இலங்கையில் நடந்த பாலி மொழி பரீட்சையில் 94 வயதுடைய மூதாட்டி ஒருவர் சித்தியைடைந்துள்ளார்.94 வயதுடைய எஸ்லின் லீலாவத்தி தர்மரத்ன என்ற 4 பிள்ளைகளின் தாய் ஒருவரே இந்த பரீட்சையில் உயர் சித்தி பெற்றுள்ளார்.
கடந்த பெப்ரவரி மாதம் 6ஆம் திகதி கண்டி டீ.எஸ்.சேனாநாயக்க பல்கலைக்கழகத்தில் பரீட்சை எழுதிய அவர் ஆரம்பம், மத்திய மற்றும் இறுதி ஆகிய மூன்று பிரிவு உயர் சித்தி பெற்றுள்ளார். மேலும் அவர் தற்போது பட்டம் பெறுவதற்கும் தயாராகியுள்ளார் என
தெரிவந்துள்ளது.
4 பெண் பிள்ளைகளின் தாயான அவர் 94 வயதிலும் மூக்கு கண்ணாடி எதுவும் அணியாமல் பரீட்சை வினாத்தாள்களுக்கு பதில் எழுதியுள்ளார்.திருமணமாகி 7 வருடங்களில் கணவர் உயிரிழந்துள்ளார். எனினும் தனி பெண்ணான நின்று தனது 4 பெண் பிள்ளைகளையும் படிக்க வைத்துள்ளார். நான்கு பேரும் பட்டதாரிகளாக்கும் வரை அவர்
போராடியுள்ளார்.
குறித்த பெண்மனியின் மூத்த மகள் மேல் மாகாண சுகாதார பணிப்பாளராக செயற்பட்டு வருகின்றார். இரண்டாவது மகள் அவுஸ்திரேலிய பல்கலைக்கழகத்தில் போராசிரியராக செயற்பட்டு வருகின்றார். மூன்றாவது மகன் போராதனை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று நாவலப்பிட்டிய பாடசாலை ஒன்றில் பேராசிரியராக செயற்பட்டு வருகின்றார். நான்காவது மகள் பதில் நீதவானாக செயற்பட்டு வருகிறார்.
பரீட்சை முடிவுகள்
வருவதற்கு முன்னரே தான் சித்தியடைந்ததனை அறிந்திருந்த தாய் பட்டம் பெறுவதற்கான ஏனைய கற்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார் என மூன்றாவது மகள் தெரிவித்துள்ளார்.சர்வதேச அளவில் அதிக வயதில் உத்தியோகபூர்வ பரீட்சை எழுதிய நபர்களில் முதல் 10 பேருக்குள் அவர் இடம்பிடித்துள்ளார். நாடளாவிய ரீதியில் முதலிடத்தையும்
பெற்றுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக