எரிபொருட்களின் விலையை பிரான்ஸில் குறைத்து விற்கும் நிறுவனங்கள்

சனி, 30 செப்டம்பர், 2023

கடந்த கோடை காலத்தில் இருந்து பிரான்சில் எரிபொருட்களின் விலை என்றும் இல்லாத அளவுக்கு அதிகமாக ஏறிச் சென்றுள்ளது. இதனால் வாகன பாவனையாளர்கள், நிறுவனங்கள், மீன் பிடித்துறையினர் என பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
 அரசாங்கம் எரிபொருட்களின் விலையை குறைக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் ஒரு கட்டமாக 
எரிபொருள் விற்பனை நிறுவனங்கள் இலாபம் இன்றி சிலகாலம் தங்கள் விற்பனைகளை செய்ய முன்வர வேண்டும் எனும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வேண்டுகோளை total énergie நிறுவனம் ஏற்கனவே ஏற்க மறுத்து விட்ட நிலையில், Leclerc மற்றும் Carrefour எரிபொருள் நிரப்பு நிறுவனங்கள் அரசின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்துள்ளன.
செப்டம்பர் 29, வெள்ளிக்கிழமை முதல் Leclerc மற்றும் Carrefour இந்த நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளன. ஒவ்வொரு நாளும் லீட்டருக்கு ஒருசில centimes லாபத்தை குறைத்து அவை விற்பனை 
செய்து வருகின்றனர்.
 இதுகுறித்து மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் தங்கள் நன்றியினையும் அரசுக்கு தெரிவித்துள்ளனர். அதேவேளை எரிபொருட்களுக்கு 
அரசு வசூலிக்கும் வரியை குறைத்தால் மேலும் எரிபொருட்களின் விலை குறையும் எனவும் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - எரிபொருட்களின் விலையை பிரான்ஸில் குறைத்து விற்கும் நிறுவனங்கள்

இலங்கைக்கு இந்தியாவில் இருந்து பாவனைக்கு உதவாத முட்டைகள் கொண்டு வரப்படுகிறன

வெள்ளி, 29 செப்டம்பர், 2023

இந்திய முட்டைகளை இலங்கைக்கு இறக்குமதி செய்வதன் மூலம் பாரிய கொமிசன் கொடுக்கல் வாங்கல் நடைபெறுவதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத்
 தெரிவித்துள்ளார்.
 ஊடகவியலாளர் ஒருவர் வினவிய கேள்விக்கு பதிலளிக்கையில்; ​​அரச வர்த்தக (பல்வேறு) சட்டப்பூர்வ கூட்டுத்தாபனத்தின் தலைவர் மற்றும் சிலர் இணைந்து இதனைச் செய்வதாகவும், அதனை நிரூபிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
 நாளாந்தம் இந்தியாவில் இருந்து அகற்றப்படும் பாவனைக்கு உதவாத முட்டைகள் இந்நாட்டிற்கு கொண்டு வரப்படுவதாகவும், 
குறைந்த விலைக்கு முட்டைகள் கிடைத்தாலும் சந்தைக்கு வரும்போது விலை பெருமளவு அதிகரிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - இலங்கைக்கு இந்தியாவில் இருந்து பாவனைக்கு உதவாத முட்டைகள் கொண்டு வரப்படுகிறன

முச்சக்கரவண்டிகளுக்கு யாழ் மாவட்டத்தில் மீற்றர் பொருத்துவது முக்கியம்

வியாழன், 28 செப்டம்பர், 2023

யாழ்மாவட்டத்தில் முச்சக்கரவண்டிகள் “மீற்றர்” பொருத்துவது கட்டாயமானது என அறிவிக்கப்பட்டுள்ளது.
 அதேவேளை, முறையான அனுமதி பெற்று நடத்தப்படும் எந்தப் பயணிகள் சேவையையும் தடுக்க முடியாது என்று யாழ்ப்பாணம் மாவட்டச் செயலர் அ.சிவபாலசுந்தரன் தெரிவித்தார்.
 யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் நேற்று நடந்த விசேட கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.என்பது குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




READ MORE - முச்சக்கரவண்டிகளுக்கு யாழ் மாவட்டத்தில் மீற்றர் பொருத்துவது முக்கியம்

நாட்டில் ஒரு இலட்சம் ரூபாய்க்கு குறைவான பணத்தை வைப்பிலிட்டுள்ள முதியர்கள் வட்டியை பெறலாம்

புதன், 27 செப்டம்பர், 2023

ஒரு இலட்சம் ரூபாவிற்கும் குறைவான வைப்புத்தொகையை வைத்துள்ள மூத்த பிரஜைகளின் வட்டியை நிறுத்தி வைப்பதால் ஏற்பட்ட பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய 
தெரிவித்துள்ளார்.  
இதன் மூலம் ஒரு இலட்சம் ரூபாவிற்கும் குறைவான வைப்புத் தொகையை வைத்துள்ள முதியோர்களுக்கு தக்க வைப்புத் திட்டத்தினால் ஏற்படும் அநீதிக்கு தீர்வு வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். 
வன்வெல்ல பிரதேசத்தில் .27-09-2023.இன்று காலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை 
குறிப்பிட்டுள்ளார். 
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், இப்பிரச்சினைகளை விசாரிப்பதற்காக 1944 என்ற புதிய தொலைபேசி இலக்கமும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுவரை, ஒரு லட்சம் ரூபாய்க்கு குறைவான வைப்புத்தொகை உள்ள மூத்த குடிமக்கள், ஓராண்டு கழிந்த பின்னரே, தங்கள் வைப்புத்தொகைக்கு வட்டி பெற முடியும் என்க கூறிய அவர், நேற்றைய தினம்
 வெளியிடப்பட்ட புதிய சுற்றறிக்கையின் பிரகாரம், ஓராண்டு
 நிறைவடையாத போதிலும், ஒரு இலட்சம் ரூபாவிற்கும் குறைவான தொகையை வைப்பிலிட்டுள்ள முதியோர்கள் தமது வட்டிப் பணத்தைப் பெற்றுக்கொள்ளும் வசதியைப் பெற்றுள்ளதாக 
தெரிவித்துள்ளார். 
இது குறித்து விசாரிப்பதற்காக உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் ஒவ்வொரு அலுவலகத்திலும் தனி அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும்  அமைச்சர் மேலும்  தெரிவித்தார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் ஒரு இலட்சம் ரூபாய்க்கு குறைவான பணத்தை வைப்பிலிட்டுள்ள முதியர்கள் வட்டியை பெறலாம்

கொழும்பில் நிதி வலயமாக துறைமுக நகரின் பெயரை மாற்ற புதிய சட்டம்

செவ்வாய், 26 செப்டம்பர், 2023


துறைமுக நகரை "கொழும்பு நிதி வலயமாக" மாற்றும் வகையில் கடல்கடந்த நடவடிக்கைகள் தொடர்பில் தேவையான சட்ட ஏற்பாடுகளுடன் புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
 இது தொடர்பான சட்டமூலம் பூர்த்தி செய்யப்பட்டதன் பின்னர் இந்த வருட இறுதிக்குள் இது நடைமுறைக்கு வரும் என ஜனாதிபதி 
தெரிவித்தார்.
 கொழும்பில் நடைபெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வர்த்தக மத்தியஸ்த மாநாட்டில் கலந்து கொண்ட போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - கொழும்பில் நிதி வலயமாக துறைமுக நகரின் பெயரை மாற்ற புதிய சட்டம்

வேலென்ஸ் நகரில் பல குற்றச்செயல்களுடன் ஈடுபட்டோர் அதிரடியாக கைது

திங்கள், 25 செப்டம்பர், 2023

பிரான்சில் கடந்த இரண்டு ஆண்டுகளில் பல துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள், கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நான்கு படுகொலைகள், தீவிர போதைப்பொருள் கடத்தல்கள் போன்ற வற்றில் ஈடுபட்டுவந்த ஒரு
 கும்பலையே, 25-09-2023.இன்று அதிகாலை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
 பாதுகாப்பு அமைச்சர் Gérald Darmanin அவர்களின் நேரடி கண்காணிப்பில் காவல்துறையினரின் விசேட பிரிவுகளான Raid, BRI பிரிவினரோடு CRS காவல்துறையினர் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர் என அறியமுடிகிறது.
 கைது நடவடிக்கையின் போது அவர்களிடம் இருந்து தானியங்கி துப்பாக்கிகள், ரைபில்கள், ரவ்வைஙள், என மிக மோசமான ஆயுதங்களும், போதைப்பொருட்களும் பல்லாயிரக் கணக்கான பணமும் கைப்பற்றப்பட்டது எனவும் தெரியவருகிறது.
 நீண்ட கால திட்டமிடலின் பின்னர் Valence, நகரில் Drôme பகுதியில் இந்த அதிரடி நடவடிக்கையை ஒரேநேரத்தில் தாம் மேற்கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.என்பதும் குறிப்பிடத்தக்கது 


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - வேலென்ஸ் நகரில் பல குற்றச்செயல்களுடன் ஈடுபட்டோர் அதிரடியாக கைது

நாட்டில் மழை பெய்தாலும் நீர்த்தேக்கங்களில் போதிய நீர் இல்லை என மக்கள் விசனம்

ஞாயிறு, 24 செப்டம்பர், 2023

நாட்டில் கடந்த சில நாட்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகின்ற போதிலும், தடையின்றி நீர் விநியோகத்தை உறுதிப்படுத்தும் வகையில் போதிய மழைவீழ்ச்சி கிடைக்கவில்லை என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
 சில பிரதேசங்களில் தொடர்ந்தும் வறட்சியான காலநிலை நிலவுவதே இதற்குக் காரணம் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பிரதிப் பொது முகாமையாளர் அனோஜா களுஆராச்சி 
தெரிவித்தார்.
 அதன் பிரகாரம் அம்பாறை, மொனராகலை, பிபில மற்றும் சீலத்தனை ஆகிய நீர் விநியோக முறைமைகளில் இருந்து கண்காணிப்பு 
முறைமையின் கீழ் நீர் விடுவிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு குடிநீர் வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.என்பதும் குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் மழை பெய்தாலும் நீர்த்தேக்கங்களில் போதிய நீர் இல்லை என மக்கள் விசனம்

சிகரெட்டுக்கு இங்கிலாந்தில் தடை விதிக்க பிரதமர் ஆலோசனை

சனி, 23 செப்டம்பர், 2023

இங்கிலாந்து பிரதமராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷிசுனக் இருந்து வருகிறார். இவர் பதவியேற்ற நாளில் இருந்து நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல பல்வேறு நடவடிக்கைகளை
 எடுத்து வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக அவர் அடுத்த தலைமுறையினர் புகை பழக்கத்துக்கு அடிமையாகி விடக்கூடாது என்பதற்காக புகையிலை எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். 
இதையடுத்து இங்கிலாந்தில் சிகரெட்டுக்கு தடை விதிப்பது குறித்து ரிஷி சுனக் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 2009-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி மற்றும் அதற்கு பிறகு பிறந்தவர்களுக்கு புகையிலையை விற்க தடை விதிக்கப்பட இருப்பதாக தெரியவந்துள்ளது.
 இது தொடர்பாக இங்கிலாந்து அரசின் செய்தி தொடர்பாளர் இ-மெயிலில் அனுப்பிய செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
 இங்கிலாந்தில் 2030-ம் ஆண்டுக்குள் புகைபிடிக்காதவர்களாக இருக்க வேண்டும் என்பது தான் எங்களது லட்சியம். புகைப்பழக்கத்தில்
 இருந்து விடுபடுமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளோம். புகை பிடிப்பவர்களின் சதவீதத்தை குறைக்க ஏற்கனவே நடவடிக்கை எடுத்து வருகிறோம். எனக்குறியள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - சிகரெட்டுக்கு இங்கிலாந்தில் தடை விதிக்க பிரதமர் ஆலோசனை

யாழ் குறிகாட்டுவான் இறங்குதுறையை புனரமைத்து தருமாறு கோரிக்கை

வெள்ளி, 22 செப்டம்பர், 2023

யாழ்ப்பாணத்தில் இருந்து தீவகத்திற்கு பொருட்களை கொண்டு செல்வதில் சிரமங்களை எதிர்கொள்வதனால் மிக விரைவில் குறிகாட்டுவான் இறங்குதுறையை புனரமைப்பு செய்து தருமாறு தீவக மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
யாழ்ப்பாணத்தில் இருந்து நயினாதீவு மற்றும் நெடுந்தீவு ஆகிய பகுதிகளுக்கு செல்வதற்கான இறங்குதுறையாக குறிகாட்டுவான் இறங்கு துறையே உள்ளது. 
தற்போது குறிகாட்டுவான் இறங்கு துறை சேதமடைந்துள்ளமையால் , கனரக வாகனங்கள் இறங்குதுறைக்கு அண்மித்த பகுதிக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. 
அதனால் கனரக வாகனங்களில் நயினாதீவு மற்றும் நெடுந்தீவுக்கு கொண்டு செல்வதற்காக கொண்டு வரப்படும் , அத்தியாவசிய பொருட்கள் உட்பட கட்டட பொருட்களான மணல் , கம்பி , சீமெந்து ஆகியவை 
இறங்கு துறைக்கு சற்று தொலைவில் இறங்கி அங்கிருந்து 
மனித வலுவை பயன்படுத்தி தூக்கி சென்று படகுகளில்
 ஏற்ற வேண்டிய நிலைமை காணப்படுகிறது. அதனால் பொருட்களை கொண்டு செல்வோர் அதிக சிரமங்களை எதிர்கொள்வதுடன் 
அதிகளவான கூலியும் வழங்க வேண்டிய நிலையில் காணப்படுகின்றனர். 
அதேவேளை குறிகாட்டுவான் - நயினாதீவுக்கு இடையில் 
சேவையில் ஈடுபட்டு வந்த "கடற்பாதை" மிக மோசமாக பழுதடைந்துள்ளமையால் 
அதன் சேவையும் கடந்த சில மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளமையால் , நயினாதீவுக்கு பொருட்களை எடுத்து செல்வதில் 
சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். 
நயினாதீவு நாக பூசணி அம்மன் மற்றும் நாக விகாரை ஆகியவற்றுக்கு அதிகளவான யாத்திரியர்கள் தினமும் செல்வதனால் ,பயணிகள் படகு சேவையில் பொருட்களை அதிகளவில் ஏற்ற முடியாத நிலைமை காணப்படுவதால் , நயினாதீவுக்கு பொருட்களை கொண்டு செல்வோர் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். 
அதனால் மிக விரைவில் குறிகாட்டுவான் பாலத்தையும் , கடற்பாதையை புனரமைப்பு செய்து தருமாறு அப்பகுதி மக்கள் கோரியுள்ளனர். 
என்பதும் குறிப்பிடத்தக்கது


 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




READ MORE - யாழ் குறிகாட்டுவான் இறங்குதுறையை புனரமைத்து தருமாறு கோரிக்கை

பல பகுதிகளுக்கு கொழும்பின் எதிர்வரும் இருபத்தி மூன்றாம் திகதி நீர் விநியோகம் தடைப்படும்

வியாழன், 21 செப்டம்பர், 2023

கொழும்பின் பல பகுதிகளுக்கு எதிர்வரும் 23-09-2023. திகதி சனிக்கிழமை மாலை 6.00 மணி முதல் 24 ஆம் திகதி காலை 6.00 மணி வரை 12 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என நீர் வழங்கல் சபை 
தெரிவித்துள்ளது.
 இதன்படி கொழும்பு 11, 12, 13, 14, மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் சபை தெரிவித்துள்ளது.
என்பதும் குறிப்பிடத்தக்கது.. 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - பல பகுதிகளுக்கு கொழும்பின் எதிர்வரும் இருபத்தி மூன்றாம் திகதி நீர் விநியோகம் தடைப்படும்

பிரெஞ் இளைஞர் எலி ஒன்றை உயிருடன் பிடித்து, சாப்பிட்டுள்ளார்.

புதன், 20 செப்டம்பர், 2023

 பிரெஞ் இளைஞர் ஒருவர் தனது நண்பர்களுடனான விருந்து நிகழ்வொன்றின் போது    19-09-2023. அன்று  எலி ஒன்றை உயிருடன் விழுங்கியுள்ளார். 
இச்செயலுக்கு மிருகவதைக்கு எதிரான அமைப்பு ஒன்று வழக்கு பதிவு செய்துள்ளது.
 இச்சம்பவம் Thiers (Marseille) நகரில் இடம்பெற்றுள்ளது. இளைஞர் ஒருவர் சிறிய எலி ஒன்றை உயிருடன் பிடித்து, பின்னர் அதனை தனது வாய்க்குள் கொண்டு சென்று அதனை உயிருடன் சாப்பிட்டுள்ளார். 
அதனை காணொளியாக பதிவு செய்து சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளனர். இணையவாசிகளை அதிர்ச்சியடைய வைத்த இந்த காணொளி, மிக வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
 அதேவேளை, La Fondation 30 Millions எனும் மிருகவதைக்கு எதிரான அமைப்பு மேற்படி சம்பவத்துக்கு கண்டனம் வெளியிட்டுள்ளதுடன், குறித்த இளைஞன் மீது வழக்கும் பதிவு செய்துள்ளனர்.என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - பிரெஞ் இளைஞர் எலி ஒன்றை உயிருடன் பிடித்து, சாப்பிட்டுள்ளார்.

போதான வைத்தியசாலையில் கையை இழந்த மாணவி வைசாலி பாடசாலைக்கு சமூகமளித்தார்

செவ்வாய், 19 செப்டம்பர், 2023

யாழ் போதான வைத்தியசாலை மருத்துவர்கள் மற்றும் தாதியரின் அசண்டையீனம் மற்றும் கவனக்குறைவினால் தனது 
கையினை இழந்த யாழ் இந்து ஆரம்ப பாடசாலை மாணவி சா.வைசாலி, மீண்டும் தனது கற்றலைத் தொடர்வதற்காக இன்று பாடசாலைக்கு சமூகமளித்தார்.
​அவரை பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், சக மாணவர்கள் பூங்கொத்து வழங்கி வரவேற்றனர்.
வைசாலி கற்றலைத் தொடர்வதற்கும் அவர் பாடசாலைச் சமூகத்துடன் மீண்டும் ஒன்றித்து வாழ்வதற்கான அனைத்துவிதமான ஊக்கத்தையும் வழங்குவதாக பாடசாலைச் சமூத்தினர் தெரிவித்தனர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>




READ MORE - போதான வைத்தியசாலையில் கையை இழந்த மாணவி வைசாலி பாடசாலைக்கு சமூகமளித்தார்

தேசிக்காய் ஒன்றின் விலை இலங்கையில் சடுதியாக அதிகரிப்பு

திங்கள், 18 செப்டம்பர், 2023

இலங்கையில் தேசிக்காய் ஒன்றின் விலை 30 ரூபா முதல் 58 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டதாக தகவல்கள் 
வெளியாகியுள்ளன.
 மாத்தளை உள்ளிட்ட சில பகுதிகளில் தேசிக்காய் ஒன்றின் விலை 30 ரூபா முதல் 38 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டுள்ளதுடன், 
நுவரெலியா உள்ளிட்ட பெருந்தோட்ட பகுதிகளில் தேசிக்காய் 
ஒன்றின் விலை 58 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன.
 இதேவேளை, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோகிராம் தேசிக்காயின் விலை 1200 ரூபாவாக 
பதிவாகியுள்ளது.
 ஊவா மற்றும் வரட்சியுடனான பகுதிகளிலேயே தேசிக்காய் செய்கை அதிகளவில் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும்,
 தம்புள்ளை 
பொருளாதார மத்திய நிலையத்திற்கு 17-09-2023.அன்றய   தினத்தில் 2000 கிலோகிராம் தேசிக்காய் மாத்திரமே கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
.என்பதும் குறிப்பிடத்தக்கது.                


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>



READ MORE - தேசிக்காய் ஒன்றின் விலை இலங்கையில் சடுதியாக அதிகரிப்பு

நாட்டில் பயிரிடுவதற்கு இரண்டு புதிய வகை மாதுளை வகைகளை அறிமுகம்

ஞாயிறு, 17 செப்டம்பர், 2023

இலங்கையில் பயிரிடுவதற்கு இரண்டு புதிய வகை மாதுளை வகைகளை அறிமுகம் செய்வதற்காக விவசாயத் திணைக்களத்தின் 
விவசாய நிபுணர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சி மிகவும் 
வெற்றியடைந்துள்ளது.
 மிகவும் இனிப்பு சுவை கொண்ட இந்த இரண்டு மாதுளை வகைகளும் இன்னும் சில மாதங்களில் விவசாய திணைக்களத்தினால் 
இலங்கையில் பயிர்ச்செய்கைக்காக அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
 மாதுளை விதைகளாகவும் பழங்களாகவும் பயன்படுத்தப்படும் அதிக அளவு மாதுளைகள் இந்தியா மற்றும் பிற நாடுகளில் இருந்து இந்த நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படுகின்றன.
 எனவே, ஆண்டுதோறும் அதிக அளவில் அன்னியச் செலாவணி இழப்பை தவிர்க்கும் வகையில், இரண்டு புதிய மாதுளை ரகங்களை அறிமுகப்படுத்த வேளாண் துறை ஆய்வு செய்தது.என்பதும் குறிப்பிடத்தக்கது.  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


READ MORE - நாட்டில் பயிரிடுவதற்கு இரண்டு புதிய வகை மாதுளை வகைகளை அறிமுகம்

இலங்கை தாதி ஒருவர் பிரித்தானிய பாராளுமன்றத்தில் விருது பெற்றுள்ளார்

சனி, 16 செப்டம்பர், 2023

பிரித்தானிய பாராளுமன்றத்தில் இலங்கை தாதியான புஷ்பா ரம்யானி சொய்சா Most Powerful and Influential Women Award ஐப் பெற்றுள்ளார்.
 15.09.2023 அன்று மாலை 7 மணிக்கு இந்த சர்வதேச 
விருதைப் பெற்றுள்ளார்.
 பிரித்தானிய பாராளுமன்றத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த உலகளாவிய விருது வழங்கும் விழாவில் 10க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் 
கலந்து கொண்டனர்.
 அரசியல் அதிகாரங்கள், வணிக சக்திகள், அறிஞர்கள், உட்பட ஏராளமான மக்கள் இந்த நோக்கத்திற்காக பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டனர்.
 உலக மனிதாபிமான அறக்கட்டளை இதை ஏற்பாடு 
செய்திருந்தது, செவிலியர் ஒருவர் இதுபோன்ற விருதைப் பெறுவது இதுவே முதல் முறை.
 புஷ்பா ரம்யானி சொய்சா பிரித்தானிய பாராளுமன்றத்திலும் லண்டன் வர்த்தக சபையிலும் இரண்டு சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளார்.
என்பதும் குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

READ MORE - இலங்கை தாதி ஒருவர் பிரித்தானிய பாராளுமன்றத்தில் விருது பெற்றுள்ளார்

கனடாக்கு யாழை சேர்ந்த பெண்ணைஅனுப்புவதாக மோசடி செய்த காத்தான்குடி வாசி மறியலில்

வெள்ளி, 15 செப்டம்பர், 2023

சமூக வலைத்தளம் ஊடாக கனடா அனுப்புவதாக விளம்பரம் செய்து பெண்ணொருவரிடம் 10 இலட்ச ரூபாய் பண மோசடி செய்த 
பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் ஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். மேலதிக நீதவான் நீதிமன்று 
உத்தரவிட்டுள்ளது 
யாழ்ப்பாணம் கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பெண்ணொருவர் , சமூக வலைத்தளத்தில் , கனடா அனுப்பி வைக்க முடியும் என வந்த விளம்பரம் ஒன்றினை நம்பி , விளம்பரத்தில் 
இருந்த தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு , 
விசாரித்த போது , கனடா அனுப்பி வைப்பதாக அப்பெண்ணுக்கு உறுதி அளித்துள்ளார்
அதனை நம்பி , அந்த பெண் தொலைபேசியில் தன்னுடன் கதைத்தவருக்கு 10 இலட்ச ரூபாய் முற்பணமாக வழங்கியுள்ளார். 
அதன் பின்னர் நீண்ட காலமாக தனது கனடா பயண ஒழுங்குகள் எதுவும் நடைபெறாததால் , கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். 
முறைப்பாட்டின் பிரகாரம், யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் காத்தான்குடியை சேர்ந்த , பிரதேச சபை முன்னாள் உறுப்பினரான 57 வயதுடைய ந
பரே மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்பதனை கண்டறிந்து ,காத்தான்குடியில் வைத்து அவரை கைது செய்தனர். 
கைது செய்யப்பட்ட நபரை யாழ்ப்பாணம் கொண்டு வந்து மேலதிக விசாரணைகளின் பின்னர் நேற்றைய தினம் வியாழக்கிழமை யாழ்.மேலதிக நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை மன்று அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.என்பதும் குறிப்பிடத்தக்கது.  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - கனடாக்கு யாழை சேர்ந்த பெண்ணைஅனுப்புவதாக மோசடி செய்த காத்தான்குடி வாசி மறியலில்

திருமண புறோக்கர்களை லண்டனில் ஏமாற்றிய தம்பதிகள் பழிதீர்த்த தரகர்கள்

வியாழன், 14 செப்டம்பர், 2023

லண்டனில் கலியாண புறோக்கர் சேவை ஊடாக திருமணம் செய்த  இளவயதை தாண்டிய அங்கிளுக்கும், அன்ரியும் தமக்கான புறோகர் பணத்தை வழங்கவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர்.
குறித்த நபர்கள் இலங்கையர்கள் என்றும் இருவருக்கும் திருமணம் முடிந்துவிட்டபோது இன்னும் தமக்கு புறோக்கர் காசு தரவில்லை என புறோகர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
அதோடு அந்த தம்பதிகளின் புகைப்படத்தையும் பாதிக்கப்பட்ட  புறோகர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர்.
அதேவேளை ஏமாற்றபட்ட கலியாணப் புறோக்கர் பெரும்பாலும் விவாகரத்தானவர்களுக்கும் வயதானவர்களுக்குமே திருமண தரகு வேலை செய்து வருவதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் சம்பந்தப்படவர்களின் புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பதிவேற்றி தம்மை ஏமாற்றிவிட்டதாக கூறும் கலியாண புறோக்கர் சேவை தொடர்பில் பலரும் விசனங்களை வெளியிட்டுள்ளனர்.என்பதும் குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - திருமண புறோக்கர்களை லண்டனில் ஏமாற்றிய தம்பதிகள் பழிதீர்த்த தரகர்கள்

அதாவது கனடா விசா சம்மந்தமான தவிர்க்க முடியாத ஒரு செய்தி

புதன், 13 செப்டம்பர், 2023

 உலகம் எங்கும் இருந்து வந்த over 3 millions visitors visa application pendingல் உள்ளதால் அதை சரி பார்த்தே மற்றவர்களுக்கு விசா வழங்க உள்ளதாகவும் அதே நேரம் விசா இலகு படுத்தலை தவிர்த்து தரமான ஆட்களை உள் வாங்க உள்ளதாக உள்ளக நம்பகமான தகவல்.
ஆனால் இரத்த உறவினரென proof பண்ணி அவர்களது நிகழ்வுகளுக்கு அதுவும் அரச உத்தியோகத்தர்கள் or நல்ல நிரந்தர வேலையில் உள்ள 
ஒரு நபர் over 30000 canadian dollars அதாவது 75 லட்சம் saving accountல காட்டினால் கனடா வரலாம்
இவர்கள் தவிர்ந்தவர்கள் தவிர்ப்பது நல்லது. உங்கள் நேரமும் பணமும் வீண் போக வாய்ப்புள்ளது.
இந்த தகவல் தற்காலிகமே. Pendingல் உள்ள application review பண்ணியதன் பிற்பாடு நல்ல சேதி வர சந்தர்ப்பம் உள்ளது. அது வரை வீண் செலவையும் அலைச்சலையும் தவிர்ப்பது நல்லது .என்பதும் குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - அதாவது கனடா விசா சம்மந்தமான தவிர்க்க முடியாத ஒரு செய்தி

நாட்டில் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

செவ்வாய், 12 செப்டம்பர், 2023

நாட்டில் சுங்க வரி விலக்குக்கு உட்பட்டு புதிய ரீசார்ஜ் செய்யக்கூடிய மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் 
அளித்துள்ளது.
முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், தொடர்புடையசுங்க வரிகள் இல்லாமல் புதிய ரீசார்ஜ் செய்யக்கூடிய மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் 
தெரிவித்துள்ளது.
நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு, கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற  அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, 30,000 அமெரிக்க டொலருக்கு மிகாமல் வரி விதிப்புக்கு உட்பட்டு மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை
 ஒப்புதல் அளித்தது.என்பதும் குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>


READ MORE - நாட்டில் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

டெல்லியில் இந்த ஆண்டும் தீபாவளியன்று பட்டாசு வெடிக்க தடை என அமைச்சர் தகவல்

திங்கள், 11 செப்டம்பர், 2023

இந்தியா  டெல்லியில் மாசுவை கட்டுப்படுத்தும் விதமாக இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டத்தின் போது பட்டாசு வெடிப்பதற்கு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தடை விதிப்பதாக சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.
மேலும், டெல்லியில் எந்த வகையான பட்டாசுகளையும் உற்பத்தி செய்வது, சேமித்து வைப்பது, விற்பனை செய்வது, ஆன்லைனில் விநியோகிப்பது மற்றும் வெடிப்பதும் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. 
டெல்லி மாசுக்கட்டுப்பாடு குழு சார்பில் கடை வைப்பதற்கு உரிமம் வழங்கப்படவில்லை என்று சுற்றறிக்கை வெளியிட காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பண்டிகை கொண்டாடுவது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு சுற்றுச்சுழலை காப்பதும் முக்கியம் என்று டெல்லி மாநில சுற்றுச்சூழல் அமைச்சர் 
கோபால் ராய் தெரிவித்துள்ளார்.என்பதும் குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - டெல்லியில் இந்த ஆண்டும் தீபாவளியன்று பட்டாசு வெடிக்க தடை என அமைச்சர் தகவல்

வீடுகளுக்கே சென்று கொழும்பில் பசும்பால் வழங்கும் வேலைத்திட்டம்

ஞாயிறு, 10 செப்டம்பர், 2023

கொழும்பு நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் காலை மற்றும் மாலை வேளைகளில் வீடுகளுக்கு புதிய பசும்பால் வழங்கும் 
வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக 
அறிவிக்கப்பட்டுள்ளது. 
இதன்படி குறித்த வேலைத்திட்டமானது நாளை (11.09) முதல் நடைமுறைப்படுத்தப்படும் என தேசிய கால்நடை அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது. 
நாரஹேன்பிட்டியில் உள்ள தேசிய கால்நடை அபிவிருத்திச் சபையின் வளாகத்தில் நாளை இந்த வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
என்பதும் குறிப்பிடத்தக்கது


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




READ MORE - வீடுகளுக்கே சென்று கொழும்பில் பசும்பால் வழங்கும் வேலைத்திட்டம்

கருக்கலைப்புக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி மெக்ஸிகோ உச்சநீதிமன்றம்

சனி, 9 செப்டம்பர், 2023

மெக்ஸிகோவில் கருக்கலைப்புக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி அந்த நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மெக்சிகோவின் உச்ச நீதிமன்றம் புதன்கிழமை கருக்கலைப்புக்கான அனைத்து கூட்டாட்சி குற்றவியல் தண்டனைகளையும் தூக்கி எறிந்தது, 
நடைமுறையை தடைசெய்யும் தேசிய சட்டங்கள் அரசியலமைப்பிற்கு எதிரானது மற்றும் பெண்களின் உரிமைகளை மீறுவதாக தீர்ப்பளித்தது. கருக்கலைப்பை மத்திய குற்றவியல் சட்டத்தில் இருந்து நீக்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கருக்கலைப்பு கோரும் எவருக்கும் மத்திய பொது சுகாதார சேவை மற்றும் அனைத்து மத்திய சுகாதார நிறுவனங்களும் கருக்கலைப்பு வழங்க வேண்டும் என்று தீர்ப்பின்படி கோரப்படும். “எந்தவொரு பெண்ணும் அல்லது கர்ப்பிணிப் பெண்ணும், எந்த ஒரு சுகாதாரப் பணியாளரும் கருக்கலைப்புக்காக தண்டிக்கப்பட முடியாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
இருப்பினும், சுமார் 20 மெக்சிகன் மாநிலங்கள் கருக்கலைப்பை இன்னும் குற்றமாக்குகின்றன. அந்த மாநிலங்களில் உள்ள நீதிபதிகள் நீதிமன்றத்தின் முடிவுக்குக் கட்டுப்பட வேண்டும் என்றாலும், அனைத்து தண்டனைகளையும் நீக்க மேலும் சட்டப் பணிகள் தேவைப்படும். 

 தீர்ப்பின் கொண்டாட்டம் விரைவில் சமூக ஊடகங்களில் பரவியது. “இன்று மெக்சிகன் பெண்களுக்கு வெற்றி மற்றும் நீதிக்கான நாள்!” மெக்ஸிகோவின் பெண்களுக்கான தேசிய நிறுவனம், X சமூக ஊடக தளமான ஒரு செய்தியில் குறிப்பிட்டுள்ளது. 

அரசாங்க அமைப்பு இந்த முடிவை பாலின சமத்துவத்தை நோக்கிய “பெரிய படி” என்று அழைத்தது. முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியான சென். ஓல்கா சான்செஸ் கோர்டெரோ, இந்தத் தீர்ப்பைப் பாராட்டினார், 
X இல் இது “அனைவரின் உரிமைகளும் மதிக்கப்படும் மிகவும் நியாயமான சமுதாயத்தை” நோக்கிய முன்னேற்றத்தைக் குறிக்கிறது என்று கூறினார். மெக்ஸிகோவின் காங்கிரஸுக்கு பதிலடியாக சட்டத்தை இயற்றுமாறு அவர் அழைப்பு விடுத்தார். 

 ஆனால் அதிக மதம் கொண்ட நாட்டில் உள்ள மற்றவர்கள் இந்த முடிவை மறுத்தனர். கருத்தரிக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்கான சிவில் சங்கத்தின் இயக்குனர் இர்மா பேரியண்டோஸ், விரிவாக்கப்பட்ட கருக்கலைப்பு அணுகலுக்கு எதிரான போராட்டத்தை எதிர்ப்பாளர்கள் தொடருவார்கள் என்றார்.
என்பதும் கறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - கருக்கலைப்புக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி மெக்ஸிகோ உச்சநீதிமன்றம்

ஹாங்காங்கில் நூற்றி நாற்பது ஆண்டுகளுக்கு பிறகு இடைவிடாது கனமழை

வெள்ளி, 8 செப்டம்பர், 2023

ஹாங்காங்கில் கடந்த சில நாட்களாக இடைவிடாமல் மழை கொட்டி வருகிறது. இதனால் பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன.
 ரோடுகள் அனைத்தும் ஆறாக மாறி இடுப்பளவுக்கு மேல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. 
ஒரே நாள் இரவில் 200 மி.மீட்டர் மழை கொட்டி தீர்த்ததால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. சீனாவின் குவாங்டாங் கடற்கரையில் பலத்த மழை பெய்தது. 
ஹாங்காங்கில் மழையால் மெட்ரோ ரெயில் சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளன. பல மெட்ரோ ரெயில் நிலையங்கள் தண்ணீரில் மூழ்கி கிடக்கிறது. இந்த தண்ணீரை வெளியேற்றும் பணி நடந்து வருகிறது. 
வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர். வாகன போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டு உள்ளது. 
பள்ளிகள், வணிக வளாகங்கள் மூடப்பட்டு உள்ளன. ஊழியர்கள் வீட்டில் இருந்த படி பணி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. 
 140 ஆண்டுகளுக்கு பிறகு ஹாங்காங்கில் இடைவிடாமல் கனமழை 
பெய்து உள்ளது. 
இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. வீடுகளை விட்டு வெளியில் யாரும் வர வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - ஹாங்காங்கில் நூற்றி நாற்பது ஆண்டுகளுக்கு பிறகு இடைவிடாது கனமழை