இலங்கையில் தேசிக்காய் ஒன்றின் விலை 30 ரூபா முதல் 58 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டதாக தகவல்கள்
வெளியாகியுள்ளன.
மாத்தளை உள்ளிட்ட சில பகுதிகளில் தேசிக்காய் ஒன்றின் விலை 30 ரூபா முதல் 38 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டுள்ளதுடன்,
நுவரெலியா உள்ளிட்ட பெருந்தோட்ட பகுதிகளில் தேசிக்காய்
ஒன்றின் விலை 58 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன.
இதேவேளை, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோகிராம் தேசிக்காயின் விலை 1200 ரூபாவாக
பதிவாகியுள்ளது.
ஊவா மற்றும் வரட்சியுடனான பகுதிகளிலேயே தேசிக்காய் செய்கை அதிகளவில் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும்,
தம்புள்ளை
பொருளாதார மத்திய நிலையத்திற்கு 17-09-2023.அன்றய தினத்தில் 2000 கிலோகிராம் தேசிக்காய் மாத்திரமே கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
.என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக