நாட்டில் நாளை முதல் மின் கட்டணம் 14.2 சதவீதத்தினால் குறைப்பு

வெள்ளி, 30 ஜூன், 2023

நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் மின்சாரக் கட்டணத்தை 14.2 வீதத்தால் குறைக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
வீட்டு மின் பாவனையில் 0 முதல் 30 அலகு வரையிலான மாதாந்த நுகர்வின் 65 சதவீத கட்டணம் ஒரு அலகு 30 ரூபாவாலிருந்து 10 ரூபாவாக குறைக்கப்படும். மாதாந்த நிலுவை கட்டணம் 400 ரூபாவிலிருந்து 150 ரூபாவாக 
குறைக்கப்படும்.
அத்துடன் 60 அலகுகளுக்குக் குறைவான பிரிவில், ஒரு அலகுக்கான கட்டணம் ரூபா 42 இல் இருந்து 32 ரூபாவாகவும் மாதாந்த நிலுவைக் கட்டணம் ரூபா 650 இல் இருந்து 300 ரூபாவாகவும் குறைக்கப்படும்.
91 மற்றும் 120 அலகு பிரிவுகளுக்கு ஒரு அலகு 42 ரூபாவிலிருந்து 35 ரூபாயாகவும், மாதாந்த நிலுவைக் கட்டணம் 1500 ரூபாயில் இருந்து 1000 ரூபாயாகவும் குறைக்கப்படும்.
மத வழிபாட்டுத் தலங்களுக்கு 16 சதவீதம் கட்டணக் குறைவும் குறைந்த நுகர்வு கொண்ட வழிபாட்டுத் தலங்களுக்கு ஒரு அலகு 10 ரூபாய். (30 ரூபாவிலிருந்து 10 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது). மத வழிபாட்டுத் தலங்களுக்கு சூரிய சக்தி அமைப்புகளை உடனடியாக நிறுவ மின்சார சபை மற்றும் 
லங்கா தனியார் மின்சார நிறுவனத்திற்கு நிபந்தனைகள்
 வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஹோட்டல் துறைக்கு 26.3 சதவீத கட்டணமும் கைத்தொழில் துறைக்கு 9 சதவீத கட்டண குறைப்பும் அமுல்படுத்த 
பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
வணிக கட்டிடங்களின் மின்சார கட்டணம் 5 சதவீதம் குறைக்கப்படும் அரச கட்டிடங்களின் மின்சார கட்டணம் ஒரு சதவீதத்தால் குறைக்கப்படும்
என்பதும் குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





READ MORE - நாட்டில் நாளை முதல் மின் கட்டணம் 14.2 சதவீதத்தினால் குறைப்பு

நாச்சிமார் கோவிலடியைச் சேர்ந்தவர் குப்பை கொட்டுபவர்களுக்கு சூனியம் வைத்த நபர்;

வியாழன், 29 ஜூன், 2023

யாழில் தனது வீட்டுக்கு அருகில் குப்பை கொட்டுபவர்கள் விபத்தில் சிக்க   தான் சூனியம் வைத்துள்ளதாக அறிவிப்பை தனது வீட்டின் முன்னால் காட்சிப்படுத்திய சம்பவம் பரபரப்பை 
ஏற்படுத்தியிருந்தது.
யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியைச் சேர்ந்த நபர் ஒருவரே சூனியம் வைத்துள்ளதாக அறிவிப்பை காட்சிப்படுத்தி உள்ளார்.
அந் நபரின் வீட்டு வீதியோரமாக பலரும் குப்பைகளை வீசி 
சென்றதனால் அவர் தினமும் பல அசௌகரியங்களுக்கு முகம் 
கொடுத்து வந்துள்ளார்.
இதனால் பொறுமை இழந்தவர், ஒரு பொம்மை ஒன்றினையும், யந்திர தகடு ஒன்றினையும் தனது வீட்டு வேலியில் கட்டிவைத்தார். அதோடு , சூனியம் வைக்கப்பட்டுள்ளது.
வாகன விபத்து நிச்சயம் ஏற்படும். தயவு செய்து வீதிகளில் குப்பை போட வேண்டாம்" என பதாகையும் எழுதி அவர் காட்சிப்படுத்தி உள்ளார்.
இந்நிலையில் அவர் வைத்த பதாகையில் பின்னர்
 அப்பகுதியில் எவரும் குப்பைகளை வீசி செல்வதில்லை என தெரிவிக்கப்படுகிறது. என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




READ MORE - நாச்சிமார் கோவிலடியைச் சேர்ந்தவர் குப்பை கொட்டுபவர்களுக்கு சூனியம் வைத்த நபர்;

மோட்டார் சைக்கிள் திருடிய குற்றத்தில் யாழில். ஒருவர் கைது

புதன், 28 ஜூன், 2023


யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் திருட்டுகளுடன் தொடர்புடைய ஒருவர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை  பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் சிவன் கோவிலுக்கு, கடந்த ஞாயிற்றுக்கிழமை வழிபடச் சென்றவர் வீதியோரமாக மோட்டார் சைக்கிளை தரித்து விட்டு, தலைக் கவசத்தையும் விட்டு ஆலயத்தினுள் 
சென்றுள்ளார்.
இது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் உரிமையாளரால் முறைப்பாடு செய்யப்பட்டது.
விசாரணைகளை மேற்கொண்ட யாழ்ப்பாண பொலிஸார், பண்டதரிப்பை சேர்ந்த 42 வயதுடைய ஒருவரை 
கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில்,  பாழடைந்த கட்டடத்துக்குள் மறைத்து விடப்பட்டிருந்த திருடிய மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் 
கைப்பற்றினர்.
அதேவேளை கடந்த மாதம் யாழ்ப்பாணம் மாநகரில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் பளை, கொடிகாமம் பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டுடனும் சந்தேக நபருக்கு தொடர்புள்ளமை விசாரணைகளில் தெரியவந்தது..என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - மோட்டார் சைக்கிள் திருடிய குற்றத்தில் யாழில். ஒருவர் கைது

இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பிக்கும் எயார் சீனா

செவ்வாய், 27 ஜூன், 2023

சீன மக்கள் குடியரசின் கொடி ஏந்திய நிறுவனமான ஏர் சைனா, ஜூலை 03 அன்று கொழும்புக்கான விமானங்களை மீண்டும் 
தொடங்கவுள்ளது.
இதன்படி, திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வாரத்திற்கு மூன்று முறை கொழும்புக்கு சிச்சுவான் விமானங்களை இயக்க 
திட்டமிடப்பட்டுள்ளது. 
சிச்சுவானில் இருந்து கொழும்பு செல்லும் விமானங்கள் இரவு 08:55 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை (பிஐஏ) வந்தடையும், அதே நேரத்தில் சிச்சுவானுக்கு இரவு 10:15 மணிக்கு புறப்படும்.
சிச்சுவான் மாகாணத்தின் செங்டு மற்றும் - கொழும்பு விமான சேவையை ஏர் சீனா மீண்டும் தொடங்க உள்ளது.
என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

READ MORE - இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பிக்கும் எயார் சீனா

ஐந்து மாதங்களில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு 60 மில்லியன் ரூபா இலாபம்

திங்கள், 26 ஜூன், 2023

கடந்த ஐந்து மாதங்களில் மாத்திரம் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறுபது மில்லியன் ரூபா இலாபத்தை ஈட்டியுள்ளதாக கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் கிடைக்கும் இலாபத்தை எதிர்காலத்தில் மக்களுக்கு வழங்கும் வகையில் கூட்டுத்தாபனம் செயற்படும் எதிர்காலத்தில் எரிபொருளின் விலையை குறைக்க நடவடிக்கை எடுப்போம் என்றும் அவர் 
தெரிவித்துள்ளார்.
இந்த இலாபத்தை பெறுவதற்கு முக்கிய காரணம் திறமையின்மை மற்றும் முறைகேடுகளை தவிர்க்கும் திறனே காரணம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.என்பதும் குறிப்பிடத்தக்கது. .

 
இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - ஐந்து மாதங்களில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு 60 மில்லியன் ரூபா இலாபம்

இந்தியா மகாராஷ்ராவின் நாக்பூரில் 60 வயது முதியவர் வயிற்றில் இரட்டை சிசு

ஞாயிறு, 25 ஜூன், 2023

மகாராஷ்ராவின் நாக்பூரில், 60 வயது முதியவர் வயிற்றில் இரட்டை சிசு..!! அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றப்பட்டது. மகாராஷ்டிராவின் நாக்பூரில், 60 வயதான சஞ்சய் பகத் என்பவருக்கு 20 வயதில் இருந்தே வயிறு சற்று பெரிதாக இருந்துள்ளது.
நாளடைவில் மூச்சு விட சிரமப்பட்டதால், மருத்துவர்கள் பரிசோதனை செய்துள்ளனர். அதில் அவருக்கு இரட்டை சிசு இருந்தது 
தெரியவந்துள்ளது.
35 ஆண்டுகளுக்கு மேல் வயிற்றில் சிசு இருந்ததை பார்த்த மருத்துவர்கள் ஆச்சரியமடைந்தனர். இதனையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டு சிசுவை அகற்றினர்.என்பதும் குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


READ MORE - இந்தியா மகாராஷ்ராவின் நாக்பூரில் 60 வயது முதியவர் வயிற்றில் இரட்டை சிசு

நாட்டில் இவ்வருடத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 47,000 ஆக அதிகரிப்பு

சனி, 24 ஜூன், 2023

இலங்கையில் இவ்வருடத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பை காண முடிவதாகவும் ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் 47,000 இற்கும் அதிகமான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என்றும் உடலியல் நோய்கள் தொடர்பிலான விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்தார்.
 எதிர்வரும் பருவகால மழைவீழ்ச்சியின் போது டெங்கு நோய் பரவல் அதிகரிக்கக்கூடும் என்பதால் சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தையும் வைத்திய நிபுணர் சுட்டிக்காட்டினார். தற்போது வரையில் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலேயே
 அதிகளவில் டெங்கு நோயாளர்கள் பதிவாகின்றனர் எனவும்
 அங்குள்ள சுகாதார மற்றும் பாதுகாப்பு துறையினருடன் இணைந்து கழிவுகளை அகற்றும் விசேட வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளதாகவும் ஆனந்த விஜேவிக்ரம சுட்டிக்காட்டினார்.
 ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் தயாரிக்கப்படும் ‘101 கலந்துரையாடல்’ நிகழ்வில் நேற்று (23) கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்நாட்களில் டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார அமைச்சின் தலையீட்டின் கீழ் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு
 வருகின்றன.
 அதேபோல் டெங்கு ஒழிப்பு திட்டத்தினை அரச,தனியார் துறைகள் பொதுமக்களையும் ஒன்றிணைத்துக்கொண்டு முன்னெடுக்க வேண்டியது அவசியமாகும். தொடர்ச்சியாக இந்த வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் பட்சத்தில் டெங்கு நோயினை கட்டுப்படுத்தும் இயலுமை
 காணப்படுகின்றது.
 எதிர்வரும் பருவகாலத்தை தொடர்ந்து டெங்கு நோய் பரவல் அதிகரிக்கக்கூடும். பொதுவாக ஜூலை மாதத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பை காண முடியும். அந்த 
வகையில் எதிர்வரும் நாட்களில் நோயாளர்கள் அதிகரிக்க
 கூடும் என்பதால் அனைத்து துறையினரும் அவதானத்துடன் செயற்பட வேண்டியது அவசியமாகும் எனவும் தெரிவித்தார். டெங்கு நோய் எந்த வயதினரையும் பாதிக்கும். 
டெங்கு என்பது ஒருவகை வைரஸ் ஆகும். டெங்கு நோயாளர்களை டெங்கு நுளம்புகள் கடிக்கும் பட்சத்தில் அந்த நுளம்பினால் ஏனையவர்களுக்கு டெங்கு நோய் பரவக்கூடிய சந்தர்ப்பம் அதிகமாகும். பரவுவதற்கான 
சாத்தியங்கள் அதிகரிக்கும். அதனால் டெங்கு கட்டுபாட்டிற்கு இந்த காரணங்கள் பற்றி அவதானம் செலுத்த வேண்டியது அவசியமெனவும்
 வலியுறுத்தினார்.
 டெங்கு நோய் அதிகளவில் பரவும் மாகாணங்களை மையப்படுத்திய விசேட வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக நோயாளர்கள் பதிவாகும் கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களில் எதிர்வரும் வாரங்களில் விசேட வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன. நீர் நிரம்பிய பாத்திரங்களில் நீரை அகற்றினாலும் குடம்பிகள் தங்கியிருக்கூடும். 
எனவே நீர் நிரம்பாத வகையில் பாதுகாக்க வேண்டியது அவசியமாகும். பொதுவாக ஐந்து அல்லது ஆறு நாட்கள் மாத்திரமே நுளம்புகள் உயிர்வாழும். அதனால் வாராந்தம் சுற்றுச்சூழலை தூற்மைப்படுத்த வேண்டியது அவசியமாகும்..என்பதும் குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் இவ்வருடத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 47,000 ஆக அதிகரிப்பு

இலங்கையை சேர்ந்த ஒருவருக்கு கனடாவில் அடித்த பெரும் அதிர்ஷ்டம்

வெள்ளி, 23 ஜூன், 2023

கனடாவில் இலங்கையை சேர்ந்த ஒருவர் சுமார் 35 மில்லியன் கனேடிய டொலர்களை பணப்பரிசு வென்றெடுத்துள்ளார்.
ஒன்றாரியோவின் வின்ட்ஸோர் பகுதியைச் சேர்ந்த ஜயசிங்க என்ற இலங்கையரே லொட்டோ மெக்ஸ் லொத்தர் சீட்டிலுப்பில் 35 மில்லியன் கனேடிய டொலர்களை (இலங்கை மதிப்பில் 8,17,07,73,131) பரிசாக வென்றெடுத்துள்ளார்.
கனடாவிற்கு குடிபெயர்ந்ததன் பின்னர் ஜயசிங்க அடிக்கடி லொத்தர் சீட்டு கொள்வனவு செய்வார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
ஜாக்பொட்டி பரிசுத் தொகை அதிகமாக காணப்படும் சந்தர்ப்பங்களில் மட்டும் அவர் லொத்தர் சீட்டு கொள்வனவு செய்வார் என 
தெரிவிக்கப்படுகின்றது.
லொட்டோ மெக்ஸ் லொத்தர் சீட்டிலுப்பில் வென்ற 70 மில்லியன் டொலர் பரிசுத் தொகை விக்டோரியா மற்றும் ரொறன்ரோவைச் சேர்ந்தவர்கள் இடையே தலா 35 மில்லியன் டொலராக பகிரப்பட்டுள்ளது
மகளின் கல்விக்காக செலவிட உள்ளதாகவும் கார் கொள்வனவு செய்யவும், பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்யவும், 
அறக்கட்டளைகளுக்கு 
வழங்கவும், நாட்டில் உள்ள உறவினர்களை சந்திக்கவும் தாம் இந்த பரிசுத் தொகையை பயன்படுத்த உள்தளாக ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
.என்பதும் குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - இலங்கையை சேர்ந்த ஒருவருக்கு கனடாவில் அடித்த பெரும் அதிர்ஷ்டம்

மத்திய பாரீஸில் உள்ள கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 24 பேர் படுகாயம்

வியாழன், 22 ஜூன், 2023


மத்திய பாரீஸில் வரலாற்று சிறப்புமிக்க 5வது வட்டாரத்தில் உள்ள கட்டிடம் ஒன்றில் நேற்று திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில், கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து குறைந்தது 24 பேர் 
படுகாயமடைந்துள்ளனர்.
தீ விபத்துக்கு முன்னதாக பெரிய வெடி சத்தம் கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். 
மேலும், தீ விபத்து ஏற்படுவதற்கு முன்னதாக எரிவாயு கசிவு ஏற்பட்டதாக மாவட்ட மேயர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், வெடிப்புக்கான காரணம் கண்டறியப்படவில்லை என்று தகவல் 
வெளியாகி உள்ளது.
 சம்பவ இடத்தில் மொத்தம் 230 தீயணைப்பு வீரர்களும், ஒன்பது மருத்துவர்களும் விரைந்தனர். இந்த தீ விபத்தில் தீக்காயங்களுடன் 24 பேர் மீட்கப்பட்டு அவர்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது..என்பதும் குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




READ MORE - மத்திய பாரீஸில் உள்ள கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 24 பேர் படுகாயம்

கொழும்பில் தன் பிள்ளையின் கல்விக்காக போராடும் தாய்

புதன், 21 ஜூன், 2023

 கொழும்பில் தனது பிள்ளைக்கு கல்விவேண்டும் என ஒரு தாய் தனது பிள்ளையை தோளில் சுமந்தவாறு போராட்டத்தில் ஈடுபட்ட காணொளி சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
இலங்கை அரசாங்கம்  பாடசாலைகளில் இலவச கல்வியே  வழங்கப்படுகின்ற அந்த தாயின் போராட்டம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்நிலையில் ராஜாங்கனை பிரதேசத்தைச் சேர்ந்த தாய் ஒருவரே இவ்வாறு ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாகப் போராட்டத்தில் 
ஈடுபட்டிருந்தார்.
தனது பிள்ளையை பெரிய பாடசாலைகளில் இணைத்துக்கொள்ள மறுக்கிறார்கள் என கூறிய அந்த தாயார், தன் பிள்ளை அங்கு படிப்பதை பிறபெற்றோர்கள் விரும்பவில்லை எனவும் கூறினார்.
இது தொடர்பில் அந்த பாடசாலையில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் பொலிஸ் நிலையத்துக்கும் பாடசாலையின் அதிபருக்கும் 
அறிவித்துள்ளார்கள். இதனால், பிள்ளையை பாடசாலையை சேர்த்துக்கொள்ள அதிபர் மறுக்கிறார் என அந்த தாயார்   
கூறியுள்ளார்.
 போராட்டத்தில் ஈடுபட்ட தாயை ஜனாதிபதி செயலகத்துக்குள் அழைத்துச் செல்வதாகவும், எனினும் அவரது கையிலிருக்கும் பதாகையை எடுத்துக்கொண்டு உள்ளே செல்ல அனுமதிக்க முடியாது 
எனவும் பொலிஸார் கூற , வந்தால் பதாகையை வருவேன் என பொலிஸாரிடம் கூறுகின்றார்.
இந்நிலையில் இது குறித்த காணொளி இணையத்தில் வெளியாகி கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் எதற்காக அந்த மாணவியை பாடசாலை நிராகரித்தது என்பதற்கான தகவல் வெளியாகவில்லை.
   என்பதும் குறிப்பிடத்தக்கது.  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


READ MORE - கொழும்பில் தன் பிள்ளையின் கல்விக்காக போராடும் தாய்

இலங்கை கடற்பரப்புக்குள் 09 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது

செவ்வாய், 20 ஜூன், 2023

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒன்பது தமிழக கடற்தொழிலாளர்கள் கைது 
செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் தமிழகத்தின் இராமேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவருகிறது.
நெடுந்தீவு அருகே .19-06-2023.நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்த தமிழக படகொன்றை கைப்பற்றியதுடன்,  அதிலிருந்த ஒன்பது கடற்தொழிலார்களையும்
 கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட கடற்தொழிலாளர்களை மயிலிட்டி அழைத்து வந்து கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரிடம்ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - இலங்கை கடற்பரப்புக்குள் 09 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது

நாட்டில் பாண் மற்றும் சிற்றுண்டிகளின் விலைகளை 10 ரூபாவால் குறைக்க அறிவுறுத்தல்

திங்கள், 19 ஜூன், 2023

நாட்டில் பாண் மற்றும் சிற்றுண்டிகளின் விலைகளை 10 ரூபாவால் குறைப்பதற்கான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
மேலும்இ கோதுமை மாவின் விலை நிலைமை தொடர்பில் அவர் கூறுகையில்
கோதுமை மாவின் விலை 430 ரூபாவாக காணப்பட்டது. தற்போது சந்தையில் 170இ 160 ரூபாவாக காணப்படுகின்றது.
தட்டுப்பாடுகள்இ விலை அதிகரிப்பை தவிர்ப்பதற்காகவே கோதுமை மாவை அத்தியாவசிய பொருளாக அறிவித்துள்ளோம். எதிர்காலத்தில் கோதுமை மாவின் விலை ஒருபோதும் அதிகரிக்கப்படாது என்ற உத்தரவின் காரணமாகவே பேக்கரி பொருட்களின் விலைகளை குறைக்கலாம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.என்பதும் குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் பாண் மற்றும் சிற்றுண்டிகளின் விலைகளை 10 ரூபாவால் குறைக்க அறிவுறுத்தல்

நாட்டில் பேக்கரி பொருட்களின் விலையை குறைக்க ஆலோசனை

ஞாயிறு, 18 ஜூன், 2023

உள்நாட்டு கோதுமை மா நிறுவனங்கள் எதிர்காலத்தில் கோதுமை மாவின் விலையை அதிகரிக்குமாயின் நுகர்வோர் விவகார அதிகார சபையின் அனுமதியைப் பெற வேண்டும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
18-06-2023 இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு
 தெரிவித்தார்.
 பேக்கரி பொருட்களின் விலையை உடனடியாக 10 ரூபாவினால் குறைக்க வேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு 
அறிவிக்கப்பட்டுள்ளது.
 எவ்வாறாயினும், பேக்கரி பொருட்களுக்கு தேவையான ஏனைய பொருட்களின் விலைகள் குறைவடையாத காரணத்தினால், தமது உற்பத்திப் பொருட்களின் விலைகளை குறைப்பது சிக்கலாக உள்ளதாக அகில 
இலங்கை பேக்கரி சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
 இதேவேளை, கோதுமை மா பொருட்களின் விலைகளுக்கும் கட்டுப்பாட்டு விலை தேவை என உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
 கோதுமை மாவுக்கு மாத்திரமல்ல அனைத்து பேக்கரி பொருட்களுக்கும் விலை கட்டுப்பாடு அவசியம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 அவ்வாறான விலை நிர்ணயம் மேற்கொள்ளப்படும் பட்சத்தில் அதிகபட்ச ஆதரவை வழங்க தயாராக உள்ளதாக தெரிவித்தார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் பேக்கரி பொருட்களின் விலையை குறைக்க ஆலோசனை

பொருட்களை அதிக விலைக்கு மன்னாரில் விற்ற மூவருக்கு கடுமையான அபராதம்

சனி, 17 ஜூன், 2023

மன்னாரில் முட்டை மற்றும் அரிசியை கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக விற்பனை செய்த மூன்று வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் மூவருக்கும் தலா ஒரு 
இலட்சம் ரூபா அபராதம் விதித்து மன்னார் நீதிமன்றம் 
உத்தரவிட்டுள்ளது.
மன்னார் நகர் பகுதியில் தொடர்ச்சியாக பொருட்கள் கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக விற்பனை செய்யப்படுவதாக மன்னார் நுகர்வோர் அபிவிருத்தி அதிகார சபைக்கு கிடைக்க பெற்ற முறைப்பாடு தொடர்பில் 
மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த மூன்று வர்த்தக நிலைய உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு 
செய்யப்பட்டது.
குறித்த வழக்கு நேற்று மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் குறித்த வர்த்தகர்கள் மூவரும் தமது குற்றத்தை ஒப்புக் கொண்டமையை தொடர்ந்து மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதி குறித்த மூன்று வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு தலா ஒரு இலட்சம் 
அபராதம் விதித்தார்.
இந்த நிலையில் முட்டை 44 ரூபாய்க்கு அதிகமாகவும், கீரி சம்பா அரிசி 260 ரூபாய்க்கு அதிகமாக விற்பனை செய்யும் பட்சத்தில் மன்னார் நுகர்வோர் அதிகார சபையிடம் முறையிடுமாறு நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.என்பது குறிப்பிடத்தக்கது.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - பொருட்களை அதிக விலைக்கு மன்னாரில் விற்ற மூவருக்கு கடுமையான அபராதம்

மற்ற நாடுகளைப் போலவே, கிரகப் பெருங்கடல்: அலைகள் மாறுகின்றன

வெள்ளி, 16 ஜூன், 2023


இலங்கை தீவு என்று அழைக்கப்படுகிறது, இது கிழக்கின் முத்து. ஆனால் இன்று, மற்ற நாடுகளைப் போலவே, பன்றிக்கு முன்னால் முத்துக்களை வார்ப்பது ஒரு வழக்கு. இலங்கையைச் சுற்றியுள்ள கடலை மாசுபடுத்தியது
 மட்டுமின்றி, அரசியல் காரணங்களுக்காகவும் 
இந்தியாவின் ஆழ்கடல் மீனவர்கள், பவளப்பாறைகள் மற்றும் பிற கடல்வாழ் உயிரினங்களின் வாழ்விடங்களை சேதப்படுத்தும் 
கீழ் இழுவையில் ஈடுபடுவதன் மூலம் நமது கடலை சுரண்ட அனுமதித்துள்ளோம்.
ஜூன் 8 அன்று, ஐக்கிய நாடுகள் சபை உலகப் பெருங்கடல் தினத்தை கிரகக் கடல் என்ற கருப்பொருளுடன் குறித்தது: அலைகள் மாறி வருகின்றன. ஒரு அறிக்கையில், கிரகத்தின் 70% க்கும் அதிகமான பகுதியை கடல் உள்ளடக்கியது என்று ஐநா சுட்டிக்காட்டுகிறது.
இது நமது வாழ்வின் ஆதாரம், மனிதகுலத்தின் வாழ்வாதாரத்தையும் பூமியில் உள்ள மற்ற எல்லா உயிரினங்களையும் ஆதரிக்கிறது. கிரகத்தின் 
ஆக்ஸிஜனில் குறைந்தது 50% கடல் உற்பத்தி செய்கிறது, இது பூமியின் பல்லுயிர் பெருக்கத்தின் தாயகமாகும், 
மேலும் இது உலகெங்கிலும் உள்ள ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு புரதத்தின் முக்கிய ஆதாரமாக உள்ளது. 2030 ஆம் 
ஆண்டளவில் கடல் சார்ந்த தொழில்களால்
 40 மில்லியன் மக்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்று மதிப்பிடப்பட்ட கடல் நமது பொருளாதாரத்திற்கு முக்கியமானது.
ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, அதன் அனைத்து நன்மைகள் இருந்தாலும், கடலுக்கு இப்போது ஆதரவு தேவை. 90% பெரிய 
மீன் இனங்கள் குறைந்துவிட்டன, மேலும் 50% பவளப்பாறைகள் அழிக்கப்பட்டுவிட்டன, நாம் கடலில் இருந்து நிரப்பக்கூடியதை விட அதிகமாக எடுத்துக்கொள்கிறோம்.
கடலுடன் ஒரு புதிய சமநிலையை உருவாக்க நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும், அது இனி அதன் அருளைக் குறைக்காது, மாறாக அதன் அதிர்வுகளை மீட்டெடுத்து, அதற்கு புதிய வாழ்க்கையைக்
 கொண்டுவருகிறது. பெருங்கடல்களின் மதிப்பை ஐநா கொண்டாட்டத்தில் இணையுமாறு அனைத்து நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கும்
 உலக அமைப்பு, அன்றாட வாழ்வில் பெருங்கடல்களின் முக்கிய பங்கை ஒவ்வொருவருக்கும் உலகப் பெருங்கடல் தினம் 
நினைவூட்டுகிறது. 
அவை நமது கிரகத்தின் நுரையீரல் மற்றும் உணவு மற்றும் மருந்தின் முக்கிய ஆதாரம் மற்றும் உயிர்க்கோளத்தின் முக்கிய பகுதியாகும். கடலில் மனித செயல்களின் தாக்கத்தை மக்களுக்கு தெரிவிப்பதும், கடலுக்கான உலகளாவிய குடிமக்களின் இயக்கத்தை உருவாக்குவதும், உலகப் பெருங்கடல்களின் நிலையான நிர்வாகத்திற்கான திட்டத்தில் உலக மக்களை அணிதிரட்டுவதும் ஒன்றிணைப்பதும் இந்த நாளின் நோக்கமாகும்.
இந்த ஆண்டு, ஜூன் 8 அன்று அதன் நியூயார்க் தலைமையகத்தில் ஆண்டு நிகழ்வின் கலப்பின கொண்டாட்டத்தை ஐநா நடத்தியது மற்றும் அது நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
ஓசியானிக் குளோபல் என்ற இலாப நோக்கற்ற நிறுவனத்துடன் இணைந்து, கடல் விவகாரங்களுக்கான பிரிவு மற்றும் கடல் சட்டம் ஆகியவற்றின் மூலம் ஐ.நா.வின் சட்ட விவகாரங்கள் நடத்தப்பட்டு, இத்தாலிய சொகுசு கடிகார உற்பத்தியாளரான பனேராய் ஆதரவுடன், கடலின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்த நாம் எவ்வாறு இணைந்து செயல்பட முடியும் இந்த நிகழ்வு வெளிச்சம் போட்டு காட்டியது. 
இந்த ஆண்டு மார்ச் மாதம், ஐ.நா. பிரதிநிதிகள் கிட்டத்தட்ட இரண்டு தசாப்தகால பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு சர்வதேச கடலில் கடல் பல்லுயிரியலைப் பாதுகாப்பது தொடர்பான வரலாற்று ஒப்பந்தத்தை எட்டினர். ஏற்கனவே 'உயர் கடல் ஒப்பந்தம்' என்று குறிப்பிடப்படும், சட்ட கட்டமைப்பானது கடல் பாதுகாப்புக்கு அதிக பணத்தைச் செலுத்தும் மற்றும் கடல் மரபணு வளங்களை அணுகுவதற்கும் பயன்படுத்துவதற்கும்
 உதவுகிறது. 
ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் வெளியிட்டுள்ள செய்தியில், கடல்தான் வாழ்வின் அடித்தளம் என்று கூறியுள்ளார். இது நாம் சுவாசிக்கும் காற்று மற்றும் உண்ணும் உணவு ஆகியவற்றை வழங்குகிறது. இது நமது காலநிலை மற்றும் வானிலையை 
ஒழுங்குபடுத்துகிறது. 
கடல் என்பது நமது கிரகத்தின் பல்லுயிர் பெருக்கத்தின் மிகப்பெரிய நீர்த்தேக்கம் ஆகும். அதன் வளங்கள் உலகெங்கிலும் உள்ள சமூகங்கள், செழிப்பு மற்றும் மனித ஆரோக்கியத்தை நிலைநிறுத்துகின்றன. மனிதநேயம் பெருங்கடலை நம்புகிறது. ஆனால் கடல் நம்மை நம்ப முடியுமா? நாம் கடலின் சிறந்த நண்பராக இருக்க வேண்டும். 
ஆனால் இப்போது, மனிதநேயம் அதன் மோசமான எதிரி. மனிதனால் தூண்டப்பட்ட காலநிலை மாற்றம் நமது கிரகத்தை 
வெப்பமாக்குகிறது, வானிலை முறைகள் மற்றும் கடல் நீரோட்டங்களை சீர்குலைக்கிறது, மேலும் கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளையும் 
அங்கு வாழும் உயிரினங்களையும் மாற்றுகிறது. அதிகப்படியான மீன்பிடித்தல், அதிகப்படியான சுரண்டல் மற்றும் கடல் 
அமிலமயமாக்கல்
 ஆகியவற்றால் கடல் பல்லுயிர் தாக்குதலுக்கு உள்ளாகிறது. மூன்றில் ஒரு பங்கு மீன் வளங்கள் தாங்க முடியாத அளவில் அறுவடை 
செய்யப்படுகின்றன. 
ரசாயனங்கள், பிளாஸ்டிக் மற்றும் மனிதக் கழிவுகளால் நமது கடலோர நீரை மாசுபடுத்துகிறோம். ஆனால் இந்த ஆண்டு உலக பெருங்கடல் 
தினம் அலைகள் மாறிக்கொண்டிருப்பதை நமக்கு 
நினைவூட்டுகிறது. 
கடந்த ஆண்டு, 2030க்குள் 30 சதவீத நிலம் மற்றும் கடல் மற்றும் கடலோரப் பகுதிகளைப் பாதுகாத்து நிர்வகிக்கும் லட்சிய உலகளாவிய இலக்கை ஐ.நா ஏற்றுக்கொண்டது லிஸ்பனில் நடந்த ஐ.நா பெருங்கடல் 
மாநாட்டில், மேலும் நேர்மறையான கடல் நடவடிக்கைக்கு 
உலகம் அழுத்தம் கொடுக்க ஒப்புக்கொண்டது. பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான உலகளாவிய, சட்டப்பூர்வ ஒப்பந்தம் பேச்சுவார்த்தையில் உள்ளது. 
மார்ச் மாதத்தில், தேசிய அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட பகுதிகளில் கடல் பல்லுயிர்களின் பாதுகாப்பு மற்றும் நிலையான பயன்பாடு பற்றிய வரலாற்று உயர் கடல் ஒப்பந்தத்திற்கு நாடுகள் 
ஒப்புக்கொண்டன. 
இம்முயற்சிகளின் பெரும் வாக்குறுதியை உணர்ந்து கொள்வதற்கு கூட்டு அர்ப்பணிப்பு தேவை. இந்த உலகப் பெருங்கடல் தினத்தில் தொடர்ந்து நடவடிக்கை எடுப்போம். இன்றும் ஒவ்வொரு நாளும் கடலுக்கு முதலிடம் கொடுப்போம். 


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - மற்ற நாடுகளைப் போலவே, கிரகப் பெருங்கடல்: அலைகள் மாறுகின்றன

இந்தியாவில் 2 இதயம், 4 கால்கள், 4 கைகள், 4 காதுகளுடன் பிறந்த அபூர்வ குழந்தை

வியாழன், 15 ஜூன், 2023

ந்தியாவின் பீகார் மாநிலம், சாப் ராவை அடுத்த ஷியாம்சாக் பகுதியை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணியான பிரசுதா பிரியா தேவியை உறவினர்கள் அந்த பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் அங்கு அவருக்கு வைத்தியர்கள் பிரசவம் பார்த்தனர்.
இதில் அந்த பெண், அழகான பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார்.
குழந்தையை பார்த்ததும், அவருக்கு பிரசவம் பார்த்த வைத்தியர்கள் ஆச்சரியம் அடைந்தனர்.
காரணம் அந்த குழந்தைக்கு 4 கால்கள், 4 கைகள், 4 காதுகள் மற்றும் 2 முதுகுகள் இருந்தன.
இதுபோல குழந்தையின் உடலை பரிசோதித்தபோது, குழந்தைக்கு 2 இதயங்களும் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அந்த குழந்தையை வைத்தியர்கள் அதிதீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றி சிகிச்சை அளித்தனர்.
என்றாலும் அந்த குழந்தை சிகிச்சை பலனின்றி பிறந்த 20 நிமிடங்களிலேயே பரிதாபமாக உயிரிழந்தது.
இதற்கிடையே இரண்டு இதயம் மற்றும் 4 கால், கைகளுடன் பிறந்த குழந்தை பற்றிய தகவல் சமூக வலைதளங்களில் பரவியது.
இதனை பார்த்த மக்கள், அந்த குழந்தை கடவுளின் குழந்தை என்றும், அதனை பார்க்க வேண்டும் என்றும் கருத்து பதிவிட்டனர்.
இந்த தகவல் வைரலானதை தொடர்ந்து அந்த குழந்தை பிறந்த வைத்தியசாலை முன்பு ஏராளமானோர் திரண்டனர். இதனால் அங்கு 
பரபரப்பு ஏற்பட்டது.,என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - இந்தியாவில் 2 இதயம், 4 கால்கள், 4 கைகள், 4 காதுகளுடன் பிறந்த அபூர்வ குழந்தை

போஸ்னியாவில் நகரமான லூகாவாக்கில் தொடக்கப் பள்ளி ஆசிரியரை சுட்ட சிறுவன் கைது

புதன், 14 ஜூன், 2023

தென்கிழக்கு ஐரோப்பியாவில் உள்ள போஸ்னியா என்கிற நாட்டின் நகரமான லூகாவாக்கில் இயங்கி வரும் ஒரு தொடக்கப் பள்ளியில் பணிபுரிந்து வந்த ஆசிரியரை 13 வயது சிறுவன் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னாள் மாணவரான சிறுவன் வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்நிலையில், பள்ளியின் துணை முதல்வரும், ஆங்கிலப் பாட ஆசிரியராக பணிபுரிந்து வந்தவரை சிறுவன் துப்பாக்கியால் 
சுட்டுள்ளான்.
இதையடுத்து, சிறுவனை கைது செய்த போலீசார் லூகாவாக் காவல் துறையின் வளாகத்தில் போலீஸ் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளான்.
மேலும், சிறுவனிடம் பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை போலீசார் விசாரணை முடியும் வரை பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் 
தெரிவித்துள்ளனர்.
 இதுகுறித்து மருத்துவமனை தரப்பில் கூறுகையில், " ஆசிரியருக்கு கழுத்து அருகே துப்பாக்கிச் சூடு காயம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவருடைய உடல்நிலை சீராக உள்ளது" 
என கூறப்பட்டுள்ளது.என்பது குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - போஸ்னியாவில் நகரமான லூகாவாக்கில் தொடக்கப் பள்ளி ஆசிரியரை சுட்ட சிறுவன் கைது

யாழ் காரைநகர் வைத்தியசாலைக்கு கனடா காரை கலாச்சார மன்றம் மருந்து பொருட்கள் அன்பளிப்பு

செவ்வாய், 13 ஜூன், 2023

யாழ் காரைநகர் பிரதேச வைத்தியசாலைக்கு கனடா காரை கலாச்சார மன்றத்தின் ஊடாக ஒரு தொகுதி மருந்துப்பொருட்கள்.13-06-2023. இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை  அன்பளிப்பாக 
வழங்கிவைக்கப்பட்டது.
ஒருத்தி திரைப்பட தயாரிப்பாளர் அவர்களால், ஒருத்தி திரைப்படத்தை இலவசமாக திரையிட வழங்கியதன் மூலம் பெறப்பட்ட நிதியில் கனடா காரை கலாச்சார மன்றம் மருந்துப் பொருட்களை இலவசமாக வழங்கியமை 
என்பது குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - யாழ் காரைநகர் வைத்தியசாலைக்கு கனடா காரை கலாச்சார மன்றம் மருந்து பொருட்கள் அன்பளிப்பு

நாட்டில் சில முக்கிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

திங்கள், 12 ஜூன், 2023

கொழும்பில் உள்ள சீதாவக்க, களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய மற்றும் கேகாலை மாவட்டத்தில் யட்டியந்தோட்டை பிரதேசங்களுக்கு முதல் கட்டத்தின் கீழ் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
கேகாலையில் தெஹியோவிட்ட மற்றும் தெரணியகல செயலகப் பிரிவுகளுக்கு இரண்டு கட்டங்களின் கீழ் மண்சரிவு எச்சரிக்கை 
விடுக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தின் நிவித்திகல, எஹெலியகொட, குருவிட்ட, கிரியெல்ல, இரத்தினபுரி, அலபாத, கலவான, பெல்மதுல்ல
 மற்றும் அயகம பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் முதல் கட்டத்தின் கீழ் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இலங்கையில் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.என்பதும் குறிப்பிடத்தக்கது


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் சில முக்கிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டில் பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

ஞாயிறு, 11 ஜூன், 2023

நாட்டில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டால், உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்துகிறது.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே, காய்ச்சல் இருந்தால் கட்டாயம் ஓய்வு எடுக்க வேண்டும்.
“உங்களுக்கு காய்ச்சல் இருந்தால், மிக முக்கியமான விஷயம் ஓய்வு, அதாவது உங்கள் அன்றாட நடவடிக்கைகளில் இருந்து விலகி இருக்க வேண்டும். மேலும் யாராவது வேலைக்குப் போகிறார் என்றால், சில நாட்கள் வேலையை விட்டுவிட்டு, அல்லது சில நாட்கள் பாடசாலைக்கு செல்லது
 ஓய்வாக இருங்கள்.
இரண்டாவது விஷயம், முடிந்தவரை திரவ உணவை சேர்த்துக் கொள்ளுங்கள். காய்ச்சலைக் கட்டுப்படுத்த பாராசிட்டிமால் (Paracetimol) மருந்தின் பரிந்துரைக்கப்பட்ட அளவை எடுத்துக் கொள்ளவும்.
அதைத் தவிர, மற்ற மருந்துகளை உட்கொள்ள வேண்டாம். இந்த நாட்களில் காய்ச்சலைக் கட்டுப்படுத்த டிஸ்பிரின், ஆஸ்பிரின் குழு மருந்துகளைப் பயன்படுத்தக் கூடாது.
அதன் மூலம் டெங்கு நோய் இருந்தால் தேவையற்ற சிக்கல்கள் ஏற்படும். மரணம் வரை கூட செல்லலாம். இரண்டாவது நாளிலும் காய்ச்சல் கட்டுப்படாவிட்டால் மருத்துவ ஆலோசனை பெறவும். முழுமையான இரத்தப் பரிசோதனைக்கு செல்லுங்கள்.” என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
என்பதும் குறிப்பிடத்தக்கது

 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>> 





READ MORE - நாட்டில் பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

நாட்டில் மூன்று மாதங்களுக்குள் கோழி இறைச்சியின் விலையைக் குறைக்க முடியுமாம்

சனி, 10 ஜூன், 2023

விவசாய அமைச்சருடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து கோழிப்பண்ணை உற்பத்தியாளர்கள் மூன்று மாதங்களுக்குள் ஒரு கிலோ கோழி இறைச்சியை ரூ.1200 ஆகக் குறைக்க முடியும் என கோழிப்பண்ணை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
 ஒரு கிலோ கோழிக்கறியின் விலை ரூ.1,300 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலையை குறைப்பதற்கு அமைச்சுடன் இணக்கப்பாட்டுக்கு வர முடியும் என அமைச்சருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்த தொழில் அதிபர்கள் தெரிவித்தனர்.
 இந்த கலந்துரையாடலின் போது, டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளமையின் பயனை நுகர்வோருக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கோழிப்பண்ணை உரிமையாளர்களிடம் அமைச்சர்
 கோரிக்கை விடுத்தார்.
 இத்தொழிலைப் பாதுகாக்க அரசாங்கம் தேவையான சலுகைகளை வழங்கிய போதிலும் நுகர்வோருக்கு நன்மைகள் கிடைக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 சீரற்ற காலநிலை காரணமாக மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், கோழிக்கறிக்கான தேவை அதிகரித்துள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.என்பதும் குறிப்பிடத்தக்கது.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் மூன்று மாதங்களுக்குள் கோழி இறைச்சியின் விலையைக் குறைக்க முடியுமாம்

மீண்டும் இலங்கையில் அதிக விலைக்கு விற்கப்படும் முட்டைகள்

வெள்ளி, 9 ஜூன், 2023

இலங்கையில் பல வியாபாரிகள் தொடர்ந்தும் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு மேல் முட்டைகளை விற்பனை செய்வதாக நுகர்வோர் முறைப்பாடு தெரிவிக்கின்றனர்.
நாட்டில் சமீப காலமாக பல வியாபாரிகள் ஒரு முட்டையை 47 ரூபா தொடக்கம் 60 ரூபா வரை அதிக விலைக்கு விற்பனை செய்து வாடிக்கையாளர்களை ஏமாற்றி வருவதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த நாளில் சந்தையில் முட்டைக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அவர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்வது தொடர்பாக நுகர்வோர் ஆணையம் நடத்திய விசாரணையில், அதிக விலைக்கு முட்டை விற்கும் வியாபாரிகளை கண்டறிய சோதனை நடத்தப்படும் என்றும், அவர்களுக்கு எதிராக 1 லட்சம் ரூபா அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
நாட்டில் முட்டைக்கு அதிக கிராக்கி நிலவுவதால் வியாபாரிகள் அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்வதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
என்பதும் குறிப்பிடத்தக்கது.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - மீண்டும் இலங்கையில் அதிக விலைக்கு விற்கப்படும் முட்டைகள்