நாட்டில் மீண்டும் திடீரென அதிகரிக்கபடவுள்ள எரிவாயுவின் விலை

திங்கள், 23 ஜனவரி, 2023

எரிவாயு சர்வதேச சந்தையின் தற்போதைய விலையுடன் ஒப்பிடும் போது 12.5 கிலோ கிராம் நிறைக்கொண்ட சமையல் எரிவாயுவின் விலையை பெப்ரவரி மாதத்திற்குள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக உள்ளக தகவல்கள் 
தெரிவிக்கின்றன
இதன்படி 12.5 கிலோகிராம் நிறைக்கொண்ட சமையல் எரிவாயுவின் விலை 500 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இறுதியாக, கடந்த ஜனவரி 4ஆம் திகதி சமையல் எரிவாயு விலை 
குறைக்கப்பட்டது
தற்போது சந்தையில் 12.5 கிலோ கிராம் நிறைக்கொண்ட லிட்ரோ சமையல் எரிவாயு 4,409 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.அத்துடன், 12.5 கிலோ கிராம் நிறைக்கொண்ட லாஃப்ஸ் சமையல் எரிவாயு 5,300 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>0 கருத்துகள்:

கருத்துரையிடுக