கட்டைக்காடு முள்ளியானில் பெண் ஒருவர் கசிப்புடன் கைது

திங்கள், 21 நவம்பர், 2022

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பொலிஸ் பிரிவிட்குட்பட்ட கட்டைக்காடு முள்ளியானில் பெண் ஒருவர் கசிப்புடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது சம்பவம்21-11-2022  இன்றையதினம் இடம்பெற்றுள்ளது.
வேறொரு விசாரணைக்காக குறித்த பெண்ணின் வீட்டிற்கு பொலிஸார் சென்றவேளை கசிப்பு விற்றுக் கொண்டிருந்ததை பொலிஸார் அவதானித்துள்ளனர்.
இதன்போது அவர் 10 போத்தல் கசிப்புடன் குறித்த பெண் மருதங்கேணி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண்ணினை நாளையதினம் (21-11-2022) நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் 
தெரிவித்துள்ளனர்.
அந்த பிரதேசத்தில் நீண்ட காலமாக குறித்த பெண் கசிப்பு விற்று வந்ததாகவும், பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் குறித்த பெண் பலமுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டும் கசிப்பு தொழிலை கைவிடவில்லை என அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.
 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>0 கருத்துகள்:

கருத்துரையிடுக