இலங்கையில் எரிபொருட்களின் விலை அதிரடியாக குறைப்பு

செவ்வாய், 30 ஏப்ரல், 2024

இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது.
அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 3 ரூபாவால் குறைக்கப்படவுள்ள நிலையில் அதன் புதிய விலை 368 ரூபாவாகும்.
ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் 
விலை 20 ரூபாவால் குறைக்கப்படவுள்ள நிலையில் அதன் புதிய விலை 420 ரூபாவாகும்.
அதேபோல், ஒரு லீற்றர் லங்கா டீசலின் விலை 30 ரூபாவால் குறைக்கப்பட்டவுள்ள நிலையில் அதன் புதிய விலை 333 ரூபாவாக குறைவடையவுள்ளது.
சூப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை 9 ரூபாவால் குறைக்கப்படவுள்ள நிலையில் அதன் புதிய விலை 377 ரூபாவாகும்.
மேலும், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 20 ரூபாவால் குறைக்கப்படவுள்ள நிலையில் அதன் புதிய விலை 215 ரூபாய் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
என்பதும் குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





READ MORE - இலங்கையில் எரிபொருட்களின் விலை அதிரடியாக குறைப்பு

நாட்டில் மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்கள எச்சரிக்கை

திங்கள், 29 ஏப்ரல், 2024

இலங்கையில் பல பகுதிகளில்.29-04-2024. இன்று  பலத்த மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை 
விடுத்துள்ளது.  
மேல், மத்திய, தென், சப்ரகமுவ, ஊவா, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் மாலை வேளையில் தனிமைப்படுத்தப்பட்ட இடியுடன் கூடிய மழையுடன்   பலத்த மின்னலுக்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.  
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்த பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
 மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.என்பது குறிப்பிடத்தக்கது   

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


READ MORE - நாட்டில் மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்கள எச்சரிக்கை

யாழ் பத்தமேனி பகுதியில் வீட்டுக்குள் நுழைந்து தாக்குதல் இருவர் கைது

ஞாயிறு, 28 ஏப்ரல், 2024

யாழ்ப்பாணம் - அச்சுவேலி பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டனர். இதன்போது வீட்டின் கண்ணாடிகள் மற்றும் வேனும் சேதமாக்கப்பட்டுள்ளதாக 
தெரிவிக்கப்படுகிறது
அச்சுவேலி -பத்தமேனி பகுதியில் உள்ள வீட்டிலேயே குறித்த 
சம்பவம்  27-04-2024.அன்று  இரவு இடம்பெற்றுள்ளது. வன்முறையில் காயமடைந்த 70 வயதான முதியவர் சிகிச்சைக்காக 
அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் 
சேர்க்கப்பட்டுள்ளார்.
தொழில் போட்டியே வன்முறைக்கு காரணம் என சந்தேகிக்கும் அச்சுவேலி பொலிஸார்,சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.என்பது குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - யாழ் பத்தமேனி பகுதியில் வீட்டுக்குள் நுழைந்து தாக்குதல் இருவர் கைது

அர்ஜென்டினா அழகி அறுவது வயதில் சாதனை படைத்துள்ளார்

சனி, 27 ஏப்ரல், 2024

அர்ஜெண்டினா தலைநகர் பியூனஸ் அயர்ஸில் நடந்த உலக அழகி போட்டியில் 60 வயதான அலெஜாண்ட்ரா மரிச ரோட்ரிகுயஸ் வென்றவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதன்மூலம் அதிக வயதில் அழகிப்போட்டியில் பட்டம் வென்ற பெண் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். உலக அழகிப்போட்டியில் இதற்கு முன்பு வரை 18-28 வயதுடைய பெண்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும் என்ற விதிமுறை இருந்தது. 
ஆனால், அந்த வயது வரம்பைக் கடந்தாண்டு தான் மிஸ் யுனிவர்ஸ் அமைப்பு நீக்கியது. இதன் மூலம் 18 வயதுக்கு மேற்பட்ட எந்த பெண்ணும் இந்த போட்டியில் கலந்து கொள்ள முடியும் என்ற
 நிலை உருவானது.
அதன்பின் டொமினிகன் குடியரசில் நடந்த மிஸ் யுனிவர்ஸ் 2024இல் 47 வயதான ஹெய்டி குரூஸ் என்பவர் வெற்றி பெற்றிருந்தார். 
அதன் பிறகு 60 வயதில் அலெஜாண்ட்ரா மரிச ரோட்ரிகுயஸ் வெற்றி பெற்று 
அதிக வயதில் உலக அழகி பட்டம் பெற்றவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அலெஜாண்ட்ரா மரிச ரோட்ரிகுயஸ், "உலக அழகிப்போட்டியில் 18 முதல் 28 வயதுடையவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும் என்ற விதி தளர்த்தப்பட்ட நிலையில் இது 
சாத்தியமாகியுள்ளது. 
அழகுக்கு வயது வரம்பு இல்லை. அடுத்த மாதம் அங்கு நடக்கும் மிஸ் யுனிவர்ஸ் அர்ஜெண்டினா போட்டியில் எப்படியாவது 
வெல்ல வேண்டும் என்பதே தனது இலக்கு என்று 
அவர் தெரிவித்தார்.
அவரது நேர்த்தியும், நளினமும், புன்னகையும் தான் அவர் வெல்லக் காரணம் என்று போட்டியின் நடுவர்கள் கூறியுள்ளனர்.
 அர்ஜெண்டினாவின் பியூனஸ் அயர்ஸ் பகுதியை சேர்ந்தவர் இந்த இவர் பல ஆண்டுகளாக வழக்கறிஞராக வேலை செய்துவருகிறார். அவர் அங்கு சில காலம் பத்திரிகையாளராகவும் இருந்துள்ளார் என்பதாகும் 




READ MORE - அர்ஜென்டினா அழகி அறுவது வயதில் சாதனை படைத்துள்ளார்

நாட்டில் முல்லைத்தீவில் தரமற்ற அரிசி விநியோகம் விநியோகஸ்தர் மீது சட்ட நடவடிக்கை

வெள்ளி, 26 ஏப்ரல், 2024

நாட்டில் அரிசி விநியோகம் இடம்பெறுவதாக குற்றச்சாட்டு கிடைக்கப்பெற்றுள்ளது. அவ்வாறு இடம்பெற்றிருப்பின் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கான 
அரிசி விநியோகம் இடம்பெற்றுவரும் நிலையில் சில இடங்களில் காலாவதியான பாவனைக்குதவாத அரிசி வழங்கப்படுவதாக குற்றசாட்டு கிடைக்கபெற்றுள்ளது.
அவ்வாறு வழங்கப்பட்ட விநியோகம் தொடர்பாகவும் அதனை விநியோகித்த விநியோகத்தர் தொடர்பாகவும் முழுமையான தகவல்களை வழங்குமாறும் தரமற்ற அரிசி வழங்கப்பட்டிருப்பின் விநியோகத்தர்
 மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக 
பொதுமக்கள் தங்களது முறைப்பாடுகளை கிராம சேவகர் ஊடாக, பிரதேச செயலாளர் மற்றும் மாவட்ட செயலாளரை தொடர்பு 
கொண்டு தெரிவிக்க அறிவுறுத்தல் வழங்குமாறும் கேட்டுக்
 கொள்கின்றேன்.
இது தொடர்பாக தங்களது பூரண அவதானத்தை செலுத்தி திட்டத்தை வெற்றியடைய செய்யுமாறும் கேட்டுக் கொள்கின்றேன் என மேலும் குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் முல்லைத்தீவில் தரமற்ற அரிசி விநியோகம் விநியோகஸ்தர் மீது சட்ட நடவடிக்கை

கனடாவில் ஐம்பைத்தைந்து ஆண்டுகளாக குளிர்சாதனப் பெட்டியில் பேணிப் பாதுகாத்துள்ளா கேக்

வியாழன், 25 ஏப்ரல், 2024

கனடாவில் பிரிட்டிஸ் கொலம்பிய மாகாணத்தில்  55 ஆண்டுகள் பழமையான கேக் ஒன்று தொடர்பான செய்தி வெளியாகியுள்ளது.
ரொச்செல் மார் (Rochelle Marr) என்பவர், தனது திருமண 
கேக்கை குளிர்சாதனப் பெட்டியில் கடந்த 55 ஆண்டுகளாக பேணிப் பாதுகாத்துள்ளார்.
50ம் திருமண ஆண்டு நிறைவில் இந்த கேக்கை எடுத்து பகிர வேண்டுமென
எனினும், 50ம் ஆண்டில் கேக் விடயத்தை ரொச்சல் மார் மறந்து விட்டார்.
கடந்த ஜனவரி மாதம் குளிர்சாதனப் பெட்டியை ரொச்சலும் அவரது மகனும் சுத்தம் செய்துள்ளனர்.
இதன் போது குறித்த குளிர்சாதனப் பெட்டியில் 2018ம் வரையில் திறக்க வேண்டாம் என ஓர் பெட்டியில் குறிப்பிடப்பட்டிருந்தாக 
தெரிவித்துள்ளார்.
அதனை திறந்து பார்த்த போது தனது திருமண கேக்கே இவ்வாறு பேணப்பட்டிருந்தமை தெரியந்ததாக ரொச்செல் தெரிவிக்கின்றார்.
ரொச்செலின் கணவர் பிரயன் மார் கடந்த 2023ம் ஆண்டு காலமானார் 
இந்த திருமண கேக் பல்வேறு குளிர்சாதனப் பெட்டிகளில் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது ஓர் புருட்கேக் எனவும் அது பழுதடையாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த திருமண கேக் 1968ம் ஆண்டில் இந்தக் கேக் 
தயாரிக்கப்பட்டுள்ளது.
திருமணத்தின் போது சுவைத்த அதே சுவை இன்னமும் உண்டு என ரொச்சலின் சகோதரர் தெரிவித்துள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - கனடாவில் ஐம்பைத்தைந்து ஆண்டுகளாக குளிர்சாதனப் பெட்டியில் பேணிப் பாதுகாத்துள்ளா கேக்

நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை குறைப்பு

புதன், 24 ஏப்ரல், 2024

இலங்கையில் .25-04-2024.நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை குறைக்கப்படும் 
என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம்
 தெரிவித்துள்ளது.  
இதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பால் மாவின் விலை 250 முதல் 300 ரூபா வரை குறைக்கப்படும் என தொழிற்சங்கம் 
தெரிவித்துள்ளது. 
மேலும், இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மாவின் விலை 100 முதல் 130 ரூபாவினால் குறைக்கப்படும் என சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை குறைப்பு

நாட்டில் வவுனியாவில் இளங்கோ அடிகளின் நினைவு தினம் அனுஷ்டிப்பு

செவ்வாய், 23 ஏப்ரல், 2024

தமிழ் மொழியில் தோன்றிய முதற் காப்பியமான சிலப்பதிகாரத்தினை இயற்றிய இளங்கோ அடிகளின் நினைவுநாள் வவுனியாவில்.23-04-2024. இன்று  அனுஷ்டிக்கப்பட்டது.  
வவுனியா சின்னப்புதுக்குளம் சிவன் கோவிலுக்குகருகில் அமைந்துள்ள அடிகளாரின் திருவுருவச்சிலைக்கருகில் குறித்த நிகழ்வானது இடம்பெற்றிருந்தது. 
இதன் போது இளங்கோவாடிகளாரின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலியும் செலுத்தப்பட்டதுடன் சிறப்புரைகளும் இடம் பெற்றிருந்தது.  
வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன், நகரசபை 
செயலாளர் பாலகிருபன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணன், முன்னாள் நகரசபை உறுப்பினர்கள், 
அகிலாண்டேஸ்வரி சிறுவர் இல்ல மாணவர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் வவுனியாவில் இளங்கோ அடிகளின் நினைவு தினம் அனுஷ்டிப்பு

வடக்கு வானில் நள்ளிரவில் ஏற்படும் மாற்றம் விண்கல் மழை பொழிவை கண்ணால் பார்க்க முடியும்

திங்கள், 22 ஏப்ரல், 2024

வருடாந்தம் தோன்றும் முக்கிய விண்கல் மழைகளில் ஒன்றான லிரிட்ஸ் விண்கல் மழை.22-04-2024. இன்று  நள்ளிரவு வடக்கு
 வானில் தோன்றும் என விண்வெளி விஞ்ஞானிகள்
 தெரிவித்துள்ளனர்.
 இந்த விண்கல் மழை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 முதல் ஏப்ரல் 29 வரை செயலில் இருக்கும். 
இந்த விண்கல் மழை வீணை விண்மீன் தொகுப்பில் காணப்படுவதால் லிரிட்ஸ் என அழைக்கப்படுவதாக விண்வெளி விஞ்ஞானி பொறியியலாளர் கிஹான் வீரசேகர தெரிவித்துள்ளார்.  
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், "இந்த விண்கல் மழையில் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 20 விண்கற்கள் 
விழும். இது. இன்று இரவு அல்லது நாளை காலை
 உச்சத்தில் இருக்கும். 
இன்று நள்ளிரவுக்குப் பிறகு பார்க்கலாம். இன்று முழு நிலவை பார்ப்பதால் ஒரு பிரச்சனை. அதனால், இது இந்த விண்கல் மழையை காலை 4-5 மணிக்குள் வடக்கு திசையில் வெறும் கண்ணால் பார்க்க முடியும்” எனத் தெரிவித்துள்ளார். 
என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




READ MORE - வடக்கு வானில் நள்ளிரவில் ஏற்படும் மாற்றம் விண்கல் மழை பொழிவை கண்ணால் பார்க்க முடியும்

நாட்டில் கிளிநொச்சியில் இலவச அரிசி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

ஞாயிறு, 21 ஏப்ரல், 2024

நாட்டில் அரசாங்கத்தினால் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்கும் செயற்றிட்டத்தின் தேசிய நிகழ்வு.21-04-2024. இன்று நாடுபூராகவும் நடைபெறுகின்றது.  
இந்த நிலையில் கிளிநொச்சி மாவட்டத்திற்கான நிகழ்வு பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திலும் குறித்த நிகழ்வு 
இடம்பெற்றது.  
மாவட்ட பதில் அரசாங்கதிபர் எஸ்.முரளீதரன் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டு இலவச அரிசியை மக்களுக்கு 
வழங்கி வைத்தார்.  
குறித்த நிகழ்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் த.ஜெயசீலன், உதவிப்பிரதேச செயலாளர், மக்கள் என பலர் கலந்து
 கொண்டனர். கிளிநொச்சி மாவட்டத்தில் 30897குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளது  என்பது குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் கிளிநொச்சியில் இலவச அரிசி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

நாட்டில் சதொச ஊடாக இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் விற்பனை

சனி, 20 ஏப்ரல், 2024

நாட்டில் லங்கா சதொச ஊடாக இந்தியாவில் இருந்து பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
இலங்கைக்கான பெரிய வெங்காயம் ஏற்றுமதிக்கான தடையை நீக்குவதற்கு தீர்மானித்த இந்திய அரசாங்கம், பத்தாயிரம் மெற்றிக் தொன் பெரிய வெங்காயத்தை இலங்கைக்கு ஏற்றுமதி செய்ய அண்மையில் தீர்மானித்துள்ளது. 
வெங்காயத்தின் இருப்பு தனியார் துறையிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதா அல்லது அரச துறையிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதா என வர்த்தக மற்றும் நுகர்வோர் அலுவல்கள் அமைச்சு 
கலந்துரையாடியதுடன், இந்தியாவில் இருந்து பெரிய வெங்காயத்தை லங்கா சதொச ஊடாக இறக்குமதி செய்து விற்பனை செய்ய
 தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
இதன்படி எதிர்வரும் இரண்டு வாரங்களில் முதல் கையிருப்பாக 2000 மெற்றிக் தொன் வெங்காயம் இறக்குமதி செய்யப்படும் என சதொசவின் தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன20-04-2024. இன்று  
 தெரிவித்தார். 
 எவ்வாறாயினும், இந்த நாட்டில் மாதாந்தம் தேவைப்படுகின்ற பெரிய வெங்காயத்தின் தேவை சுமார் 20,000 மெற்றிக் தொன் என 
வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
என்பது குறிப்பிடத்தக்கது                  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் சதொச ஊடாக இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் விற்பனை

அமீரகத்தில் மீண்டும் மழை: டுபாய் தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு

வெள்ளி, 19 ஏப்ரல், 2024

அமீரகத்தில் கடந்த 16ஆம் திகதி பெய்த வரலாறு காணாத மழையால் அமீரகம் ஸ்தம்பித்தது. இதில் துபாய், சார்ஜா, அஜ்மான் உள்ளிட்ட பல இடங்களில் உள்ள தாழ்வான பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கின.
 இந்த நிலையில் சரியாக ஒரு வாரம் கழித்து நாட்டில் மீண்டும் மழை பெய்ய  கூடும் என்று தேசிய வானிலை ஆய்வு மையத்தால் கணக்கு கணிக்கப்பட்டுள்ளது.
 இது தொடர்பாக தேசிய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள முன்னறிவிப்பில் வருகின்ற ஏப்ரல்21, 22 அன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் லேசான
 மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
 அத்துடன் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மிதமான காற்று வீசும் என்றும் பின்னர் அது வடமேற்கு நோக்கி நகர்ந்து மணிக்கு 15 முதல் 25 கிலோமீட்டர் வேகத்தை எட்டும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
 பின்னர் படிப்படியாக காற்றின் வேகம் அதிகரித்து மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீச கூடும் என்றும் துபாய் தேசிய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.என்பது குறிப்பிடத்தக்கது   

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - அமீரகத்தில் மீண்டும் மழை: டுபாய் தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு

யாழ் அரியாலைதனியார் காணியில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகளை அகற்ற நடவடிக்கை

வியாழன், 18 ஏப்ரல், 2024

வடக்கில் தனியார் காணியொன்றில் வைத்தியசாலை கழிவுகளை குவித்து சுற்றுச்சூழலுக்கும் பொது சுகாதாரத்திற்கும் ஆபத்தை ஏற்படுத்துவதற்கு எதிராக பிரதேசவாசிகள் போராடியதை அடுத்து குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.  
யாழ்ப்பாணம், அரியாலைப் பிரதேசத்தில் நீண்டகால குத்தகை அடிப்படையில், கண் வைத்தியசாலை ஒன்றை அமைப்பதற்கென, யாழ். போதனா வைத்தியசாலைக்கு, சுமார் பத்து 
வருடங்களுக்கு 
முன்னர் வழங்கப்பட்ட தனியார் காணியில் வைத்தியசாலை கழிவுகள் கொட்டப்படுவதால் பிரதேசவாசிகள் சுகாதார சீர்கேடுகளை எதிர்நோக்கியுள்ளதாக சுட்டிக்காட்டி, கடந்த ஏப்ரல் 11ஆம் திகதி  மக்கள் குழுவொன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.  
இந்த நிலையில், குறித்த பகுதியில் பெருமளவான
 குப்பைகள் தற்போது அகற்றப்பட்டுள்ளதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.  
எவ்வாறாயினும், நிலத்தடி நீர் உள்ளிட்ட சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களுக்கு தீர்வு காண வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அரியாலைப் பிரதேசத்தில், யாழ்ப்பாணம்-கண்டி பிரதான வீதியை மறித்து, சுமார் மூன்று மணித்தியாலங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிரதேச மக்கள், கழிவுகளை உடனடியாக அகற்றி, மக்கள் வாழ்வதற்கு ஆரோக்கியமான பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துமாறு
 கோரிக்கை விடுத்தனர்.  
எந்தவொரு வைத்தியசாலையும் நிர்மாணிக்கப்படவில்லை எனினும் மிகவும் ஆபத்தான வைத்தியசாலைக் கழிவுகள் காணியில் கொட்டப்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவர் வலியுறுத்தினார்.  
குறித்த இந்த காணி 10 வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கண் வைத்தியசாலை அமைப்பதற்கு நீண்ட கால குத்தகையின் அடிப்படையில் வழங்கப்பட்டது. நீண்டகாலமாக இங்கு எவ்வித பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. 
எனினும் இந்த காணியில் இருந்து துர்நாற்றம் வீச ஆரம்பித்தது. கழிவு பொருட்கள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
 இந்த நிலையில் துர்நாற்றத்தை தாங்கிக்கொள்ள 
முடியாமல் அருகில் இருப்பவர்கள் சென்று பார்த்தபோது, மிகவும் ஆபத்தான
 வைத்திய கழிவுகள், இரத்தத் துணி துண்டுகள், ஊசி ஏற்றும் சிரஞ்சுகள், குளுகோஸ் ஏற்றும் குழாய்கள் என அனைத்தும் இங்கு இருக்கின்றன. இது மிகவும் ஆபத்தான வைத்திய கழிவுகள்.
இப்பகுதியில் எவ்வளவு காலமாக வைத்தியசாலை கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றது என்பது பிரதேசவாசிகளுக்கு தெரியவில்லை எனவும், அண்மைக்காலமாக துர்நாற்றம் வீச ஆரம்பித்ததோடு, அங்கு எரிக்கப்பட்டமைக்கான காரணம் குறித்து பொது மக்கள் 
ஆராய்ந்தபோதே இந்த விடயம் அம்பலமானதாகவும் பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். 
இந்நிலையில், பிரதேச மக்கள் கேட்கும் மூன்று கேள்விகளுக்கு அதிகாரிகள் பதிலளிக்க வேண்டும் என போராட்டக்காரர் ஒருவர் ஊடகவியலாளர்களிடம் கூறினார்.  
“என்ன அடிப்படையில் மக்கள் குடியிருப்பு பகுதியில் இந்த வைத்திய கழிவை போட்டீர்கள்? இதனை எப்போது பாதுகாப்பாக அகற்றித் தருவீர்கள்? இவற்றை அகற்றிய பின்னர் நிலத்தடி நீரிலும், சுற்றுச்சூழலிலும் பாதிப்பு ஏற்படாமல் எப்படித் தடுப்பீர்கள்?” 
போராட்டத்தை தடுத்து நிறுத்த பொலிஸாரின் முயற்சி தோல்வியடைந்ததாக தெரிவிக்கும் பிரதேச ஊடகவியலாளர்கள், வைத்தியசாலை அதிகாரிகள் வந்து தீர்வு வழங்கும் வரை போராட்டத்தை நிறுத்துவதற்கு பிரதேச வாசிகள் இணங்கவில்லை என சுட்டிக்காட்டுகின்றனர்.  
பின்னர் யாழ். வைத்தியசாலை பணிப்பாளர் ரி. சத்தியமூர்த்தி சம்பவ இடத்திற்கு வந்து வைத்தியசாலை கழிவுகளை ஏழு நாட்களுக்குள் (ஏப்ரல் 18ற்குள்) அகற்றுவதாக உறுதியளித்ததையடுத்து, அரியாலை பிரதேச மக்கள் போராட்டத்தை கைவிட்டதாக பிரதேச ஊடகவியலாளர்கள் மேலும் தெரிவித்தனர்.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - யாழ் அரியாலைதனியார் காணியில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகளை அகற்ற நடவடிக்கை

நாட்டில் சாய்ந்தமருதில் புற்றுநோயை உண்டாக்கும் சுவையூட்டிகள் கண்டுப்பிடிப்பு

புதன், 17 ஏப்ரல், 2024

நாட்டில் கடந்த சில தினங்களாக திடீர் சோதனை நடவடிக்கையை சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஜே.கே.எம். அர்ஷத் காரியப்பரின் தலைமையிலான சுகாதார குழுவினர் முன்னெடுத்து 
வருகின்றனர்.  
சாய்ந்தமருது பிரதேச உணவகங்கள் சுகாதாரமற்ற உணவுகள் பொதுமக்களுக்கு விற்கப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவல்களை அடுத்து
 உணவுப் பாதுகாப்பு மற்றும் சுத்தமான உணவை
 பொதுமக்களுக்கு உறுதிப்படுத்தல் என்ற நோக்கில் 
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் 
வைத்திய கலாநிதி ஸஹீலா இஸ்ஸதீன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில்
 சாய்ந்தமருது பிரதேச இரவு நேர உணவகங்கள், டேஸ்ட் கடைகள், கோழி பதப்படுத்தி விற்கும் இடங்கள் போன்றவற்றில் திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.  
கடந்த காலங்களில் சாய்ந்தமருது பிரதேச உணவகங்கள், சந்தை, சில்லறை கடைகள், மொத்த விற்பனை நிலையங்கள், சிறிய
 சூப்பர் மார்க்கட்கள் போன்றவற்றை 
பார்வையிட்ட அவர் உரிமையாளர்களுக்கும், உணவு தயாரிப்பவர்களுக்கும் சுகாதார நடைமுறைகளை பேணி உணவுகளை தயாரிக்குமாறும் உணவங்கள் சுத்தமில்லாது இருத்தல், உணவு கையாளுகையில்
 முறையான ஒழுங்கீன்மை, நீண்ட நாட்களுக்கு பொருத்தமில்லாதவாறு உணவுகளை தேக்கி வைத்தல், சமையல் பாத்திரங்கள் மற்றும் சமையல் பொருட்களின் தரம் போன்றவற்றை சுகாதார முறைப்படி 
பேணுமாறும் ஆலோசனை வழங்கியதுடன் அறிவித்தல்களை பேணி நடக்காத உணவகங்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்திருந்ததுடன் எச்சரிக்கையும் விடுத்திருந்தார்.  
அதனை ஒட்டியதாக சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர் ஏ.எல்.எம். ஜெரின், காரியாலய உத்தியோகத்தர் எம்.எச்.எம். பிர்தௌஸ் உட்பட காரியாலய
 உத்தியோகத்தர்கள் சகிதம் சாய்ந்தமருது பிரதேச உணவு தயாரிக்கும், விற்பனை செய்யும் நிலையங்கள் மீது திடீர் பரிசோதனையும், முற்றுகையும் முன்னெடுத்திருந்தனர். 
இதன்போது  மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவுகள், பாவனைக்கு பொருத்தமற்ற எண்ணெய்கள் மற்றும் புற்றுநோயை உண்டாக்கும் தன்மை கொண்ட சுவையூட்டிகள், கலப்படம் செய்யப்பட்ட சுவையூட்டிகள் போன்ற பொருட்கள் கைப்பற்றப்பட்டன.  
மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற, முறையான களஞ்சிய வசதி இல்லாத மற்றும் பழுதடைந்த உணவுகளை வைத்திருந்தோர் மீது எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற மற்றும் பழுதடைந்த உணவுகள் கைப்பற்றப்பட்டது. 
அதே போன்று சில உணவகங்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்க தேவையான மேலதிக ஒழுங்குகளை சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் மேற்கொண்டுள்ளது.என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் சாய்ந்தமருதில் புற்றுநோயை உண்டாக்கும் சுவையூட்டிகள் கண்டுப்பிடிப்பு

நாட்டில் மரக்கறிகளின் விலைகள் வழமைக்கு மாறான குறைவடைந்துள்ளன

செவ்வாய், 16 ஏப்ரல், 2024

நாட்டில் பண்டிகைக் காலம் முடிவடையும் போது மரக்கறிகளின் விலைகளும் குறைவடைந்துள்ளன. பண்டிகைக் காலம் முடிவடையும் போது மரக்கறிகளின் விலைகள் அதிகரிப்பது வழக்கம். 
ஆனால் இந்த வருடத்தில் பண்டிகை காலம் முடிவடையும் போது மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 
 இதன்படி, கொழும்பு புறக்கோட்டையில்.16-04-2024. இன்று  250 கிராம் தக்காளி 40 ரூபாவாகவும், 250 கிராம் பீன்ஸ் 50 ரூபாவாகவும், 250 கிராம்
 வெண்டிக்காய் 50 ரூபாவாகவும், 250 கிராம் கரட் 100 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் மரக்கறிகளின் விலைகள் வழமைக்கு மாறான குறைவடைந்துள்ளன

வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வரும் டொலர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

திங்கள், 15 ஏப்ரல், 2024

நாட்டுக்கு வெளிநாட்டு ஊழியர்கள் அனுப்பும் பணம் கடந்த ஆண்டை விட 8.7 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி 
தெரிவித்துள்ளது.
 அதன்படி, இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை 1,536.1 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் பெறப்பட்ட வெளிநாட்டு ஊழியர்களின் பணம் 1,432.2 மில்லியன் டொலர்களாகும்.
 இதேவேளை, சுற்றுலா பயணிகளின் வருகையும் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 89.4 வீதத்தால் அதிகரித்துள்ளது.
 இதற்கமைய சுற்றுலா வருகையின் மூலம் கிடைத்த 
வருவாய் 1,025.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்பது குறிப்பிடத்தக்கது   

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வரும் டொலர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

வெளிமாகாணங்களுக்கு புத்புத்தாண்டை முன்னிட்டு சென்றவர்கள் கொழும்பு வர விசேட ரயில்

ஞாயிறு, 14 ஏப்ரல், 2024

நாட்டில்  புத்புத்தாண்டை முன்னிட்டு வெளி மாகாணங்களில் இருந்து கொழும்பு திரும்பும் மக்களுக்காக.14-04.2024. இன்று பிற்பகல் முதல் மேலதிக
 புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக 
ரயில்வே பிரதி பொது முகாமையாளர் திரு.நந்தன இண்டிபோலகே தெரிவித்தார்.
அதன்படி இன்றும் நாளையும் பதுளை, காலி மற்றும் பெலியத்த புகையிரத நிலையங்களில் இருந்து கொழும்பு கோட்டை வரை 8 மேலதிக புகையிரதங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இது தவிர நாளை மறுதினம் 16ஆம் திகதி முதல் அலுவலக ரயில் பயணங்கள் வழமை போன்று இடம்பெறும் என ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - வெளிமாகாணங்களுக்கு புத்புத்தாண்டை முன்னிட்டு சென்றவர்கள் கொழும்பு வர விசேட ரயில்

நாட்டின் ரூபா தொடர்பில் வெளியான மகிழ்ச்சியான செய்தி

சனி, 13 ஏப்ரல், 2024

நாட்டில் 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், இலங்கை ரூபாய் (LKR) உலகின் சிறந்த செயல்திறன் கொண்ட வளர்ந்து வரும் சந்தை நாணயமாக மாறியுள்ளது.
 இது ஆண்டின் தொடக்கத்தில் இருந்த பெறுமதியுடன் ஒப்பிடுகையில் 7% க்கும் அதிகமான வளர்ச்சியென Bloomberg சந்தை தரவு குறிகாட்டிகள் சுட்டிக்காட்டுகின்றன.
 ஜனாதிபதி ஊடக பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டின் ரூபா தொடர்பில் வெளியான மகிழ்ச்சியான செய்தி

நாட்டில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்

வெள்ளி, 12 ஏப்ரல், 2024

நாட்டில் இலங்கை மத்திய வங்கி அந்நிய செலாவணி சந்தையில் இருந்து மார்ச் 2024 இல் 715 மில்லியன் அமெரிக்க டொலர்களை கொள்வனவு செய்துள்ளதாக மத்திய வங்கி தரவுகள் தெரிவிக்கின்றன.
மேலும், பெப்ரவரி மாதத்தில் அந்நிய செலாவணி சந்தையில் இருந்து மத்திய வங்கி 239.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை கொள்வனவு
 செய்துள்ளது.
உத்தியோகபூர்வ தரவுகளின்படி, இந்த வருடத்தில் இதுவரை சந்தையிலிருந்து மத்திய வங்கி கொள்வனவு செய்த மொத்தத் தொகை 1,199 மில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





READ MORE - நாட்டில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்

நாட்டில் பதின் மூன்று மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்கள எச்சரிக்கை

வியாழன், 11 ஏப்ரல், 2024

நாட்டில் பதின் மூன்று மாவட்டங்களுக்கு அமுலுக்கு வரும் வகையில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  
அறிவிப்பின்படி,.11-04-2024. இன்று பிற்பகல் அல்லது இரவு வேளையில் பலத்த மின்னல் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இந்த எச்சரிக்கையானது மேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமேற்கு மாகாணங்களுக்கும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கும் அமுலாகும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
 குறித்த பிரதேசங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழையுடன் கூடிய பலத்த மின்னலுக்கான 
அதிக சாத்தியம் 
காணப்படுவதால், மின்னலினால் ஏற்படக்கூடிய விபத்துக்களை குறைப்பதற்கு 
தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு காலநிலை அதிகாரிகள் மக்களை கோருகின்றனர். 
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசும் என சுட்டிக்காட்டப்படுகிறது.என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் பதின் மூன்று மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்கள எச்சரிக்கை

நாட்டில் முட்டை மற்றும் மரக்கறிகளின் விலைகளில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்

புதன், 10 ஏப்ரல், 2024

நாட்டில் தமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தில் தேவையான உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அரிசி, காய்கறிகள், முட்டை, 
கோழி, இறைச்சி மற்றும் பழங்கள் தட்டுப்பாடின்றி வழங்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
 அத்தோடு, கடந்த மாதங்களில் வேகமாக அதிகரித்து வந்த மரக்கறிகளின் விலையும், தட்டுப்பாடும் தற்போது நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
 புத்தாண்டுக்கு முன்னர் ஒரு கிலோ கரட்டின் விலை 5,000 ரூபாவாக அதிகரிக்கும் என பலர் கூறிய போதிலும் தற்போது கரட் மட்டுமன்றி அனைத்துப் பொருட்களினதும் விலை குறைவடைந்துள்ளதாகவும்
 வலியுறுத்தியுள்ளார்.
 அதுமட்டுமன்றி மே மாதத்திற்கு முன்னர் முட்டையினது விலை 30 ரூபாவாக குறைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்
.என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் முட்டை மற்றும் மரக்கறிகளின் விலைகளில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்

இலங்கையில் அனைத்து பாடசாலைகளுக்கு நாளையுடன் விடுமுறை

செவ்வாய், 9 ஏப்ரல், 2024

இலங்கையில் 2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதல் தவணையின் முதற்கட்டம் நாளை நிறைவடையவுள்ளதாக கல்வி 
அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாத இணையம்.>>>



READ MORE - இலங்கையில் அனைத்து பாடசாலைகளுக்கு நாளையுடன் விடுமுறை

நாட்டில் கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளில் வெண் ஈ தாக்கம் அதிகரிப்பு

திங்கள், 8 ஏப்ரல், 2024

நாட்டில் கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளில் வெண் ஈ தாக்கம் அதிகரித்து காணப்படுவதாக தென்னை உற்பத்தியாளர்கள் 
தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில், பழைய வட்டக்கச்சி பகுதியில் தனியார் ஒருவரது தென்னந் தோப்பு வெண் ஈ தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 
அவரது வீட்டில் உள்ள பயன் தரும் வாழை, பூ மரங்கள், தோடை, எலுமிச்சையும் தாக்கத்துக்குள்ளாகியுள்ளதாக பண்ணையாளர் தெரிவிக்கின்றார்.
அத்துடன், நாளாந்தம் பயன்படுத்தும் தண்ணீரும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாகவும் வெண் ஈ தாக்கம் மிகவும் அதிகரித்துள்ளதாகவும், தரையில் வரும் புற்களில் கூட பரவி சுவாசிக்ககூட முடியாத நிலையில் வெண் ஈ தாக்கம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கின்றார்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அப்பகுதியில் நேரில் பார்வையிட்டு தமக்குரிய தீர்வினை பெற்று தர வேண்டும் எனவும் 
தெரிவித்துள்ளார்.
மேலும் இவ்வெண் ஈ தாக்கத்தின் காரணமாக தண்ணீர் மாசடைந்துள்ளதாகவும், அதனை பயன்படுத்துவதால் நோய் தாக்கம் ஏற்படலாம் என அச்சமும் வெளியிடுகின்றார்.
தமது கிணற்றில் உள்ள தண்ணீரை பலர் நாளாந்த தேவைக்காக பயன்படுத்தி வரும் நிலையில் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் எடுக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்டவர் தெரிவித்தார்.
என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளில் வெண் ஈ தாக்கம் அதிகரிப்பு

நாட்டில் சுந்தரபுரம் பகுதியில் சிறுவனை தாக்கிய ஆசிரியை கைது

ஞாயிறு, 7 ஏப்ரல், 2024

நாட்டில் வவுனியா, சுந்தரபுரம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் இரண்டில் கல்வி பயிலும் மாணவன் மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் குறித்த பாடசாலையில் கற்பிக்கும்
 ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளதாக ஈச்சங்குளம் பொலிசார் 
தெரிவித்தனர்.
வவுனியா, சுந்தரபுரம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 2 இல் கல்வி பயிலும் மாணவன் ஒருவன் கடந்த 03 ஆம் திகதி பாடசாலை
 முடிந்து வீட்டிற்கு சென்ற நிலையில், மாணவனின் முகத்திலும், 
தலையிலும்
 அடிகாயங்கள் காணப்பட்டதை அடுத்து பெற்றோர் மாணவனிடம் விசாரித்ததில் அவரது ஆசிரியை தாக்கியதாக தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து சிறுவனின் தந்தை குறித்த ஆசிரியருக்கு
 தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு சிறுவனை தாக்கியதற்கான காரணம் என்ன மற்றும் காலிற்கு கீழ் அடித்து இருக்கலாமே என்றும்
 தெரிவித்துள்ளார்.
இதற்கு பதில் அளித்த ஆசிரியை ‘உங்கள் மகனுக்கு அ, ஆ தெரியவில்லை என்றும் அதனாலேயே அடித்தது என்றும் அடிக்கும் போது சிறுவன் அங்கும் இங்கும் ஓடியதால் முகத்தில் அடிபட்டுவிட்டது என்று 
கூறியதுடன், மகனுக்கு அடிக்காமல் கொஞ்சுவதா? என 
ஆசிரியர் கேட்டுள்ளார்.
கோபமடைந்த பெற்றோர் காயமடைந்த மாணவனை வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை வழங்கியதுடன், பொலிஸாரிடமும் முறைப்பாடு செய்தனர்.
இந்நிலையில் தாக்குதல் இடம்பெற்று நான்கு நாட்களின் பின்னர் வவுனியா, ஈச்சங்குளம் பொலிஸார் குறித்த ஆசிரியரை கைது செய்துள்ளனர். மேலதிக விசாரணைகளின் பின்னர் குறித்த ஆசிரியரை
 நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். 
 இதேவேளை, இச் சம்பவம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவினர், மாவட்ட சிறுவர் பாதுகாப்பு பிரிவினர், வட மாகாண கல்வி திணைக்களத்தினர், வவுனியா வடக்கு கல்வி வலயத்தினர் ஆகியோரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


READ MORE - நாட்டில் சுந்தரபுரம் பகுதியில் சிறுவனை தாக்கிய ஆசிரியை கைது