நாட்டில் கடவுச்சீட்டு தற்காலிக இடைநிறுத்தம்; குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்

செவ்வாய், 8 நவம்பர், 2022

கடவுச்சீட்டு வழங்குவதை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் 
அறிவித்துள்ளது.
பத்தரமுல்லையில் உள்ள அதன் பிரதான அலுவலகம் மற்றும் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பிராந்திய அலுவலகங்களிலும் கடவுச்சீட்டு வழங்குவது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக திணைக்களம் 
தெரிவித்துள்ளது.
பாஸ்போர்ட் வழங்குவது தொடர்பான அதன் கணினி அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மறு அறிவித்தல் வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>0 கருத்துகள்:

கருத்துரையிடுக