வெளிநாட்டுக்கு சட்டவிரோதமான முறையில் வெளிநாடு செல்ல முயற்சித்த இரு இளைஞர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
தரகர் ஒருவரால் தயாரிக்கப்பட்ட விசாக்களை பயன்படுத்தி ஒஸ்ரியா செல்ல முயன்ற இரு இளைஞர்களே இவ்வாறு கைது
செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இரு இளைஞர்களும் கிளிநொச்சி மற்றும் முள்ளிவாய்க்கால் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் பொரளை
பிரதேசத்தில்
உள்ள தரகர் ஒருவர் அவர்கள் தொடர்பான ஆவணங்களை தயாரித்துள்ளதாகவும் விசாரணையின் போது
தெரியவந்துள்ளது.
துருக்கி ஏர்லைன்ஸ் விமானம் TK 731 இல் அவர்கள் புறப்பட வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.என்பதும் குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக