நாட்டில் மின் கட்டணம் மீண்டும் அதிகரிக்குமா நிதி இராஜாங்க அமைச்சர் கருத்து

வெள்ளி, 17 நவம்பர், 2023

நாட்டில் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைய, அரச வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் எதிர்வரும் ஜனவரி 
மாதம் முதல் வட் வரியை 18 சதவீதமாக அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனினும் வட் வரி அதிகரிக்கப்படுகின்ற போதிலும், அது மின் கட்டணம் உள்ளிட்ட பல துறைகளில் தாக்கம் செலுத்தாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், வட் வரி தற்காலிகமாகவே நடைமுறையில் இருக்கும் என்பதால், அது பல்வேறு துறைகளில் தாக்கம் செலுத்தாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக