போஸ்னியாவில் நகரமான லூகாவாக்கில் தொடக்கப் பள்ளி ஆசிரியரை சுட்ட சிறுவன் கைது

புதன், 14 ஜூன், 2023

தென்கிழக்கு ஐரோப்பியாவில் உள்ள போஸ்னியா என்கிற நாட்டின் நகரமான லூகாவாக்கில் இயங்கி வரும் ஒரு தொடக்கப் பள்ளியில் பணிபுரிந்து வந்த ஆசிரியரை 13 வயது சிறுவன் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னாள் மாணவரான சிறுவன் வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்நிலையில், பள்ளியின் துணை முதல்வரும், ஆங்கிலப் பாட ஆசிரியராக பணிபுரிந்து வந்தவரை சிறுவன் துப்பாக்கியால் 
சுட்டுள்ளான்.
இதையடுத்து, சிறுவனை கைது செய்த போலீசார் லூகாவாக் காவல் துறையின் வளாகத்தில் போலீஸ் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளான்.
மேலும், சிறுவனிடம் பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை போலீசார் விசாரணை முடியும் வரை பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் 
தெரிவித்துள்ளனர்.
 இதுகுறித்து மருத்துவமனை தரப்பில் கூறுகையில், " ஆசிரியருக்கு கழுத்து அருகே துப்பாக்கிச் சூடு காயம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவருடைய உடல்நிலை சீராக உள்ளது" 
என கூறப்பட்டுள்ளது.என்பது குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக