கனடாவின் டொரன்டோவில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக தமிழர் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
50 வயதான நபர் மீதே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பாடசாலையின் பாதுகாப்பு, பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்த தமிழர் மீதே இவ்வாறு சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஆரம்பத்தில் குற்றச் செயல்கள் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பில் கடந்த 18 ஆம் திகதி முதல் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சந்தேக நபரை பொலீசார் கைது செய்துளள்னர் என்பது குறிப்பிடத்தக்கது. மார்க்கம் பகுதியைச் சேர்ந்த குறித்த தமிழர் பல்வேறு சந்தர்ப்பங்களில் சிறுவர் துஸ்பியோக நடவடிக்கைகள் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பாலியல் ரீதியான குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக சந்தேக நபர் மீது பொலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கடந்த 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் சந்தேக நபர் பாடசாலையில் கடமை ஆற்றி வந்துள்ளார். இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் இருந்தால் அதனை அறிவிக்குமாறு பொலீசார் பொதுமக்களிடம் கோரியுள்ளனர்.
என்பதும் குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக