யாழில் தனது வீட்டுக்கு அருகில் குப்பை கொட்டுபவர்கள் விபத்தில் சிக்க தான் சூனியம் வைத்துள்ளதாக அறிவிப்பை தனது வீட்டின் முன்னால் காட்சிப்படுத்திய சம்பவம் பரபரப்பை
ஏற்படுத்தியிருந்தது.
யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியைச் சேர்ந்த நபர் ஒருவரே சூனியம் வைத்துள்ளதாக அறிவிப்பை காட்சிப்படுத்தி உள்ளார்.
அந் நபரின் வீட்டு வீதியோரமாக பலரும் குப்பைகளை வீசி
சென்றதனால் அவர் தினமும் பல அசௌகரியங்களுக்கு முகம்
கொடுத்து வந்துள்ளார்.
இதனால் பொறுமை இழந்தவர், ஒரு பொம்மை ஒன்றினையும், யந்திர தகடு ஒன்றினையும் தனது வீட்டு வேலியில் கட்டிவைத்தார். அதோடு , சூனியம் வைக்கப்பட்டுள்ளது.
வாகன விபத்து நிச்சயம் ஏற்படும். தயவு செய்து வீதிகளில் குப்பை போட வேண்டாம்" என பதாகையும் எழுதி அவர் காட்சிப்படுத்தி உள்ளார்.
இந்நிலையில் அவர் வைத்த பதாகையில் பின்னர்
அப்பகுதியில் எவரும் குப்பைகளை வீசி செல்வதில்லை என தெரிவிக்கப்படுகிறது. என்பதும் குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக