படிக்கைகளையும் கைச்சாத்திடுவதற்கு அமைச்சு தயாராக உள்ளது.
2009 மின்சாரச் சட்டத்தின்படி, எந்த ஒரு தனியார் நிறுவனமும் உள்ளூர் மின் உற்பத்திக்கு ஒரு கேள்விப்பத்திர செயல்முறையைப் பின்பற்ற வேண்டும். ஆனால் இந்த திட்டம், இரண்டு அரசுகளுக்கு இடையிலான
 திட்டம் என்ற அடிப்படையில், கேள்விப்பத்திர முறை 
பின்பற்றப்படவில்லை. 
 இந்தநிலையில் 30 வருடங்களுக்கு செய்துக்கொள்ளப்படும் இந்த உடன்படிக்கையின்கீழ், உற்பத்தி செய்யப்படும் ஒரு மின்சார அலகு 46 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் மன்னாரில் காற்றாலை மின் நிலையம் அமைக்க அதானி குழுமத்துடன் புதிய ஒப்பந்தம்

நாட்டில் பதுளை மாவட்டத்தில்வீதிகளுக்கு புதிய பெயர்கள் சூட்டல்

புதன், 8 நவம்பர், 2023

பதுளை மாவட்டத்தில் பெயரிடப்படாத அனைத்து வீதிகளுக்கும் பெயர் சூட்டுவதோடு வீடுகளுக்கான இலக்கங்களுடன் முகவரிகளை வழங்கும் ஏற்பாடும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அனைத்து பிரதேச செயலகங்கள் மற்றும் உள்ளூராட்சி அதிகார சபைகள் இணைந்து இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக பதுளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் மேஜர் சுதர்சன தெனிபிட்டிய தெரிவித்தார்.
சரியான முகவரி இல்லாத காரணத்தால் நேர்முகத்தேர்வு, நியமனக் கடிதம் போன்ற ஆவணங்கள் கிடைக்காமல் சிரமத்திற்கு உள்ளான பலர் தம்மிடம் முறைப்பாடு செய்ததாக அவர் குறிப்பிட்டார்.
ஒரே பெயரில் பலர் உள்ளனர், வீட்டு இலக்கம் இல்லை, முகவரி உள்ளவர்கள் கூட முழு முகவரியை சரியாக பதிவு 
செய்யாததால், 
அவர்களுக்கு கடிதங்கள் மற்றும் பொதிகளை வழங்குவதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பதுளை பிராந்திய தபால் அத்தியட்சகர் ஏ.ஜி. சமன் மஹிந்த தெரிவித்துள்ளார்..என்பதும் குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் பதுளை மாவட்டத்தில்வீதிகளுக்கு புதிய பெயர்கள் சூட்டல்

மீனவ குடும்பங்களுக்கு மன்னாரில் உலர் உணவு பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன

செவ்வாய், 7 நவம்பர், 2023

சீனாவில் உள்ள பௌத்த மக்களின் உதவியுடன் இலங்கையில் வறிய மக்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கும் நிகழ்வு.07-11-2023 
இன்றைய தினம் 
. மாலை மன்னார் வங்காலையில் இடம்பெற்றது. 
குறித்த நிகழ்வில் சீனத் தூதுவர் கீ செங்ஹோங் உள்ளிட்ட குழுவினர் கலந்து கொண்டிருந்தனர்.  
மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வு சங்கத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற உதவி திட்டம் வழங்கும் நிகழ்வில் மன்னார் மாவட்டத்தில் தெரிவு 
செய்யப்பட்ட 450 மீனவ குடும்பங்களில் முதல் கட்டமாக 50 மீனவ குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் 
வழங்கிவைக்கப்பட்டன. 
மேற்படி உதவித் திட்டம் சீனாவின் பௌத்த சங்கம், இலங்கை மற்றும் சீன பௌத்த நட்புறவுச் சங்கம் ஊடாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.  
குறித்த நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட மீனவ குடும்பங்கள்,
தள்ளாடி இராணுவ 541 வது படைப்பிரிவு அதிகாரி,அருட்தந்தையர்கள் என பலர் கலந்து கொண்டிடனர்  என்பது குறிப்பிடத்தக்கது.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




READ MORE - மீனவ குடும்பங்களுக்கு மன்னாரில் உலர் உணவு பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன