கொழும்பில் உள்ள சீதாவக்க, களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய மற்றும் கேகாலை மாவட்டத்தில் யட்டியந்தோட்டை பிரதேசங்களுக்கு முதல் கட்டத்தின் கீழ் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
கேகாலையில் தெஹியோவிட்ட மற்றும் தெரணியகல செயலகப் பிரிவுகளுக்கு இரண்டு கட்டங்களின் கீழ் மண்சரிவு எச்சரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தின் நிவித்திகல, எஹெலியகொட, குருவிட்ட, கிரியெல்ல, இரத்தினபுரி, அலபாத, கலவான, பெல்மதுல்ல
மற்றும் அயகம பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் முதல் கட்டத்தின் கீழ் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இலங்கையில் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.என்பதும் குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக