பொய் பேசுவதில் இந்த ராசிக்காரர்கள் கில்லாடிகளாம்

ஞாயிறு, 25 ஜூலை, 2021

பொய் கூறுவது ஒரு கலை என்றால் அதில் கில்லாடிகளாக இருப்பார்கள் சில ராசிக்காரர்கள். அவர்கள் கூறுவதே பொய் என்று தெரியாத அளவிற்கு பொய் பேசுவார்கள்.அனைவருமே ஏதாவதொரு 
சந்தர்ப்பத்தில் பொய்
கூறியிருப்பார்கள். அப்படி பொய் கூறுவது ஒரு கலை என்றால் அதில் கில்லாடிகளாக இருப்பார்கள் சில
ராசிக்காரர்கள். அவர்கள் கூறுவதே பொய் என்று தெரியாத அளவிற்கு பொய் பேசுவார்கள். அப்படி என்று பார்க்கலா
மிதுனம் : மிதுன ராசி கொண்டவர்கள் எந்த சூழ்நிலையையும் சமாளித்துவிடும் திறமைக் கொண்டவர்கள். இவர்களுக்கு நல்ல பேச்சுத் திறமை இருக்கும் என்பதால் அதை வைத்தே பலரது மனங்களை கவ்விவிடுவார்கள். இவர்கள் ஒரு விஷயத்தை திரித்து பொய்க் கூறுவதில் மாஸ்டர் டிகிரி செய்தவர்கள். அதேபோல் அவர்கள் நேரடியாகப் பொய் கூறாமல் உண்மையிலேயே பொய்யைக் கலந்து நம்பும்படியாக
 பொய் பேசுவார்கள்
துலாம் : இவர்கள் நல்ல விஷயங்களுக்காக மட்டுமே பொய் கூறுவார்கள். ஆனால் அது யாராலும் கண்டு பிடிக்க முடியாத அளவிற்கு சமாளித்து மலையேறுவதில் கெட்டிக்காரர்கள். மற்றவர்களுக்கு உதவ
 வேண்டும், நல்லது செய்ய வேண்டும், நன்மை என்பதன் அடிப்படையில் நேர்மை, உண்மையை மறைத்து பொய் கூறுவதில் தப்பு 
இல்லை என்று நினைப்பவ
ர்கள். எனவே இவர்களை சூழ்நிலைகள்தான் அடுக்கடுக்காக 
பொய் பேச வைக்கும்
விருச்சிகம் : இவர்கள் பொய் கூறுவதில் ஸ்மார்டாக நடந்துகொள்வார்கள். குறிப்பிட்ட சூழ்நிலையிலிருந்து தப்பிக்க பொய் கூறி தப்பிப்பார்கள். அதில் சில உண்மைகளும் இருக்கும். பொய் கூறுவதையும் நம்பிக்கையுடன் கூறுவார்கள். அதேபோல் மற்றவர்கள் பொய் கூறினாலும் அதை எளிதில் 
கண்டுபிடித்து விடுவார்கள்
இவர்களிடம் பொய் கூறி தப்பிப்பது கடினம்.மற்ற ராசிக்காரர்கள் பொய் சொல்ல மாட்டார்கள் என்று சொல்லவில்லை. இவர்களை போல் திறமையாக பொய் சொல்ல மாட்டார்கள் அவ்வளவு தான்.-

நிலாவரை.கொம் செய்திகள் >>>

 
READ MORE - பொய் பேசுவதில் இந்த ராசிக்காரர்கள் கில்லாடிகளாம்

நாட்டில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

செவ்வாய், 20 ஜூலை, 2021

நாட்டின் சில பகுதிகளில் காற்று அதிகரித்து வீசக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய, மத்திய மலைநாட்டில் கடும் காற்று வீசக்கூடும் என
 குறிப்பிடப்பட்டுள்ளது
அத்துடன், வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் கடும் காற்று வீசக்கூடும் என அந்த திணைக்களம் 
தெரிவித்துள்ளது
இதேவேளை, காலி முதல் மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பகுதி, இடைக்கிடையே 
கொந்தளிப்பாக காணப்படும்
இதனால் அந்த பகுதியில் உள்ள கடற்றொழிலாளர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் முன் எச்சரிக்கை விடுத்துள்ளது

நிலாவரை.கொம் செய்திகள் >>>READ MORE - நாட்டில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

நாட்டில் 94 வயதில் சாதனை செய்த பெண்மணி.வியக்க வைக்கும் சுவாரசியமான தகவல்

செவ்வாய், 13 ஜூலை, 2021

இலங்கையில் நடந்த பாலி மொழி பரீட்சையில் 94 வயதுடைய மூதாட்டி ஒருவர் சித்தியைடைந்துள்ளார்.94 வயதுடைய எஸ்லின் லீலாவத்தி தர்மரத்ன என்ற 4 பிள்ளைகளின் தாய் ஒருவரே இந்த பரீட்சையில் உயர் சித்தி பெற்றுள்ளார்.
கடந்த பெப்ரவரி மாதம் 6ஆம் திகதி கண்டி டீ.எஸ்.சேனாநாயக்க பல்கலைக்கழகத்தில் பரீட்சை எழுதிய அவர் ஆரம்பம், மத்திய மற்றும் இறுதி ஆகிய மூன்று பிரிவு உயர் சித்தி பெற்றுள்ளார். மேலும் அவர் தற்போது பட்டம் பெறுவதற்கும் தயாராகியுள்ளார் என 
தெரிவந்துள்ளது.
4 பெண் பிள்ளைகளின் தாயான அவர் 94 வயதிலும் மூக்கு கண்ணாடி எதுவும் அணியாமல் பரீட்சை வினாத்தாள்களுக்கு பதில் எழுதியுள்ளார்.திருமணமாகி 7 வருடங்களில் கணவர் உயிரிழந்துள்ளார். எனினும் தனி பெண்ணான நின்று தனது 4 பெண் பிள்ளைகளையும் படிக்க வைத்துள்ளார். நான்கு பேரும் பட்டதாரிகளாக்கும் வரை அவர்
 போராடியுள்ளார்.
குறித்த பெண்மனியின் மூத்த மகள் மேல் மாகாண சுகாதார பணிப்பாளராக செயற்பட்டு வருகின்றார். இரண்டாவது மகள் அவுஸ்திரேலிய பல்கலைக்கழகத்தில் போராசிரியராக செயற்பட்டு வருகின்றார். மூன்றாவது மகன் போராதனை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று நாவலப்பிட்டிய பாடசாலை ஒன்றில் பேராசிரியராக செயற்பட்டு வருகின்றார். நான்காவது மகள் பதில் நீதவானாக செயற்பட்டு வருகிறார்.
பரீட்சை முடிவுகள்
வருவதற்கு முன்னரே தான் சித்தியடைந்ததனை அறிந்திருந்த தாய் பட்டம் பெறுவதற்கான ஏனைய கற்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார் என மூன்றாவது மகள் தெரிவித்துள்ளார்.சர்வதேச அளவில் அதிக வயதில் உத்தியோகபூர்வ பரீட்சை எழுதிய நபர்களில் முதல் 10 பேருக்குள் அவர் இடம்பிடித்துள்ளார். நாடளாவிய ரீதியில் முதலிடத்தையும்
 பெற்றுள்ளார்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>READ MORE - நாட்டில் 94 வயதில் சாதனை செய்த பெண்மணி.வியக்க வைக்கும் சுவாரசியமான தகவல்