இந்தியாவில் தனது வேண்டுதல் நிறைவேறாத காரணத்தால் கோவிலில் இருந்து சிவலிங்கத்தை திருடிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரப்பரதேச மாநிலம், கௌசாம்பி மாவட்டத்தைச் சேர்ந்தவர் 27
வயதான சோட்டு.
இவர் தான் விரும்பிய பெண்ணொருவரை திருமணம் செய்து கொள்ள நினைத்த நிலையில் அவர் குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தெய்வத்தின் அருள் மூலம் தனது குடும்ப உறுப்பினர்களின் மனதை மாற்றி சமாதானப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையில், சோட்டு சிவபெருமான் கோவிலுக்கு தினமும் சென்று பிரார்த்தனை செய்தார்.
ஒரு மாதமாக தனது வீட்டருகில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்த நிலையிலும் சோட்டுவின் வேண்டுதல் பலிக்கவில்லை. இதனால் கோபமடைந்த சோட்டு, நேராக கோவிலுக்கு சென்று சிவலிங்கத்தை திருடி சென்றுள்ளார்.
இந்நிலையில் கோவிலுக்கு சாமி கும்பிட வந்த பொது மக்கள், சிவலிங்கம் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை காவல்துறை ஆய்வு செய்த போது, சோட்டு தான் அந்த சிவலிங்கத்தை திருடியது தெரிய வந்தது.
இதையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் சிவலிங்கத்தை மீட்டு மீண்டும் கோவிலில் வைத்தனர்.என்பதும் குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக