புதுக்குடியிருப்பு மந்திகை பகுதியில் திருடர்கள் ஐவர் மடக்கிப் பிடிக்கப்பட்டு நையப்புடைப்பு

செவ்வாய், 29 நவம்பர், 2022

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு மந்திகை பகுதியில் திருடர்கள் ஐவர் மடக்கிப் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டுள்ளனர்.
இன்று அதிகாலை 2 மணி அளவில் திருடுவதற்காக இவர்கள் வருகை தந்து வீடு ஒன்றினை உடைக்க முற்பட்டபோது அந்த வீட்டுக்காரர்கள் சத்தமிட்டதைத் தொடர்ந்து அவ்விடத்தில் ஒன்று 
கூடிய அப்பகுதி
 மக்கள் மற்றும் இளைஞர்களால் மூன்று பேர் பிடிக்கப்பட்டார்கள்.
அதனைத் தொடர்ந்து இளைஞர்கள் தொடர்ச்சியாக தேடி மாலை வேளை ஒருவரையும், தற்போது ஒருவரையும் 
பிடித்துள்ளனர்.
இறுதியாக பிடிக்கப்பட்ட நபரை புதுக்குடியிருப்பு நகர் பகுதிக்கு அழைத்து, வந்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
தொடர்ந்த இடம்பெறும் திருட்டு மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கக்கு இனி வரும் காலங்களில் மக்கள் இவ்வாறான தண்டனைகளையே வழங்குவார்கள் என அப்பகுதி இளைஞர்கள் 
தெரிவித்துள்ளனர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>0 கருத்துகள்:

கருத்துரையிடுக