நாட்டில் இன்று முதல் அமுலாகும் லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலையும் குறைகிறது

வெள்ளி, 6 ஜனவரி, 2023

நாட்டில் 06-01-2023.இன்று முதல் அமுலாகும் வகையில் லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலையை குறைக்க லாஃப்ஸ் நிறுவனம் நடவடிக்கை
 எடுத்துள்ளது.
இதற்கமைய, 12.5 கிலோகிராம் நிறைகொண்ட சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 220 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 12.5 கிலோகிராம் நிறைகொண்ட சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்றின் புதிய விற்பனை விலை 5,080 ரூபாவாகும்.
அதேபோல், 5 கிலோகிராம் நிறைகொண்ட சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 88 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 5 கிலோகிராம் நிறைகொண்ட சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்றின் புதிய விற்பனை விலை 2,032 
ரூபாவாகும்.
இதேவேளை, லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலை நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில்
 குறைக்கப்பட்டுள்ளது.
12.5 கிலோகிராம் நிறைகொண்ட சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 201 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதன்படி 12.5 கிலோகிராம் நிறைகொண்ட சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்றின் புதிய விலை 4 ஆயிரத்து 409 ரூபாவாகும்.
5 கிலோகிராம் நிறைகொண்ட சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 80 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய 5 கிலோகிராம் நிறைகொண்ட சமையல் எரிவாயு கொள்கலன் ஆயிரத்து 770 ரூபாவுக்கு விற்பனை 
செய்யப்படுகிறது.
அதேநேரம் 2.5 கிலோகிராம் நிறைகொண்ட சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 38 ரூபாவினால் குறைக்கப்பட்டு 822 ரூபா என்ற புதிய விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக லிட்ரோ நிறுவனத் தலைவர் 
குறிப்பிட்டுள்ளார்.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக