நாட்டில் அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை

வெள்ளி, 11 நவம்பர், 2022

இலங்கையில் வாசனைத் திரவியங்கள் உள்ளிட்ட அழகு சாதனப் பொருட்கள் பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை 
விடுக்கப்பட்டுள்ளது. 
தோல் மருத்து நிபுணர் வைத்தியர் நயனி மதரசிங்க இது குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். 
வாசனை திரவியங்களை இறக்குமதி செய்வதற்கான சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமையினால் நச்சு அழகுசாதனப் பொருட்கள் மற்றும் வாசனைத் திரவியங்கள் சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படுவதாக அவர் 
குறிப்பிட்டுள்ளார்.
நச்சு அழகுசாதனப் பொருட்கள் உள்ளூர் சந்தையில் இந்த நச்சு அழகுசாதனப் பொருட்கள் உள்ளூர் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக வைத்தியர் நயனி மதரசிங்க தெரிவித்துள்ளார்.
தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தில் (NMRA) பதிவு செய்யப்படாத தோல் பராமரிப்புப் பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம் 
ஏராளமான தோல் நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், அங்கீகரிக்கப்பட்ட உற்பத்திகளை மாத்திரம் கொள்வனவு செய்யுமாறு அவர் பொதுமக்களை 
பரிந்துரைத்துள்ளார்.
மருந்துகள் மற்றும் வாசனைத் திரவியங்கள் நுழைவதை நிர்வகிக்கும் சட்டம் திருத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.  
பல பொருட்களால் தோலை அதிகமாக கழுவினால், நல்ல பக்டீரியாக்கள் அழிக்கப்படும் என்றும் வைத்தியர் 
வலியுறுத்தினார். 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>
0 கருத்துகள்:

கருத்துரையிடுக