யாழ்செய்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
யாழ்செய்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

யாழில் புத்தூர் - சுன்னாகம் வீதி இரண்டு நாட்கள் மூடப்படும்

வியாழன், 14 மே, 2026

யாழ் சுன்னாகம் - புத்தூர் வீதி எதிர்வரும்.16-05-2026. சனிக்கிழமை 
முதல்.17-05-2026. ஞாயிற்றுக்கிழமை வரையில் மூடப்பட்டு இருக்கும் என வடக்கு புகையிரத வழி மற்றும் பணிகள் திணைக்கள பொறியியலாளர் G.K  சதுரெனோ அறிவித்துள்ளார். 
சுன்னாகம் - புத்தூர் வீதியில் அமைந்துள்ள புகையிரத கடவை மார்க்கத்தை அவசரமாக திருத்தம் செய்யப்பட வேண்டிய நிலையில் உள்ளதால், மேற்படி கடவை நாளை மறுதினம் சனிக்கிழமை காலை 7.00 மணி முதல் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணி 
வரை மூடப்படும் 
அதனால் வாகன போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் போக்குவரத்துக்கு மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு 
அறிவிக்கப்படுகிறது. 
மேலும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

READ MORE - யாழில் புத்தூர் - சுன்னாகம் வீதி இரண்டு நாட்கள் மூடப்படும்

யாழ் சுன்னாகம் பொலிசாரால் உயிர் அச்சுறுத்தல் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

வியாழன், 14 நவம்பர், 2024

யாழ் சுன்னாகம் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களால் தமது உயிர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல் காரணமாக தமது 
உயிர்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது
டந்த வாரம் சுன்னாகப் பொலிசாரால் குடும்பம் ஒன்று வீதியில் வைத்து அச்சுறுத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பம் தமக்கு குறித்த போலீஸ் நிலைய உத்தியோகத்தர்களால் தமது குடும்ப 
உறுப்பினர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக
 தெரிவித்து, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாட்டை 
பதிவு செய்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் கனகராஜ்சிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது பாதிக்கப்பட்ட குடும்பம் முறைப்பாட்டை பதிவு
 செய்துள்ளதாகவும் முறைப்பாடு தொடர்பான மேலதிக
 விசாரணைகளை ஆணைக்குழு மேற்கொள்ளும் என அவர் மேலும் தெரிவித்தார்.என்பது குறிப்பிடத்தக்கது. 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - யாழ் சுன்னாகம் பொலிசாரால் உயிர் அச்சுறுத்தல் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தெல்லிப்பளை பகுதியில் பற்றைக்காடொன்றில் இருந்து சொகுசு கார் மீட்பு

திங்கள், 21 அக்டோபர், 2024

யாழ் தெல்லிப்பளை பகுதியில் பற்றைக்காடொன்றில் இருந்து சொகுசு கார் ஒன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
 பற்றைக்காடு ஒன்றினுள் சொகுசு கார் ஒன்று மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் காரை மீட்டு பொலிஸ் நிலையம் கொண்டு சென்றுள்ளனர். 
 பொலிஸ் நிலையத்தில் காரின் இலக்க தகட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த வேளை , அது போலியானது என தெரிய வந்துள்ளது. அத்துடன் காரில் இருந்த ஆவணங்களும் போலியானவை என்பது 
தெரிய வந்துள்ளது.
 குற்றச்செயல்களுடன் தொடர்புடைய காராக இருக்காமல் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். கார் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - தெல்லிப்பளை பகுதியில் பற்றைக்காடொன்றில் இருந்து சொகுசு கார் மீட்பு

யாழில் புலம்பெயர் தமிழரிடம் ஒரு கோடி ரூபாவை கொள்ளையிட்ட இருவர் கைது

வியாழன், 3 அக்டோபர், 2024

யாழில் தனது காணியை விற்ற பணம் ஒரு கோடியே 5 லட்ச ரூபாய் பணத்துடன் வீடு திரும்பிக்கொண்டிருந்த நபரை தாக்கி விட்டு பணத்தை இருவர் கொள்ளையடித்து சென்ற குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சங்குவேலி பகுதியை சேர்ந்த நபர் ஒருவர், தற்போது வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில், அண்மையில் யாழ்ப்பாணம் வந்திருந்தார். அவர் புதன்கிழமை (02) தனது காணியை விற்ற பணத்துடன் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிள் ஒன்றில் பின்தொடர்ந்து வந்த இருவர் அவரை வீதியில் வழிமறித்து அவரை தாக்கி விட்டு பணம் , கடவுச்சீட்டு , இலட்ச ரூபாய் பெறுமதியான கையடக்க தொலைபேசி என்பவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
பணத்தினை பறிக்கொடுத்தவர், மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
அதன் அடிப்படையில், சந்தேகநபர்கள் ஊரெழு பகுதியில் மறைந்திருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இருவரை 
கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம் , கையடக்க தொலைபேசி உள்ளிட்டவற்றையும் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் இருவரையும் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - யாழில் புலம்பெயர் தமிழரிடம் ஒரு கோடி ரூபாவை கொள்ளையிட்ட இருவர் கைது

யாழ் சங்கானையில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட தம்பதியினர் கைது

வெள்ளி, 20 செப்டம்பர், 2024

யாழ்ப்பாணத்தில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். சங்கானை வைத்தியசாலை 
வீதியில், துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த பெண்ணொருவரின் சங்கிலியை, மோட்டார் சைக்கிளில் வந்த தம்பதியினர் அறுத்துக்கொண்டு தப்பி ஓட முயன்ற வேளை ஊரவர்கள் மடக்கி பிடித்து மானிப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
பொலிஸார் அவர்களை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த வேளை கணவன் - மனைவி இருவரும் சுன்னாகம் பகுதியிலும் கடந்த வாரம் நபர் ஒருவருடைய சங்கிலியை அறுத்ததாகவும், அதனை யாழ். நகர் பகுதியில் உள்ள நகைக்கடை ஒன்றில் அடகு வைத்துள்ளதாகவும்
 தெரிவித்துள்னர்.
விசாரணைகளின் பின்னர் இருவரையும் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




READ MORE - யாழ் சங்கானையில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட தம்பதியினர் கைது

மூன்று தினங்கள் இடம்பெறவுள்ளன.யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழா

புதன், 7 ஆகஸ்ட், 2024

'யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழா - 2024' யாழ்ப்பாணத்தில் மூன்று தினங்கள் இடம்பெறவுள்ளன.
யாழ்ப்பாண வர்த்தக தொழில்த்துறை மன்றத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண கலாச்சார மண்டபத்தில் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
குறித்த கண்காட்சி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை வரையில் மூன்று நாட்கள் தொடர்ந்து நடைபெறவுள்ளது.
இலங்கையிலிருந்து மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளில் இருந்தும் பல்வேறுபட்ட புத்தக விற்பனை நிறுவனங்கள் மற்றும் வெளியீட்டகங்களின் புத்தகங்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை 
செய்யப்படவுள்ளது.
யாழ்ப்பாணத்தில், உள்ளூர் மற்றும் சர்வதேச எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் யாழ்ப்பாண வர்த்தகத் தொழிற்துறை மன்றமானது இந்த புத்தக கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது.
புத்தக திருவிழா இடம்பெறும் தினங்களில் புத்தக வெளியீடுகள், அறிமுக நிகழ்வுகள் மற்றும் கலை கலாசார நிகழ்வுகள் என்பவற்றுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இக் கண்காட்சி முற்றிலும் இலவசமாக பார்வையிட முடியும். 40 காட்சி கூடங்கள் அமைக்கப்படும். அவற்றில் உள்ளூர் வெளியூர் எழுத்தாளர்களின் புத்தகங்களை காட்சிப்படுத்தவுள்ளோம் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்னர்.
என்பது  குறிப்பிடத்தக்கதாகும்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


READ MORE - மூன்று தினங்கள் இடம்பெறவுள்ளன.யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழா

நெடுந்தீவு பகுதியை சேர்ந்த பெண்ணொருவருக்கு நடுக் கடலில் பிறந்த குழந்தை

வெள்ளி, 19 ஜூலை, 2024

யாழ்- நெடுந்தீவு பகுதியை சேர்ந்த பெண்ணொருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் இருந்து, அம்பியூலன்ஸ் படகு மூலம் யாழ்ப்பாணம் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. 
 படகில் மருத்துவ அதிகாரி, மருத்துவமாது உள்ளிட்டவர்களின் உதவியுடன் அப்பெண்ணை குறிக்கட்டுவான் இறங்குதுறை நோக்கி அழைத்து வந்துள்ளனர். இதன்போது அப்பெண் படகினுள் குழந்தையை 
பிரசவித்துள்ளார்.
 தொடர்ந்து தாயையும் சிசுவையும் குறிக்கட்டுவான் அழைத்து வந்து , அங்கு தயார் நிலையில் இருந்த அம்பியூலன்ஸ் வண்டியில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அழைத்து சென்று 
அனுமதித்துள்ளனர்
. தற்போது தாயும் சேயும் நலமுடன் இருப்பதாக வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நெடுந்தீவு பகுதியை சேர்ந்த பெண்ணொருவருக்கு நடுக் கடலில் பிறந்த குழந்தை

யாழ் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு புதிய மின்பிறப்பாக்கி வழங்கி வைக்கப்பட்டுள்ளது

புதன், 10 ஜூலை, 2024

யாழ்.சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு தற்காலிக மின்பிறப்பாக்கி ஒன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
 குறித்த மின்பிறப்பாக்கியானது, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதனின் வழிகாட்டலுக்கு அமைய வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டுள்ளது.
 இதன் படி, 150kVA வலுவுடைய இந்த மின்பிறப்பாக்கி தற்காலிக அடிப்படையில் இன்று வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
இதேவேளை, புதிதாக வழங்கப்பட்ட இந்த மின்பிறப்பாக்கியை பதில் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் கோபாலமூர்த்தி ரஜீவ் பொறுப்பெற்றுக் கொண்டுள்ளார்.
 இந்த நிலையில், நிரந்தரமாக பயன்படுத்தும் வகையில் மின்பிறப்பாக்கியொன்றை பெறுவதற்கு 
தற்போது ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிடப்படுகிறது.
அதற்கான அறையொன்றை அமைக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்படுவதாக வைத்தியர் கோபாலமூர்த்தி ரஜீவ் தெரியப்படுத்தியுள்ளார்.என்பது  குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - யாழ் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு புதிய மின்பிறப்பாக்கி வழங்கி வைக்கப்பட்டுள்ளது

யாழ் சாவகச்சேரி வைத்தியசாலையை விட்டு வெளியேறிய வைத்தியர் அர்ச்சுனா

திங்கள், 8 ஜூலை, 2024

யாழ் சாவகச்சேரி வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகரான இராமநாதன் அர்ச்சுனா தற்போது வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 கொழும்பில் விசேட பேச்சுவார்த்தைக்காக அளிக்கப்பட்டுள்ள நிலையிலும், சுகயீன விடுமுறையின் காரணமாகவும் அவர் 
வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளதாக 
தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 இதேவேளை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்தியர் வடக்கு சுகாதரத் துறைக்குள் உள்ள பல்வேறு ஊழல்களை
 வெளிக்கொணர்ந்த நிலையில் அவருக்கு மத்திய 
சுகாதார அமைச்சினால் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமைச்சின் அலுவலகத்தில் பேச்சுவார்த்தைக்காக செல்வதாக வைத்தியர் அர்ச்சுனா மக்களுக்கு தெரிவித்தார்.
 அவரை பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அழைத்துச் செல்லும்போது மக்கள் அவரை செல்ல விடாது தடுத்தனர். இருப்பினும் மக்களது எதிர்ப்பின் மத்தியிலும் அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.
என்பது  குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - யாழ் சாவகச்சேரி வைத்தியசாலையை விட்டு வெளியேறிய வைத்தியர் அர்ச்சுனா

யாழில் வெளிநாட்டுக்கு அனுப்புவதாக அம்பது இலட்சம் ரூபாய மோசடிசெய்த பெண் கைது.

திங்கள், 1 ஜூலை, 2024

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவரை வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாகக் கூறி , 50 இலட்சம் ரூபா மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாகக் கூறி இளைஞனிடம் இருந்து 50 இலட்சம் ரூபாய் பணத்தினை மானிப்பாய் பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் பெற்றுக்கொண்டுள்ளார்.
நீண்ட நாட்களாகியும் இளைஞனை வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்காத நிலையில், இளைஞன் தனது பணத்தினை திருப்பி கேட்ட வேளை, அதனை கொடுக்க மறுத்ததால், இளைஞன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு 
பதிவு செய்தார்.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பெண்ணை கைது செய்து , விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

READ MORE - யாழில் வெளிநாட்டுக்கு அனுப்புவதாக அம்பது இலட்சம் ரூபாய மோசடிசெய்த பெண் கைது.

யாழ் செல்வச்சந்நிதி ஆலய சூழலில் பல்லி பொரியலுடன் மிக்சர் விற்றவருக்கு தண்டம்

வெள்ளி, 28 ஜூன், 2024

தொண்டமானாறு செல்வச்சந்நிதி ஆலய சூழலில் மிக்ஸருக்குள் பொரித்த பல்லி ஒன்று காணப்பட்டது தொடர்பான வழக்கில் மிக்ஸரை விற்பனை செய்த நபருக்கு 15,000 ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது
.சந்நிதி ஆலயத்தில் கடந்த திங்கட்கிழமை இரவு , 
ஆனிப்பொங்கல் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. அந்நிலையில் ஆலயத்திற்கு
 வருகை தந்த ஒருவர், ஆலய சூழலில் உள்ள இனிப்பு கடை ஒன்றில் மிக்ஸரை வாங்கிய போது, அதனுள் பொரிந்த நிலையில் பல்லி ஒன்று 
காணப்பட்டுள்ளது.
அது தொடர்பில் அப்பகுதி பொது சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , பல்லியுடன் காணப்பட்ட மிக்ஸரை சான்று பொருளாக பெற்றுக்கொண்ட பொது சுகாதார பரிசோதகர் குறித்த இனிப்பு கடைக்கு எதிராக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு 
தாக்கல் செய்துள்ளார்.
குறித்த வழக்கு நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளை , மிக்ஸரை விற்பனை செய்த நபரை கடுமையாக எச்சரித்த மன்று அவருக்கு 15,000 ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டது.
 என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - யாழ் செல்வச்சந்நிதி ஆலய சூழலில் பல்லி பொரியலுடன் மிக்சர் விற்றவருக்கு தண்டம்

யாழ், ஊர்காவற்றுறையில் போலிச் சாவி மூலம் ஆலயத்தில் பவுண் நகைகள் திருட்டு

புதன், 26 ஜூன், 2024

யாழ், ஊர்காவற்றுறையில் உள்ள ஆலயமொன்றில் 64 பவுண் தங்கநகைகள் மற்றும் சுமார் 08 இலட்சம் ரூபாய் பணம் என்பன 
திருடப்பட்டுள்ளன.
ஆலயத்தினுள் பாதுகாப்பாக பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த நகைகள் மற்றும் பணமே திருட்டுப் போயுள்ளன. போலி திறப்புக்களை பயன்படுத்தி பூட்டை திறந்து பொருட்களை திருடியிருக்கலாம் என
 சந்தேகிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - யாழ், ஊர்காவற்றுறையில் போலிச் சாவி மூலம் ஆலயத்தில் பவுண் நகைகள் திருட்டு

யாழ் அச்சுவேலி பத்தமேனி பகுதியில் வீட்டை உடைத்து கொள்ளை

செவ்வாய், 25 ஜூன், 2024

யாழ்- அச்சுவேலி பத்தமேனி பகுதியில் வீட்டின் கதவினை உடைத்து உள்நுழைந்த கொள்ளையர்கள் வீட்டில் பாதுகாப்பாக
 வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். வீட்டில் இருந்தவர்கள் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீட்டார் வீடு திரும்பிய போதே, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட விடயம் தெரியவந்துள்ளது.
 அந்த கொள்ளை சம்பவம் தொடர்பில் அச்சுவேலி 
பொலிஸ் நிலையத்தில் வீட்டார் முறைப்பாடு செய்துள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - யாழ் அச்சுவேலி பத்தமேனி பகுதியில் வீட்டை உடைத்து கொள்ளை

புதிய வசதி யாழ். போதனா வைத்தியசாலையில் நோயாளிகளின் உறவினர்களுக்கான தங்குமிடம்

திங்கள், 24 ஜூன், 2024

தூர இடங்களில் இருந்து யாழ் போதனா வைத்தியசாலைக்கு நோயாளர்களுடன் வரும் உறவினர்கள் மற்றும் உதவியாளர்கள் பல சிரமங்களை எதிர்கொள்ளுகின்றார்கள். 
இவ்வாறானவர்கள் நோயாளிகளை யாழ் போதனா வைத்தியசாலை விடுதிகளில் வைத்திருக்கும் நாட்களில் ஓய்வெடுக்க, குளித்து உடை மாற்றி கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இல.76, வைத்தியசாலை வீதியில் (சத்திரச்சந்திக்கு அப்பால்) மேற்படி இல்லம்
 அமைந்துள்ளது.
 தனது வீட்டினை மேற்படி சேவைக்காக தந்துதவிய Dr. இரட்ணேஸ்வரன் UK அவர்கள் இதற்காக வருகை தந்து மேற்படி
 நிகழ்வினை சிறப்பித்தார். தொடர்புகளுக்கு: 1.வைத்திய சாலை நலன்புரிச் சங்கம் - 0761000046. சிவசி இல்ல இணைப்பாளர் - 0770054829 மேற்படி சேவைக்காக படுக்கை அறைகள், குளியலறைகள் உள்ளடங்கலாக வசதிகள் செய்யப்பட்டுள்ளதன.
இந்த இலவச சேவையை யாழ் போதனா வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. நோயாளர் நலன்புரிச் சங்க பொருளாளர் Dr. பிறேமகிருஸ்ணா இதற்கான அனைத்து ஒருங்கிணைப்பு மற்றும் தொடர்புகளை ஏற்படுத்தி ஆரம்ப நாள் நிகழ்வை தலைமையேற்று நடாத்தியிருந்தார்.
 The Saivite Tamil Foundation, USA அமைப்பு இதற்கான நிதி அனுசரணையை வழங்கி செயற்படுத்துகின்றது. நலன்புரிச் சங்க நோயாளர் பராமரிப்பு காரியாலயத்தில் விண்ணப்பப்படிவத்தை பெற்று பூர்த்தி
 செய்து நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருக்கும் விடுதிகளுக்கு பொறுப்பான தாதிய சகோதரர்களிடம் சிபார்சு படிவத்தை 
கையளிக்க வேண்டும்.
 தகுதியானவர்கள் இந்த இலவச சேவையை பெற்றுக்கொள்ளலாம். கடந்த திங்கட்கிழமை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது. ஆகவே பொதுமக்கள் இந்த சேவையை சரியான முறையில் பாவித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - புதிய வசதி யாழ். போதனா வைத்தியசாலையில் நோயாளிகளின் உறவினர்களுக்கான தங்குமிடம்

யாழ்-வாழ்வக மாணவர்கள் உயர்தரப் பரீட்சையில் சாதனை படைத்துள்ளனர்

வெள்ளி, 31 மே, 2024

நாட்டில் க.பொ.த.(உ.த.) - 2023 (2024) பரீட்சைக்குத் தோற்றிய வாழ்வக மாணவர்கள் மூவருமே சித்தி பெற்றுள்ளனர்.
செல்வி சிவசக்தி லக்சிகா தமிழ், இந்து நாகரிகம், அரசியல் விஞ்ஞானம் ஆகிய மூன்று பாடங்களிலுமே A சித்தி பெற்று மாவட்ட மட்டத்தில் 97 வது இடத்தினையும் பெற்று, சாதனை படைத்துள்ளார்.
செல்வி வெற்றிவேல் ஜனுபா கர்நாடக சங்கீதத்தில் A சித்தியும் தமிழ் C, அரசியல் விஞ்ஞானம் S பெற்றுள்ளார்.
 இப் பரீட்சைக்குத் தோற்றிய மற்றுமொரு மாணவனான செல்வன் நவனீதன் கௌதமன் இந்து நாகரிகம், தமிழ் ஆகிய பாடங்களில் C சித்தியும் அரசியல் விஞ்ஞான பாடத்தில் S சித்தியும் பெற்றுள்ளார்.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - யாழ்-வாழ்வக மாணவர்கள் உயர்தரப் பரீட்சையில் சாதனை படைத்துள்ளனர்

நாட்டில் யாழ் போதனா வைத்தியசாலை தேசிய வைத்தியசாலையாக மாறவுள்ள்ளது

வெள்ளி, 24 மே, 2024

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை விரைவில் தேசிய வைத்தியசாலையாக தரம் உயர்த்தப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இதன் மூலம் வடக்கில் சிறந்த சுகாதார கட்டமைப்பை உறுதிப்படுத்த முடியும் எனவும் ஜனாதிபதி கூறினார்.
யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்கான மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக் கட்டடத்தை.24-05-2024. இன்று திறந்துவைத்ததை தொடர்ந்து உரையாற்றியபோதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.
என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் யாழ் போதனா வைத்தியசாலை தேசிய வைத்தியசாலையாக மாறவுள்ள்ளது

குழந்தை பிரசவித்த சிறுமி யாழில் குழந்தையை கைவிட்டு தப்பியோட்டம்

சனி, 11 மே, 2024

 

யாழ் போதனா வைத்தியசாலையில் குழந்தையை பிரசவித்த சிறுமி ஒருவர் குழந்தையை வைத்தியசாலையிலேயே விட்டுவிட்டு
 தப்பிச் சென்றுள்ளார்.
வடமராட்சி- துன்னாலைப் பகுதியைச் சேர்ந்த 15 வயது
 சிறுமியொருவர் கர்ப்பம் தரித்த
 நிலையில் தனது
 தாயுடன் குழந்தை பிரசவத்துக்காக  10-05-2024.அன்று  மாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குழந்தை நேற்று இரவு பிரசவித்த நிலையில், 
குழந்தையை அநாதரவாக விட்டுவிட்டு.11-05-2024. இன்று காலை முதல் தாயும், சிறுமியும் தலைமறைவாகியுள்ளனர் என
 தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக வைத்தியசாலை நிர்வாகத்தால் யாழ்ப்பாணம் காவல் 
நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.
.என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - குழந்தை பிரசவித்த சிறுமி யாழில் குழந்தையை கைவிட்டு தப்பியோட்டம்

யாழ் பத்தமேனி பகுதியில் வீட்டுக்குள் நுழைந்து தாக்குதல் இருவர் கைது

ஞாயிறு, 28 ஏப்ரல், 2024

யாழ்ப்பாணம் - அச்சுவேலி பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டனர். இதன்போது வீட்டின் கண்ணாடிகள் மற்றும் வேனும் சேதமாக்கப்பட்டுள்ளதாக 
தெரிவிக்கப்படுகிறது
அச்சுவேலி -பத்தமேனி பகுதியில் உள்ள வீட்டிலேயே குறித்த 
சம்பவம்  27-04-2024.அன்று  இரவு இடம்பெற்றுள்ளது. வன்முறையில் காயமடைந்த 70 வயதான முதியவர் சிகிச்சைக்காக 
அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் 
சேர்க்கப்பட்டுள்ளார்.
தொழில் போட்டியே வன்முறைக்கு காரணம் என சந்தேகிக்கும் அச்சுவேலி பொலிஸார்,சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.என்பது குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - யாழ் பத்தமேனி பகுதியில் வீட்டுக்குள் நுழைந்து தாக்குதல் இருவர் கைது

யாழ் அரியாலைதனியார் காணியில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகளை அகற்ற நடவடிக்கை

வியாழன், 18 ஏப்ரல், 2024

வடக்கில் தனியார் காணியொன்றில் வைத்தியசாலை கழிவுகளை குவித்து சுற்றுச்சூழலுக்கும் பொது சுகாதாரத்திற்கும் ஆபத்தை ஏற்படுத்துவதற்கு எதிராக பிரதேசவாசிகள் போராடியதை அடுத்து குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.  
யாழ்ப்பாணம், அரியாலைப் பிரதேசத்தில் நீண்டகால குத்தகை அடிப்படையில், கண் வைத்தியசாலை ஒன்றை அமைப்பதற்கென, யாழ். போதனா வைத்தியசாலைக்கு, சுமார் பத்து 
வருடங்களுக்கு 
முன்னர் வழங்கப்பட்ட தனியார் காணியில் வைத்தியசாலை கழிவுகள் கொட்டப்படுவதால் பிரதேசவாசிகள் சுகாதார சீர்கேடுகளை எதிர்நோக்கியுள்ளதாக சுட்டிக்காட்டி, கடந்த ஏப்ரல் 11ஆம் திகதி  மக்கள் குழுவொன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.  
இந்த நிலையில், குறித்த பகுதியில் பெருமளவான
 குப்பைகள் தற்போது அகற்றப்பட்டுள்ளதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.  
எவ்வாறாயினும், நிலத்தடி நீர் உள்ளிட்ட சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களுக்கு தீர்வு காண வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அரியாலைப் பிரதேசத்தில், யாழ்ப்பாணம்-கண்டி பிரதான வீதியை மறித்து, சுமார் மூன்று மணித்தியாலங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிரதேச மக்கள், கழிவுகளை உடனடியாக அகற்றி, மக்கள் வாழ்வதற்கு ஆரோக்கியமான பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துமாறு
 கோரிக்கை விடுத்தனர்.  
எந்தவொரு வைத்தியசாலையும் நிர்மாணிக்கப்படவில்லை எனினும் மிகவும் ஆபத்தான வைத்தியசாலைக் கழிவுகள் காணியில் கொட்டப்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவர் வலியுறுத்தினார்.  
குறித்த இந்த காணி 10 வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கண் வைத்தியசாலை அமைப்பதற்கு நீண்ட கால குத்தகையின் அடிப்படையில் வழங்கப்பட்டது. நீண்டகாலமாக இங்கு எவ்வித பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. 
எனினும் இந்த காணியில் இருந்து துர்நாற்றம் வீச ஆரம்பித்தது. கழிவு பொருட்கள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
 இந்த நிலையில் துர்நாற்றத்தை தாங்கிக்கொள்ள 
முடியாமல் அருகில் இருப்பவர்கள் சென்று பார்த்தபோது, மிகவும் ஆபத்தான
 வைத்திய கழிவுகள், இரத்தத் துணி துண்டுகள், ஊசி ஏற்றும் சிரஞ்சுகள், குளுகோஸ் ஏற்றும் குழாய்கள் என அனைத்தும் இங்கு இருக்கின்றன. இது மிகவும் ஆபத்தான வைத்திய கழிவுகள்.
இப்பகுதியில் எவ்வளவு காலமாக வைத்தியசாலை கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றது என்பது பிரதேசவாசிகளுக்கு தெரியவில்லை எனவும், அண்மைக்காலமாக துர்நாற்றம் வீச ஆரம்பித்ததோடு, அங்கு எரிக்கப்பட்டமைக்கான காரணம் குறித்து பொது மக்கள் 
ஆராய்ந்தபோதே இந்த விடயம் அம்பலமானதாகவும் பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். 
இந்நிலையில், பிரதேச மக்கள் கேட்கும் மூன்று கேள்விகளுக்கு அதிகாரிகள் பதிலளிக்க வேண்டும் என போராட்டக்காரர் ஒருவர் ஊடகவியலாளர்களிடம் கூறினார்.  
“என்ன அடிப்படையில் மக்கள் குடியிருப்பு பகுதியில் இந்த வைத்திய கழிவை போட்டீர்கள்? இதனை எப்போது பாதுகாப்பாக அகற்றித் தருவீர்கள்? இவற்றை அகற்றிய பின்னர் நிலத்தடி நீரிலும், சுற்றுச்சூழலிலும் பாதிப்பு ஏற்படாமல் எப்படித் தடுப்பீர்கள்?” 
போராட்டத்தை தடுத்து நிறுத்த பொலிஸாரின் முயற்சி தோல்வியடைந்ததாக தெரிவிக்கும் பிரதேச ஊடகவியலாளர்கள், வைத்தியசாலை அதிகாரிகள் வந்து தீர்வு வழங்கும் வரை போராட்டத்தை நிறுத்துவதற்கு பிரதேச வாசிகள் இணங்கவில்லை என சுட்டிக்காட்டுகின்றனர்.  
பின்னர் யாழ். வைத்தியசாலை பணிப்பாளர் ரி. சத்தியமூர்த்தி சம்பவ இடத்திற்கு வந்து வைத்தியசாலை கழிவுகளை ஏழு நாட்களுக்குள் (ஏப்ரல் 18ற்குள்) அகற்றுவதாக உறுதியளித்ததையடுத்து, அரியாலை பிரதேச மக்கள் போராட்டத்தை கைவிட்டதாக பிரதேச ஊடகவியலாளர்கள் மேலும் தெரிவித்தனர்.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - யாழ் அரியாலைதனியார் காணியில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகளை அகற்ற நடவடிக்கை

முதன் முதலாக யாழில் கண்டுபிடிக்கப்பட்ட இடைக்கால தமிழ் கல்வெட்டு

வியாழன், 4 ஏப்ரல், 2024

நாட்டில் வன்னியில் தொல்லியற் திணைக்கள ஆய்வின் போது பெரியபுளியங்குளம் என்ற இடத்தில் கி.பி 12-13 ஆம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்த தமிழ்க் கல்வெட்டொன்றை அடையாளம் 
காணப்பட்டுள்ளது.
இந்த கல்வெட்டியில் வன்னியில் பேராசிரியர் ப. புஷ்பரட்ணம் தலமையில் தொல்லியல் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் 
தொல்லியற் திணைக்கள ஆய்வு உத்தியோகத்தர்கள் திரு. கபிலன், திரு. மணிமாறன் ஆகியோர் இணைந்து மேற்கொண்டு 
வரும் தொல்லியல் ஆய்வின் போது வன்னியில் மரையடித்த குளத்திற்கு அருகே பெரியபுளியங்குளம் என்ற இடத்தில் கி.பி 12-13 ஆம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்த தமிழ்க் கல்வெட்டொன்றை அடையாளம் காணப்பட்டுள்ளது.
இக்கல்வெட்டு அப்பிரதேச மக்களால் அங்குள்ள வயல்வெளியில் இருந்து எடுத்து வரப்பட்டு அங்குள்ள வைரவர் ஆலயத்தில் தெய்வச்சிலைகளை வைப்பதற்கான பீடமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஆனால் அ  க்கல்லில் உள்ள எழுத்துக்களின் முக்கியத்துவத்தை உணர்ந்த வவுனியா பிரதேசசபை ஆய்வு உத்தியோகத்தர் திரு. ஜெயதீபன் இது பற்றிய செய்தியை திரு. மணிமாறனுக்கு தெரியப்படுத்தியதன் பேரில் இக்கல்வெட்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொல்லியல் பிரிவினரின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
பல வரிகளில் எழுதப்பட்டிருந்த இக்கல்வெட்டின் உடைந்த கீழ்ப்பாகமே தற்போது கிடைத்துள்ளது. அதில் ஐந்து வரிகள் காணப்படுகின்றன. அதன் முதலாவது வரியில் உள்ள எழுத்துக்கள் பல பெருமளவு 
சிதைவடைந்த நிலையில் காணப்படுகிறது.
 அதனால் அவ்வரியில் சொல்லப்பட்ட பெயர்களை அல்லது செய்திகளை அறியமுடியவில்லை. ஏனைய நான்கு வரிகளையும்
 தெளிவாக வாசிக்க முடிகிறது. 
என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - முதன் முதலாக யாழில் கண்டுபிடிக்கப்பட்ட இடைக்கால தமிழ் கல்வெட்டு