இந்தியாவில் 2 இதயம், 4 கால்கள், 4 கைகள், 4 காதுகளுடன் பிறந்த அபூர்வ குழந்தை

வியாழன், 15 ஜூன், 2023

ந்தியாவின் பீகார் மாநிலம், சாப் ராவை அடுத்த ஷியாம்சாக் பகுதியை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணியான பிரசுதா பிரியா தேவியை உறவினர்கள் அந்த பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் அங்கு அவருக்கு வைத்தியர்கள் பிரசவம் பார்த்தனர்.
இதில் அந்த பெண், அழகான பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார்.
குழந்தையை பார்த்ததும், அவருக்கு பிரசவம் பார்த்த வைத்தியர்கள் ஆச்சரியம் அடைந்தனர்.
காரணம் அந்த குழந்தைக்கு 4 கால்கள், 4 கைகள், 4 காதுகள் மற்றும் 2 முதுகுகள் இருந்தன.
இதுபோல குழந்தையின் உடலை பரிசோதித்தபோது, குழந்தைக்கு 2 இதயங்களும் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அந்த குழந்தையை வைத்தியர்கள் அதிதீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றி சிகிச்சை அளித்தனர்.
என்றாலும் அந்த குழந்தை சிகிச்சை பலனின்றி பிறந்த 20 நிமிடங்களிலேயே பரிதாபமாக உயிரிழந்தது.
இதற்கிடையே இரண்டு இதயம் மற்றும் 4 கால், கைகளுடன் பிறந்த குழந்தை பற்றிய தகவல் சமூக வலைதளங்களில் பரவியது.
இதனை பார்த்த மக்கள், அந்த குழந்தை கடவுளின் குழந்தை என்றும், அதனை பார்க்க வேண்டும் என்றும் கருத்து பதிவிட்டனர்.
இந்த தகவல் வைரலானதை தொடர்ந்து அந்த குழந்தை பிறந்த வைத்தியசாலை முன்பு ஏராளமானோர் திரண்டனர். இதனால் அங்கு 
பரபரப்பு ஏற்பட்டது.,என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக