யாழ்ப்பாணம் - அச்சுவேலி பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டனர். இதன்போது வீட்டின் கண்ணாடிகள் மற்றும் வேனும் சேதமாக்கப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது
அச்சுவேலி -பத்தமேனி பகுதியில் உள்ள வீட்டிலேயே குறித்த
சம்பவம் 27-04-2024.அன்று இரவு இடம்பெற்றுள்ளது. வன்முறையில் காயமடைந்த 70 வயதான முதியவர் சிகிச்சைக்காக
அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில்
சேர்க்கப்பட்டுள்ளார்.
தொழில் போட்டியே வன்முறைக்கு காரணம் என சந்தேகிக்கும் அச்சுவேலி பொலிஸார்,சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.என்பது குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக