இலங்கையில் முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு திய அறிவிப்பு

புதன், 2 நவம்பர், 2022

முச்சக்கரவண்டிகளுக்கான எரிபொருளின் அளவை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் இதற்கான இணையதள முகவரியொன்று தற்போது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றது.
www.wptaxi.lk என்ற இணையதள முகவரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
முச்சக்கரவண்டிகளுக்கு தற்போது வழங்கப்படும் 5 லிட்டர் எரிபொருளை எதிர்வரும் காலங்களில் 10 லிட்டர் வரை அதிகரிப்பதற்கு கடந்த காலத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் மேல் மாகாணத்திலிருந்து ஆரம்பிப்பதற்கு போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை எடுத்திருப்பதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்திருக்கின்றார்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>0 கருத்துகள்:

கருத்துரையிடுக