யாழில் தனது காணியை விற்ற பணம் ஒரு கோடியே 5 லட்ச ரூபாய் பணத்துடன் வீடு திரும்பிக்கொண்டிருந்த நபரை தாக்கி விட்டு பணத்தை இருவர் கொள்ளையடித்து சென்ற குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சங்குவேலி பகுதியை சேர்ந்த நபர் ஒருவர், தற்போது வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில், அண்மையில் யாழ்ப்பாணம் வந்திருந்தார். அவர் புதன்கிழமை (02) தனது காணியை விற்ற பணத்துடன் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிள் ஒன்றில் பின்தொடர்ந்து வந்த இருவர் அவரை வீதியில் வழிமறித்து அவரை தாக்கி விட்டு பணம் , கடவுச்சீட்டு , இலட்ச ரூபாய் பெறுமதியான கையடக்க தொலைபேசி என்பவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
பணத்தினை பறிக்கொடுத்தவர், மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
அதன் அடிப்படையில், சந்தேகநபர்கள் ஊரெழு பகுதியில் மறைந்திருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இருவரை
கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம் , கையடக்க தொலைபேசி உள்ளிட்டவற்றையும் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் இருவரையும் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
என்பது குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக