இலங்கையில் இனி குறிப்பிட்ட காலங்களுக்கு மின்வெட்டு இல்லை

சனி, 14 ஜனவரி, 2023

நாட்டில்  இந்த ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் போது தினசரி ஒரு மாதகாலத்திற்கு மின்வெட்டு இருக்காது என அதிகாரிகள் அறிவித்துள்ளதாக பரீட்சை திணைக்களம் 
தெரிவித்துள்ளது.தமது
திணைக்களத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, மின்சார சபை உள்ளிட்ட அதிகாரிகள் இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை இம்மாதம் 23ஆம் திகதி ஆரம்பித்து பெப்ரவரி 17ஆம்
திகதி வரை நடைபெற உள்ளது.அதற்காக 331,709 பாடசாலை மற்றும் தனியார் விண்ணப்பதாரர்கள் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.நாடளாவிய ரீதியில் 2,200 நிலையங்களில் பரீட்சையை நடாத்துவதற்கு தேவையான
அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளின் போது உயர்தரப் பரீட்சையை சுமூகமாக நடத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடவுள்ளதாக அவர் மேலும் 
குறிப்பிட்டுள்ளார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>0 கருத்துகள்:

கருத்துரையிடுக