கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தைச் சேர்ந்த 11 வயது சிறுவன் உலக அளவில் பதக்கங்களை குவித்து சாதனை
படைத்துள்ளார்.
11 வயதான டக்லென் போர்சியர் என்ற சிறுவனே இவ்வாறு சாதனை படைத்துள்ளார். உலக உயரம் குறைந்தவர்களுக்கான விளையாட்டுப் போட்டியில் நான்கு தங்கம் உள்ளிட்ட மொத்தமாக ஏழு பதக்கங்களை வென்று கனடாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
சிறு வயது முதலே பல்வேறு விளையாட்டுகளில் டெக்லென் ஆர்வம் காட்டி வந்தார் என அவரது பெற்றோர் தெரிவிக்கின்றனர். எவ்வாறெனினும் அவரது உயரம் காரணமாக சாதாரண வீரர்கள் பங்கேற்கும்
விளையாட்டுக்களில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கின்றனர்.
தனது விடாமுயற்சியின் காரணமாக குறித்த சிறுவன் சாதனையை படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இம்முறை ஜெர்மனியில் உலக உயரம் குறைந்தவர்களுக்கான விளையாட்டுப்
போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் கனடாவை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் 46 பேர் பங்கேற்று இருந்தனர். இந்த போட்டியில் சிறந்த திறமைகளை வெளிப்படுத்தி தாய் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார் என அவரது பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
இன்னும் நான்கு ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள உலக உயரம் குறைந்தோருக்கான விளையாட்டுப் போட்டியிலும் பதக்கங்களை குவிக்க ஆசைப்படுவதாக டக்லென் தெரிவிக்கின்றார்.
என்பதும் குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக