மேற்கு மத்திய வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழமுக்கம் உருவாகக் கூடும் என:எச்சரிக்கை

புதன், 15 நவம்பர், 2023

மேற்கு மத்திய வங்கக் கடல் பகுதியில் 16-11-2023.நாளைய . தினம் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, மத்திய வங்கக் கடலில் பயணிக்கும் பல நாள் மீன்பிடி படகுகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பகுதியை சுற்றி அந்தமான் நிக்கோபாரை ஒட்டியுள்ள பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்.15-11-2023. இன்று உருவாகிய நிலையில், இது நாளையதினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு  மண்டலமாக உருமாறும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது. 
இதனால் கடற்பரப்புகளில் மணிக்கு 50-60 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும், கனமழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்வரும் அறிவிப்புகள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு கடற்றொழில் மற்றும் கடல்சார் சமூகங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக