நாட்டில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

செவ்வாய், 20 ஜூலை, 2021

நாட்டின் சில பகுதிகளில் காற்று அதிகரித்து வீசக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய, மத்திய மலைநாட்டில் கடும் காற்று வீசக்கூடும் என
 குறிப்பிடப்பட்டுள்ளது
அத்துடன், வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் கடும் காற்று வீசக்கூடும் என அந்த திணைக்களம் 
தெரிவித்துள்ளது
இதேவேளை, காலி முதல் மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பகுதி, இடைக்கிடையே 
கொந்தளிப்பாக காணப்படும்
இதனால் அந்த பகுதியில் உள்ள கடற்றொழிலாளர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் முன் எச்சரிக்கை விடுத்துள்ளது

நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக