யாழ் போதான வைத்தியசாலை மருத்துவர்கள் மற்றும் தாதியரின் அசண்டையீனம் மற்றும் கவனக்குறைவினால் தனது
கையினை இழந்த யாழ் இந்து ஆரம்ப பாடசாலை மாணவி சா.வைசாலி, மீண்டும் தனது கற்றலைத் தொடர்வதற்காக இன்று பாடசாலைக்கு சமூகமளித்தார்.
அவரை பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், சக மாணவர்கள் பூங்கொத்து வழங்கி வரவேற்றனர்.
வைசாலி கற்றலைத் தொடர்வதற்கும் அவர் பாடசாலைச் சமூகத்துடன் மீண்டும் ஒன்றித்து வாழ்வதற்கான அனைத்துவிதமான ஊக்கத்தையும் வழங்குவதாக பாடசாலைச் சமூத்தினர் தெரிவித்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக