யாழ் வல்லை பாலத்தில் இருந்து நீரேரிக்குள் தவறி விழுந்தவரை தேடும் பணிகள் தொடர்கின்றன

புதன், 23 நவம்பர், 2022

 யாழ் அச்சுவேலி  காவல்துறைபபிரிவுக்குட்பட்ட வல்லைப் பாலத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இளைஞரொருவர் நீரேரியில் தவறி விழுந்து காணாமல் போயுள்ள நிலையில் அவரைத் தேடும் பணி இடம்பெற்று வருகிறது. புத்தூர் கலைமதி கிராமத்தை சேர்ந்த பாஸ்கரன் லக்ஸன் (வயது 19) எனும் இளைஞனே காணாமல் போயுள்ளார்.
குறித்த இளைஞரும் அவரது நண்பர்கள் சிலரும் இணைந்து வல்லை பாலத்தில்.22-11-2022.அன்றயதினம் செவ்வாய்க்கிழமை 
மாலை வேளையில் தூண்டில் போட்டு மீன் பிடியில் ஈடுபட்டுள்ளனர்.  அதன் போது இளைஞன் 
பாலத்தில் இருந்து நீரேரிக்குள் தவறி விழுந்துள்ள நிலையில் இளைஞரைத் தேடும் பணியில் அச்சுவேலிகாவல்துறையினரும் பொதுமக்களும் இணைந்து ஈடுபட்டுள்ளனர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக