பிரான்சில் பெற்றோல் மற்றும் டீசல் விலைகளில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது

செவ்வாய், 21 நவம்பர், 2023

பெற்றோல் மற்றும் டீசலின் விலைகளின் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சர்வதேச சந்தைகளில் ஏற்பட்டுள்ள கச்சா எண்ணையின் விலைமாற்றத்துக்கு ஏற்றால் போல் பிரான்சிலும் விலை மாற்றம் 
ஏற்பட்டுள்ளது.
 டீசல் ஒரு லிட்டரின் விலை 0.7 சதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது. அதன் புதிய விலை தற்போது ₤1.8011 யூரோக்களாகும். 
அதேவேளை, 
பெற்றோல் (SP95-E10) ஒரு லிட்டரின் விலை ₤0.2 சதங்களினால் அதிகரித்துள்ளது.அதன் புதிய விலை ₤1.8189 yஊரோக்களாகும். உலக சந்தையில் கச்சா எண்ணை ஒரு பரல் $1.9 டொலர்கள் 
விலை வீழ்ச்சியை சந்தித்து தற்போது $82.4 டொலர்களுக்கு 
விற்பனையாகிறது. அதையடுத்தே டீசல் விலை 
வீழ்ச்சியடைந்துள்ளது.
 எவ்வாறாயிலும் எரிபொருட்களின் விலை கடந்த செப்டம்பர் மாதத்தோடு ஒப்பிடுகையில் விலை வீழ்ச்சியைடைந்துள்ளது. செப்டம்பரின் பெற்றோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை 2 யூரோக்களை நெருங்கியிருந்தமை
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





0 கருத்துகள்:

கருத்துரையிடுக